இந்த வேலைக்கு மாசம் 66,50,000 சம்பளமா..? அடேங்கப்பா..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வாஷிங்டன்: இந்திய தகவல் தொழில்நுட்பத் துறையில் வேலை பார்க்கும் ஊழியர்கள் இனிமேல் அமெரிக்கா சென்று வேலை பார்ப்போம் என்ற கனவு இனிமேல் கனவாகவே இருக்கக்கூடும். ஆம் அமெரிக்காவில் ஆரம்ப நிலை வேலைக்கான சம்பளமே 95000 டாலர்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 

தரவுகளை பகுத்தாய்வு செய்து நிறுவனங்களுக்கு அளிக்கும் வேலையே நுழைவு நிலையில் கிடைக்கும் வேலையாகும். இவர்களுக்கு கிடைக்கும் சம்பளமானது அமெரிக்க பங்குச் சந்தையான வால் ஸ்ட்ரீட்டில் சந்தை ஆய்வுப் பணியில் உள்ள முதலீட்டு வங்கி ஊழியர்களின் சம்பளத்தை விட கூடுதலாகும்.

அமெரிக்காவின் இந்த முடிவால் இந்திய ஐடி இளைஞர்கள் இனிமேல் அமெரிக்கா சென்று வேலை பார்த்து செட்டில் ஆகும் முடிவை மாற்றிக்கொண்டு வேறு நாடுகளை நாடுவது நல்லது.

சாதனை படைக்க போகும் பெண்கள்.. பெண்களுக்கான நிர்வாக பதவிகளை அதிகரிக்கும் கார்ப்பரேட் நிறுவனங்கள்

லோக்கல் அரசியல்வாதியா

லோக்கல் அரசியல்வாதியா

டொனால்ட் ட்ரம்ப் அதிபராக பதவிக்கு வந்ததில் இருந்தே, நம்மூர் அரசியல்வாதிகளைப்போல் எதையாவது செய்து அமெரிக்க இளைஞர்களின் மத்தியில் இடம்பெற படாத பாடு பட்டுக்கொண்டிருக்கிறார். இதற்காக அவர் முதலில் கைவைத்தது இந்திய தகவல் தொழில்நுட்பத்துறையில் வேலை பார்க்கும் இளைஞர்களின் எச்-1பி விசாவில் தான்.

அமெரிக்கர்களுக்குத் தான் வேலை

அமெரிக்கர்களுக்குத் தான் வேலை

முதல் திட்டமாக எச்-1பி விசா விதிமுறைகளில் கடுமையான கட்டுப்பாடுகளைக் கொண்டுவந்தால் தான் அமெரிக்கர்களை அதிக அளவில் தகவல் தொழில் நுட்பத்துறை நிறுவனங்களில் பணியில் அமர்த்த முடியும் என்று நினைத்தே எச்-1பி விசா விதிமுறையை கடுமையாக்கினார். கூடவே அமெரிக்காவில் படித்த அமெரிக்க இளைஞர்களுக்கு முன்னுரிமை வழங்கவேண்டும் என்றும் கட்டுப்பாடுகளை விதிக்கத் தொடங்கினார்.

சம்பளம் 95000 டாலர் இருக்கனும்
 

சம்பளம் 95000 டாலர் இருக்கனும்

இரண்டாவதாக எச்-1பி விசா வேண்டுமானால் இந்திய தகவல் தொழில்நுட்பத்துறையில் வேலை பார்க்கும் ஊழியர்கள் குறைந்த பட்சம் ஆண்டுக்கு 95000 டாலர்கள் சம்பளம் பெறவேண்டியது கட்டாயம் என்றும் இல்லை என்றால் எச்-1பி விசா கனவை மூட்டை கட்டிவிடவேண்டும் என்று அடுத்த குண்டைப் போட்டார்.

ஆரம்ப நிலை வேலை

ஆரம்ப நிலை வேலை

இதில் அதிர்ச்சியான விசயம் என்னவெனில், 95000 டாலர்கள் ஊதியம் என்பது ஆரம்ப நிலையில் (Entry Level Job) வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு கிடைக்கும் சம்பளம் தான் இது. இதைக் கேட்டு அதிர்ச்சியில் உறைந்த இந்திய தகவல் தொழில்நுட்பத் துறை நிறுவனங்கள் தங்களுக்கு தோதான நாடுகளை தேடத் தொடங்கிவிட்டனர். இதன் காரணமாக எச்-1பி விசா கேட்டு வரும் விண்ணப்பங்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்துவிட்டது. ட்ரம்ப் நினைத்த இரண்டு காரியமும் இனிதே நலமாக முடிந்தது என்றுதான் சொல்லவேண்டும்.

தரவு விஞ்ஞானி

தரவு விஞ்ஞானி

அமெரிக்காவின் மிக அதிகப்படியான சம்பளம் 95000 டாலர்கள் கிடைக்கும் ஆரம்ப நிலை வேலையும் இதுதான் என்று விவாதிக்கப்படுகிறது. ஆரம்ப நிலை வேலை என்பது தரவுகளை பகுப்பாய்வு (Data Scientist) செய்யும் வேலைதான் அது. கிட்டத்தட்ட பிபிஓ (BPO) வேலை மாதிரிதான். கடந்த ஆண்டில் மிக அதிக சம்பளம் கிடைக்கும் வேலையாக இது இருந்தது என க்ளாஸ்டோர் ரிசர்ச் (Glassdoor Research) நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

தரவுளை ஆராய்தல்

தரவுளை ஆராய்தல்

தரவுகளை பகுப்பாய்வு செய்வது என்பது தொழில் நிறுவனங்கள் தங்களின் முதலீடுகளை நீண்டகால மற்றும் பரந்த அளவிளான திட்டங்களில் எவ்வாறு முதலீடு செய்வது மற்றும் பரந்த வர்த்தக நடவடிக்கைகளை எவ்வாறு மேற்கொள்வது போன்ற நுண்ணறிவு தரவுகளை பகுப்பாய்வு செய்வதாகும்.

தேவை அதிகம்

தேவை அதிகம்

இவ்வாகையான ஆரம்ப நிலை வேலைகளை செய்வதற்கு தற்போது நாடு முழுவதும் பெரும்பாலான தொழில் நிறுவனங்களில் தரவு அறிவியல் திறமைகளைக் (Data-Science Skills) கொண்டவர்களின் தேவை மிகமிக அதிக அளவில் இருக்கிறது என்று க்ளாஸ்டோர் ரிசர்ச் ஆய்வு நிறுவனத்தின் தலைமை ஆய்வாளர் அமந்தா ஸ்டான்ஷெல் (Amanda Stansell) கூறினார். அதோடு, பெரும்பாலான நிறுவனங்களில் அதிக அளவில் தரவுகளை சேகரிக்கவும் அவற்றை பகுப்பாய்வு செய்வதற்கும் கூடுதலான ஆட்களை தேர்வு செய்வது தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது என்றும் ஸ்டான்ஷெல் கூறினார்.

ஆரம்ப நிலை வேலைகள் எத்தனை

ஆரம்ப நிலை வேலைகள் எத்தனை

தகவல் தொழில்நுட்பத் துறைகளைப் பற்றி ஆய்வு செய்யும் க்ளாஸ்டோர் ரிசர்ச் ஆய்வு நிறுவனம், கிட்டத்தட்ட 25 வகையான அதிகபட்ச சம்பளம் பெறக்கூடிய ஆரம்ப நிலை வேலைகளை வகைப்படுத்தியுள்ளது. இதில் கொடுமையான விசயம் என்னவென்றால், அதிக திறமை வாய்ந்த தகவல் தொழில்நுட்பத் துறை ஊழியர்களை இந்தப் பட்டியலில் இரண்டாவது இடத்தில் வைத்துள்ளனர். இவர்களின் சம்பளம் 90 ஆயிரம் டாலர்கள். தொழில்நுட்பம் பற்றி தெரியாத மற்ற வர்த்தகம் சாராத தொழில்முறை ஊழியர்கள் அதாவது பிசிகல் தெராபிஸ்ட்களின் சம்பளம் 64ஆயிரம் டாலர்களாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

தகவல் தொழில்நுட்பத்துறையில் அதிகம்

தகவல் தொழில்நுட்பத்துறையில் அதிகம்

கடந்த ஆண்டில் தகவல் தொழில்நுட்பத் துறையில் வேலை வாய்ப்பு சதவிகிதம் 4 சதவிகிதம் வரையிலும் கூடுதலாக இருந்தது. அதே சமயம் நிதித்துறை சம்பந்தப்பட்ட வேலையில் சுமார் 10 சதவிகிதம் வரையிலும் குறைந்து காணப்பட்டதாக எஸ்&பி 500 லிங்க்அப் (S and P LinkUp)வேலை வாய்ப்பு குறியீடு தெரிவித்துள்ளது.

திறமையை அதிகரிக்க பயிற்சி

திறமையை அதிகரிக்க பயிற்சி

அமெரிக்க இளைஞர்களின் திறமை பற்றாக்குறை பற்றிய பரவலான பேச்சுக்கள் எழுந்துள்ள நிலையில் அவர்களின் திறன்களை அதிகரிக்க முகாம்கள் தொடங்கப்பட்டு அவர்களின் திறன்களை அதிகரிப்பதற்கான பயிற்சியும் அளிக்கப்பட்டு வருகிறது. அதோடு சில நிறுவனங்கள் அவற்றுக்கு அருகில் உள்ள பள்ளிகளோடு இணைந்து திறமைகளை அதிகரிக்க பயிற்சியளித்து வருகின்றன. குறிப்பாக கடலோர மாகாணங்களான ஹன்ட்ஸ்வில், அலபாமா, டெட்ராயிட், மிக்சிகன் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் தனிப்பட்ட தொழில்நுட்பத் துறை சார்ந்த வாய்ப்புகளை வழங்கி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Data Scientist is Highest paying Jobs in US

Data Scientist was the highest paying entry level job last year and the base salary of $95000. The Software Engineer ranked 2nd with a median base salary $90000.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X