என்னாது பொம்மை கடைய வாங்குறாறா.. யாரு முகேஷ் அம்பானியா.. ரூ621 கோடிக்கா

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை : முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனம் லண்டனில் உள்ள மிகவும் புகழ்பெற்ற ஹாம்லேஸ் பொம்மை நிறுவனத்தை 67.96 மில்லியன் பவுண்டுக்கு (அதாவது ரூ.621.15 கோடி) விலைக்கு வாங்கியதாகக் கூறப்படுகிறது.

 

ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனம் ஹாம்லேஸ் குளோபல் ஹோல்டிங்ஸின் நிறுவனத்தின் 100 சதவிகித பங்குகளை வாங்குவதற்கான ஒரு உறுதியான உடன்படிக்கையில் கையெழுத்திட்டுள்ளதாக ரிலையன்ஸ் பிராண்ட்கள் சி. பன்னர் இண்டர்நேஷனல் என்ற நிறுவனம் பி.எஸ்.இக்கு அளித்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தற்போது ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் இந்தியாவில் ஹாம்லேஸ் குளோபல் நிறுவனத்தின் மாஸ்டர் உரிமையாளராகவும் 29 நகரங்களில் 88 அங்காடிகளை இயக்கியும் வருகிறது. இது குறித்து ரிலையன்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த ரிலையன்ஸ் பிராண்ட்ஸின் தலைமை நிர்வாக அதிகாரி தர்சன் மெஹ்தா கூறுகையில், ஹாம்லேஸ் குளோபல் வர்த்தகத்தை கையகப்படுத்தல் மூலம் உலகளாவிய சில்லறை விற்பனையில் முன்னணியில் ரிலையன்ஸ் இருக்கும். இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில் உலகளாவிய ரீதியில் ஹாம்லேஸ் நிறுவனத்துக்கு 18 நாடுகளில் 167 கடைகள் உள்ளன.

வேலையிழந்த ஜெட் ஏர்வேஸ் ஊழியர்கள் 500 பேருக்கு கைகொடுக்கும் தாஜ் ஹோட்டல்

உலகளாவிய சில்லறை வர்த்தகம்

உலகளாவிய சில்லறை வர்த்தகம்

அதோடு இதுவரை ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனம் சர்வதேச அளவில் சில்லறை வர்த்தகத்தில் ஈடுபடவில்லை, ஆனால் ஹாம்லேஸ் குளோபல் நிறுவனத்தை கையகப்படுத்துகையில் இது உலக அளவில் சில்லறை வர்த்தகத்தில் ஈடுபடும்.

ஹாம்லேஸ் நிறுவனத்தின் மதிப்பு ரூ.10,000 கோடி

ஹாம்லேஸ் நிறுவனத்தின் மதிப்பு ரூ.10,000 கோடி

இந்திய வல்லுனர்களின் கருத்துப்படி இந்த ஹாம்லேஸ் பொம்மை நிறுவனத்தின் மொத்த மதிப்பு சுமார் 10,000 கோடி ரூபாய் எனவும், இது இன்னும் 2 - 7 ஆண்டுகளில் இரண்டு மடங்காக அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் இந்தியாவில் அதிகளவிலான குழந்தைகளின் எண்ணிக்கை இந்த வருவாயை அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறதாம். இதனால் அடுத்து வரும் 3 ஆண்டுகளுக்குள் 200 கடைகளாக உயர்த்தவும் திட்டமிட்டுள்ளதாம் இந்த நிறுவனம்.

கணிசமான அளவில் ஒப்பந்தம்
 

கணிசமான அளவில் ஒப்பந்தம்

இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனம் கடந்த 12 மாதங்களில் விற்பனை மற்றும் கொள்முதல் ஒப்பந்தங்களில் கணிசமான எண்ணிக்கையையும் பார்த்துள்ளோம். ஆக இது தற்போதைய நிதியாண்டில் நிறுவனம் தெரிவித்த மூன்றாவது ஒப்பந்தமாகும். அதோடு கடந்த ஏப்ரலில் ஆறு நிறுவனங்களில் ஒரு முக்கிய பங்குகளை நிறுவனம் விற்பனை செய்துள்ளது. அதோடு பல கோடிகள் முதலீடும் செய்துள்ளது.

பொம்பை விற்பனை அதிகரிக்கும்

பொம்பை விற்பனை அதிகரிக்கும்

இந்தியச் சந்தையில் பொம்மை விற்பனை மதிப்பு 2018-ம் ஆண்டு 150 கோடி டாலராக இருந்தது. 2011 முதல் 2018 வரையான காலத்தில் 15.9% வளர்ச்சி கண்டுள்ளது. 2024-ம் ஆண்டு இந்தியாவில் பொம்மை விற்பனை மதிப்பு 303 கோடி டாலராக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பொம்மை விற்பனையிலும் தனி இடம்

பொம்மை விற்பனையிலும் தனி இடம்

இதனால் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனம் ஹாம்லேஸ் நிறுவனத்தை வாங்குவதன் மூலம் பொம்மை விற்பனையிலும் தனி இடம் வகிக்கும் திட்டத்தை ரிலையன்ஸ் வெளிப்படுத்தியுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Reliance Industries buys british toy-maker Hamleys for Rs.620cr

Mukesh Ambani-led Reliance industries thursday announced it will acquire iconic British toy-maker Hamleys for 67.96 million pounds (around Rs 620 crore) in an all-cash deal.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X