3500 கோடி கடன் எங்கே..? Arcelor Mittal நிறுவனத்தை எதிர்த்து Standard chartered வங்கி வழக்கு..!

By நமது நிருபர்
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: Arcelor Mittal நிறுவனம் இந்தியாவில் இருக்கும் Essar Steel நிறுவனத்தை வாங்கத் தடை விதித்திருக்கிறது உச்ச நீதிமன்றம். அதோடு Essar Steel நிறுவனத்தின் கடனைத் திருப்பிச் செலுத்த முடியாத நிலை குறித்தும் விளக்கம் கேட்டிருக்கிறது.

 

அதோடு தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயமே இதற்கு விரைவாக ஒரு நல்ல வழியைச் சொல்லச் சொல்லியும் அறிவுருத்தி இருக்கிறது.

இதனால் 42,000 கோடி ரூபாய் செலுத்தி Essar Steel நிறுவனத்தை கையகப்படுத்த துடித்துக் கொண்டிருக்கும் Arcelor Mittal நிறுவனத்தின் கனவு தள்ளிப் போடப் பட்டிருக்கிறது.

மீண்டும் விலை உயரும் அபாயம்.. கச்சா எண்ணேய் விலை மீண்டும் ஏறலாம்.. குழப்பத்தில் வாடிக்கையாளர்கள்

இது தான் விஷயம்

இது தான் விஷயம்

தேசிய நிறுவன சட்டத் தீர்ப்பாயம் (National company Law Appellate Tribunal - NCLAT)Arcelor Mittal நிறுவனம் எஸ்ஸார் நிறுவனத்தை வாங்குவதற்கு சம்மதித்தது. அதோடு Arcelor Mittal நிறுவனம் சொன்ன விலைகளுக்கு எஸ்ஸார் நிறுவனத்தை விற்கும் திட்டத்துக்கும் சம்மதம் தெரிவித்தது என்சிஎல்ஏடி.

இது தான் ப்ளான்

இது தான் ப்ளான்

கடந்த இரண்டு வருடங்களுக்கு மேல் போராடி ஒருவழியாக இந்த டீலுக்கு ஓகே வாங்கியது Arcelor Mittal. Arcelor Mittal திட்டப்படி எஸ்ஸார் நிறுவனத்தை வாங்க 42,000 கோடி ரூபாய் கொடுக்கும். இந்த 42,000 கோடி ரூபாயில் தான் எஸ்ஸார் நிறுவனத்துக்கு பல்வேறு வங்கிகள் கொடுத்த கடன்களைச் சரி கட்டிக் கொள்ள வேண்டும். நிறுவனத்தின் பங்குகளை கொடுக்க வேண்டும், ஏற்கனவே எஸ்ஸார் நிறுவனம் கடன் பட்டிருக்கும் அனைத்து பிசினஸ் கடனாளிகளுக்கும் (Operational Creditor) கடனைப் பிரித்து அடைத்து விட வேண்டும்... என எல்லாமே இந்த 42,000 கோடி ரூபாயில் அடங்கும்.

கடன் கொடுத்தவர்கள் கூட்டம்
 

கடன் கொடுத்தவர்கள் கூட்டம்

சரி எல்லாம் சுபமாக முடிகிறது என எஸ்ஸார் நிறுவனத்துக்கு கடன் கொடுத்த வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் அனைத்தும் ஒன்று சேர்ந்து ஒரு Committee of Creditors கூட்டம் நடத்தினார்கள். இந்த கூட்டத்தில் என்சிஎல்ஏடி-யும் ஒரு அறிவுரை கொடுத்தது. அதன் படி Arcelor Mittal கொடுக்கும் 42,000 கோடி ரூபாயில் ஸ்டாண்டர்ட் சாட்டர்ட் வங்கிக்கு ஒரு குறிப்பிட்ட தொகையை ஒதுக்கச் சொல்லி இருக்கிறார்கள். அதற்கு Committee of Creditors மறுத்துவிட்டார்கள்.

3500 கோடி நஷ்டம்

3500 கோடி நஷ்டம்

இதை எதிர்த்து தான் ஸ்டாண்டர்ட் சாட்டர்ட் வங்கி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருக்கிறது. "எங்கள் வங்கிக்கு எஸ்ஸார் நிறுவனம் 3500 கோடி ரூபாய் கடன் பாக்கி செலுத்த வேண்டி இருக்கிறது. புதிதாக எஸ்ஸார் நிறுவனத்தை வாங்க வரும் அர்சிலர் மித்தலிடம் இந்த கடனை வாங்கவில்லை என்றால் வேறு யாரிடம் வாங்குவது. என்சிஎல்ஏடி அமைப்பினர் ஸ்டாண்டர்ட் சாட்டர்ட் வங்கிக்கு சாதகமாகச் சொன்ன அறிவுரைகளையும் Committee of Creditors கேட்கவில்லை. எங்களுக்கு எதிராக நடந்து கொள்கிறார்கள். எனவே எங்களுக்கு வர வேண்டிய 3500 கோடி ரூபாயில் ஒரு பெரும் பகுதி எங்களுக்கும் திரும்ப கிடைக்கும் விதத்தில் வழி வகை செய்யுவும்" என வாதாடுகிறது ஸ்டாண்டர்ட் சாட்டார்ட் வங்கி.

இதற்கு தான் உச்ச நீதிமன்றம் ஆர்சிலர் மித்தல் நிறுவனம், எஸ்ஸார் நிறுவனத்தை வாங்கும் திட்டத்துக்கு தடை விதித்து மீண்டும் ஒரு நல்ல முடிவுக்கு வருமாறு என்சிஎல்ஏடி-யை அறிவுறுத்தி இருக்கிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

standard chartered bank filed a case against arcelor mittal to pay loan dues 3500 crore

standard chartered bank filed a case against arcelor mittal to pay loan dues 3500 crore
Story first published: Friday, April 12, 2019, 14:29 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X