அமெரிக்கா சீனா குடுமிப்பிடி சண்டை ஆப்பிளுக்கு உடைஞ்சது மண்டை - ரூ. 5.24 லட்சம் கோடி சேதாரமாம்

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நியூயார்க்: வல்லரசு நாடுகளான அமெரிக்கா-சீனா இடையில் தொடரும் வர்த்தக சண்டைக்கு இடையில் மாட்டிக்கொண்ட பிரபல ஆப்பிள் நிறுவனத்தின் பங்குகள் கடந்த வாரத்தில் மட்டும் சுமார் 9 சதவிகிதம் அதாவது 5.24 லட்சம் கோடி ரூபாய் சரிவை சந்தித்துள்ளது.

 

கடந்த வாரத்தில் ஏற்பட்ட இந்த சரிவானது இந்த ஆண்டின் மிகப்பெரிய சரிவாகும். தற்போது ஆப்பிள் நிறுவனத்தின் சந்தை மதிப்பானது சுமார் 48.95 லட்சம் கோடி ரூபாயாகும். முதலிடத்தில் புகழ்பெற்ற மைக்ரோசாஃப்ட் மற்றும் அமேசான் ஆகிய நிறுவனங்கள் உள்ளன.

அமெரிக்கா சீனா குடுமிப்பிடி சண்டை ஆப்பிளுக்கு உடைஞ்சது மண்டை - ரூ. 5.24 லட்சம் கோடி சேதாரமாம்

அமெரிக்கா-சீனா நாடுகளுக்கிடையிலான வர்த்தகப் போட்டியானது சண்டையாக மாறி தற்போது கிளைமாக்ஸ் சண்டையில் வந்து நிற்கிறது. இரு நாடுகளுக்கு இடையில் பேச்சுவார்த்தை நடந்து கொண்டு இருக்கும்போதே அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அதிரடியாக சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரியை 25 சதவிகிதம் அதிகரித்து உத்தரவிட்டார்.

வட்டி குட்டி போட்டு இருமடங்காயிருச்சாம்.. ஆர்காம் ரூ. 90,000கோடி கடன்.. கவலையில் அனில் அம்பானி

ட்ரம்ப்பின் அதிரடி உத்தரவால் சுமார் 5700 பொருட்களுக்கான வரி விகிதம் 10 முதல் 25 சதவிகிதம் வரை உயர்கிறது. இதற்காக கூடுதலாக சுமார் 14 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்களுக்கான கூடுதலாக இறக்குமதி வரி செலுத்தவேண்டிய கட்டாயம் சீனாவுக்கு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் இவ்விரு நாடுகளின் வர்த்தக சண்டையினால் தற்போது அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது ஆப்பிள் ஸ்மார்ட் ஃபோன் நிறுவனமாகும். ஆப்பிள் ஸ்மார்ட் ஃபோன்களுக்கு உலகளாவிய அளவில் பெரும் வரவேற்பு இருந்தாலும், அமெரிக்கா மற்றும் சீனா நாடுகளில் அதிக அளவில் விற்பனையாகின்றது.

அமெரிக்கா சீனா குடுமிப்பிடி சண்டை ஆப்பிளுக்கு உடைஞ்சது மண்டை - ரூ. 5.24 லட்சம் கோடி சேதாரமாம்

ஆப்பிள் ஸ்மார்ட் ஃபோன்கள் உற்பத்தி மற்றும் விற்பனையில் அமெரிக்கா மற்றும் சீனா நாடுகளுக்கிடையிலான வர்த்தக உறவு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஏனெனில் ஆப்பிள் ஸ்மார்ட் ஃபோன்களுக்கு தேவையான முக்கிய உபகரணங்களான சிப்செட் (Chipset) மற்றும் பிசிபி போர்டு (PCB Board) ஆகிய அனைத்தையும் அளிப்பது மற்றும் ஸ்மார்ட் ஃபோன்களை உருவாக்குவதில் சீனாவின் பங்கு அதிக அளவில் உள்ளது.

 

தற்போது அமெரிக்கா-சீனா நாடுகளுக்கு இடையில் வர்த்தகப் போர் நடப்பதால் ஆப்பிள் நிறுவனத்தின் மூலப்பொருட்கள் வழங்கள், உற்பத்தி மற்றும் விற்பனை கடுமையாக பாதிக்கும் நிலை உருவாகியுள்ளது. சீனாவிலிருந்து இறக்குமதியாகும் சுமார் 14 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்களுக்கு 25 சதவிகிதம் வரையிலும் கூடுதலாக வரி விதிக்கப்பட்டுள்ளதால், அமெரிக்க பங்குச் சந்தையில் ஆப்பிள் நிறுவன பங்குகளின் விலை தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது.

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் ஆப்பிள் நிறுவனத்தின் பங்குகள் 9 சதவிகிதம் அதாவது சுமார் 5.24 லட்சம் கோடி ரூபாய் சரிவை சந்தித்துள்ளது. நடப்பு ஆண்டில் ஏற்பட்ட மிகப்பெரிய சரிவாக இது பார்க்கப்படுகிறது. இந்த சரிவினால் தற்போது ஆப்பிள் நிறுவனத்தின் சந்தை மதிப்பு 48.95 லட்சம் கோடி ரூபாயாக குறைந்துள்ளது.

அமெரிக்க பங்குச் சந்தையில் ஏற்பட்ட சரிவினால், பிரபல சாஃப்ட்வேர் நிறுவனமான மைக்ரோசாஃப்ட் மற்றும் அமேசான் நிறுவனங்களுக்கு அடுத்த இடத்திற்கு ஆப்பிள் நிறுவனம் தள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

US-China Trade war - Apple lose 5.24 lakhs crore in last week

US-China Trade war - Apple lose 5.24 lakhs crore in last week
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X