பிட்காயின் டிரேடருக்கு இப்படியொரு தண்டனையா..கடலுக்குள் வீடா.. இதுக்கு மரண தண்டனையா

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பாங்காக் : அமெரிக்காவை சேர்ந்த சட் எல்வர்டோஸ்கி என்பவரும் தாய்லாந்தை சேர்ந்த சுப்ரானே தெப்ஃபெட் இருவரும் காதலர்கள். இந்த இருவரும் பிறப்பிலேயே பரம்பரை கோடீஸ்வரர்கள் என்பதால் தங்கள் திருமணத்திற்கு பின் வித்தியாசமான சூழலில் வாழ என ஆசைப்பட்டனர். இதையடுத்து கடலுக்கு அடியில் ஒரு வீட்டையும் கட்ட முடிவு செய்தனர்.

இதையடுத்து அமெரிக்காவைச் சேர்ந்த பிட்காயின் முதலீட்டாளரான சாட் எல்வர்ட்டோவ்ஸ்கி, அவரின் காதலி சுப்ரானி தெப்தெட் என்பவருடன் சேர்ந்து கடலில் கான்கிரீட் வீடு ஒன்றை கட்டியுள்ளார். அது அந்த நாட்டின் புக்கெட் கடற்கரையிலிருந்து சுமார் 12 மைல் தூரத்தில் இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

இதுவே தாய்லாந்தில் இருந்து சுமார் 14 மைல் தொலைவில் உள்ள கடலில் இந்த கான்க்ரீட் வீட்டை சமீபத்தில் ரோந்து சென்ற தாய்லாந்து கடற்படையினர் கண்டுபிடித்தனர். மேலும் இதுகுறித்து அவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் காதல் ஜோடி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடலுக்குள் வீடு கட்டிய காதலர்கள்

கடலுக்குள் வீடு கட்டிய காதலர்கள்

தாய்லாந்து நாட்டின் அனுமதி பெறாமல், நாட்டின் இறையாண்மையை மீறி கடலுக்குள் வீடு கட்டியதாக இந்த காதலர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும் இந்த குற்றம் நிரூபணமாகும் பட்சத்தில் இவர்கள் இருவருக்கும் மரண தண்டனை கிடைக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

எந்தவித தவறான நோக்கமும் இல்லை

எந்தவித தவறான நோக்கமும் இல்லை

இந்த நிலையில் ஆனால் இந்த வீட்டை கட்டிய நிறுவனம் இதுகுறித்து கூறியதாவது, இந்த வீடு தாய்லாந்து கடல் எல்லையில் இருந்து சுமார் 12-25 மைல் தொலைவில் உள்ளது. இது தாய்லாந்து நாட்டின் கட்டுப்பாட்டிலும் வராது. அப்படியே இருப்பினும் இந்த காதலர்கள் இந்த வீட்டை எந்தவித தவறான நோக்கத்துடனும் கட்டவில்லை 'என்றும் கூறியுள்ளது.

இறையாண்மையை மீறிய செயல்

இறையாண்மையை மீறிய செயல்

தாய்லாந்தில் கடலுக்குள் காதல் ஜோடி ஒன்று வீடு கட்டியது சட்டவிரோதம் என்றும் நாட்டின் இறையாண்மையை மீறிய செயல் என்றும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதனையடுத்து அந்தக் காதல் ஜோடிக்கு மரண தண்டனை கிடைக்க வாய்ப்பிருப்பதாக சட்ட வல்லுநர்கள் கூறி வருகின்றனர்.

இன்ஸ்டாகிராமில் போட்டோ

இன்ஸ்டாகிராமில் போட்டோ

அதே நேரம் அங்கு மது அருந்துவது போன்ற புகைப்படங்களையும் அவர் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். இந்நிலையில் தாய்லாந்து கடற்படையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போது கடலில் கட்டப்பட்டுள்ள இந்த வீட்டைக் கண்டு கடற்படையின ர் அதிர்ச்சி அடைந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.

தலைமறைவான  காதல் ஜோடி

தலைமறைவான காதல் ஜோடி

உடனடியாக வீட்டை வீடியோ எடுத்தக் கடற்படையினர் உரிமையாளர்கள் மீது வழக்குப் பதிவு செய்தனர். முன் அனுமதியின்றி உரிமையை மீறி தாய்லாந்தின் இறையாண்மைக்கு எதிராக இந்த வீடு கடலுக்குள் கட்டப்பட்டுள்ளதாக வழக்கு பதிவாகியுள்ளது. இதனையடுத்து காதலர்களுக்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியதையடுத்து காதல் ஜோடி தலைமறைவாகி விட்டனர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Bitcoin trader facing death penalty after Thai navy boards cabin of seasteaders

The Thai navy was Saturday boarded the floating cabin of a fugitive U.S. bitcoin trader and his Thai girlfriend, both prominent members of the seasteading movement who possibly face the death sentence for setting up their offshore home.
Story first published: Sunday, April 21, 2019, 17:07 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X