நல்ல விஷயம்தானே..இந்திய ஏற்றுமதி அதிகரிப்பு.. குஷியில் ஏற்றுமதியாளர்கள்

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி : இந்தியாவின் ஏற்றுமதி வளர்ச்சி கடந்த மார்ச் மாதத்தில் 11 சதவிகிதம் அளவுக்கு ஏற்றம் கண்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதேசமயம் வர்த்தக பற்றாக்குறை குறைந்துள்ள கவனிக்கதக்கதாகும்.

 

இது குறித்து மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில், மத்திய அரசு நடப்பு ஆண்டு மார்ச் மாதத்தில் பார்மா, கெமிக்கல், இன் ஜினியரிங் துறைகளில் ஏற்றுமதி 11 சதவிகிதம் அளவுக்கு ஏற்றம் கண்டுள்ளது. இதன் மதிப்பு சுமார் 43.44 பில்லியன் டாலர்களாகும். அதே சமயம் வர்த்தகப் பற்றாக்குறை 10.89 பில்லியன் டாலர்களாக குறைந்துள்ளது. இது கடந்த ஆண்டு இதே மாதத்தில் 13.51 பில்லியன் டாலர்களாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

கடந்த மார்ர் 2019ல் தங்கம் இறக்குமதி 31.22 சதவிகிதம் அதிகரித்து 3.27 பில்லியன் டாலர்களாக அதிகரித்துள்ளது. மேலும் எண்ணெய் இறக்குமதி 5.55 சதவிகிதம் அதிகரித்து 11.75 பில்லியன் டாலர்களாக அதிகரித்துள்ளது. இது முந்தைய ஆண்டு இதே காலாத்தோடு ஒப்பிடும்போது இது அதிகமாகும்.

எச்சரிக்கை வளர்ந்து வரும் தொழினுட்பங்கள் பாதுகாப்புக்காகவே.. அது மக்களை அழிக்க அல்ல..மைசர்க்கிள் ஆப்

வர்த்தக பற்றாக்குறையும் அதிகரித்துள்ளது

வர்த்தக பற்றாக்குறையும் அதிகரித்துள்ளது

இதுவே 2018 - 2019ம் நிதியாண்டில் ஏற்றுமதி 9 சதவிகிதம் அதிகரித்து 331 பில்லியன் டாலர்களாக அதிகரித்துள்ளது. அதேசமயம் இறக்குமதி 8.99 சதவிகிதம் அதிகரித்து 507.44 பில்லியன் டாலர்களாக அதிகரித்துள்ளது. இதே காலத்தில் நாட்டின் வர்த்தக பற்றாக்குறை 176.42 பில்லியன் டாலர்களாக அதிகரித்துள்ளது. இதுவே கடந்த நிதியாண்டில் 2017 - 2018ல் 162 பில்லியன் டாலர்களாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

சவாலான விஷயமே

சவாலான விஷயமே

கடந்த மூன்று நிதியாண்டுகளில் ஏற்பட்ட மோசமான பொரூளாதார வளர்ச்சி காரணமாக ஏற்றுமதி வளர்ச்சி 331.02 பில்லியன் டாலர்களாக இருக்கும் என்று ஏற்கனவே மதிப்பிடப்பட்ருந்தது. கடந்த 2013 -2014ம் நிதியாண்டில் 314.4 பில்லியன் டாலர்களாக ஏற்றுமதி இருந்தது. இதற்கு பின்னர் கடந்த 2018ல் தான் இதன் வளர்ச்சியை விட அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இது உலக அளவில் நிலவி வரும் மோசமான பொருளாதார சூழ் நிலையில் இத்தகைய வளர்ச்சி சவாலான ஒருவிஷயமாகுமே என்று ஏற்கனவே வர்த்தக அமைச்சகம் ஒரு குறிப்பில் வெளியிட்டிருந்தது கவனிக்க தக்கது.

குறிப்பிட்ட துறைகள் வளர்ச்சி
 

குறிப்பிட்ட துறைகள் வளர்ச்சி

கடந்த நிதியாண்டில் மட்டும் பெட்ரோலியம் துறை 28 சதவிகிதம் வளர்ச்சியும், பிளாஸ்டிக் துறை 25.6 சதவிகித வளர்ச்சியும், கெமிக்கல் துறை 22 சதவிகித வளர்ச்சியும், மருந்துகள் 11 சதவிகித வளர்ச்சியும், பொறியியல் துறை 6.36 சதவிகித வளர்ச்சியும் அடைந்துள்ளன.

ஆயில் இறக்குமதி அதிகரிப்பு

ஆயில் இறக்குமதி அதிகரிப்பு

கடந்த ஏப்ரல் - மார்ச் 2018 - 2019ல் ஆயில் இறக்குமதி 29.27 சதவிகிதம் அதிகரித்து 140.47 பில்லியன் டாலர்களாக அதிகரித்துள்ளது. அதேசமயம் எண்ணெய் அல்லாத இறக்குமதி பொருட்களின் இறக்குமதி 2.82 அதிகரித்து 366.97 பில்லியன் டாலர்களாகவும் அதிகரித்துள்ளது கவனிக்கதக்க விஷயமாகும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

India's export growth 11% in last march 2019

India’s exports rose to a five-month high of 11% in March on account of higher growth mainly in pharma, chemicals and engineering sectors, marking the shipments at $331 billion for FY 2018-19. At that same time Merchandise exports in March stood at $32.55 billion as against $29.32 billion in the same month last year.
Story first published: Tuesday, April 16, 2019, 10:59 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X