காளையா கரடியா.. தேர்தல் முடிவால் சந்தையில் ஏற்ற இறக்கங்கள் இருக்கலாம்.. எச்சரிக்கை

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி : இந்தியாவில் 17வது லோக்சபா தேர்தல் இன்றோடு முடிவடைவதையடுத்து, இனி வரும் நாட்களில் வெளிவந்து கொண்டிருக்கும் கருத்துக் கணிப்புகளை அடிப்படையாகக் கொண்டே இந்தியப் பங்குச் சந்தைகள் வர்த்தகமாகும் என்று கருதப்படுகிறது.

 

அதுவும் இரண்டு மூன்று செசன்களிலும் இந்திய பங்கு வர்த்தகம் நல்ல ஏற்றத்துடன் முடிவடைந்தது. இனி வரும் நாட்களிலும் இந்த ஏற்றம் தொடருமா? வரப்போகும் புதிய ஆட்சியை யார் பிடிப்பார்கள்? வரப்போகும் புதிய அரசு எந்த மாதிரியான நிதிக் கொள்கை மாற்றி அமைக்கும் என்பதை பொறுத்தே இருக்கும் என்றாலும் அதற்கு முன்னதாக பங்கு சந்தையில் பெரிய மாற்றம் இருக்கும் என்றும் கருதப்படுகிறது.

காளையா கரடியா.. தேர்தல் முடிவால் சந்தையில் ஏற்ற இறக்கங்கள் இருக்கலாம்.. எச்சரிக்கை

எனினும் வந்து கொண்டிருக்கும் கருத்துக் கணிப்புகளை கொண்டு எதையும் தீர்மானிக்க முடியாது. ஏனெனில் இதற்கு முன்னர் வெளிவந்த இரண்டு மூன்று தேர்தல் முடிவு பற்றிய கணிப்புகள் கடைசி நேரத்தில் மாற்றியமைத்து ஆட்சியே மாறியது அனைவருக்கும் தெரிந்த விஷயம்.

ஆக வரப்போகும் நாட்களில் சந்தை கருத்துக் கணிப்புகளை நம்ப முடியாது. கண்டிப்பாக சந்தை அதிக ஏற்ற இறக்கத்துடன் இருக்கலாம். இங்கு காளை ஜெயிக்குமா? கரடி ஜெயிக்குமா? தெரியாது. ஆனால் முதலீட்டாளர்கள் முதலீடு செய்யும் போது கவனத்தோடு செய்ய வேண்டும்.

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளால் பங்கு சந்தை காளையாய் சீறிப் பாயலாம். எனினும் புதிய ஆட்சிக்கு பின்னர் அப்படியே இருக்குமா என்பது தான் சந்தேகம். ஏனெனில் வரப்போகும்புதிய அரசுக்கு பல பல கடிமான பலப் பரிட்சைகள் காத்துக் கொண்டிருக்கின்றன.

மனநலம் பாதிக்கப்பட்டோருக்கு இன்சூரன்ஸ் மறுக்க கூடாது.. விளையாட்டு வீரர்களுக்கும் சலுகை.. ஐஆர்டிஏஐ

குறிப்பாக வரப்போகும் ஆட்சி எடுக்கும் புதிய நிதிக் கொள்கையாலேயே அன்னிய முதலீடுகள் வருவதும், இல்லை இருப்பதும் வெளியே போகுமா என்பதே தெரிய வரும். இப்போது ஆட்டம் காட்டி வரும் இந்த சந்தை போக்குகள் வெறும் பேருக்குதான். தேர்தல் முடிந்த பின்னரே உண்மையான ஆட்டம் என்னவென்பது தெரிய வரும்.

 

எனினும் கடந்த வாரம் வெளியிடப்பட்ட சில கருத்துக்கணிப்புகள் தேர்தலுக்கு முன்பும் பின்பும் இந்திய பங்கு சந்தைகள் சாதகமாகவே வர்த்தகமாகின என்றும் வெளியிடப்பட்டிருந்தது.

எனினும் இந்த வாரம் பங்கு சந்தையில் நீண்ட கால போக்குகளை உருவாக்கும் ஒரு நிகழ்வாக இருக்கும். மேலும் அதிக லாபம் படைப்பிற்கான வாரமாகவும் இருக்கும். தேர்தல் முடிவுகள் போன்ற அரசியல் நிகழ்வுகள் பொதுவாக ஆண்டுகளாக நீடிக்கும் போக்குகளை உருவாக்குகின்றன. அதோடு பொருளாதாரம் மற்றும் முதலீட்டாளர்களுக்கு இது முக்கியமானதே எபிக் (Epic Research) நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி முஸ்தபா நதீம் கூறியுள்ளது குறிப்பிடத்தக்க விஷயமாகும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

exit polls may set the market trend this week

Exit poll trends will set the trend for the equity markets in the initial part of the week. also the final outcome of lok sabha eletions coming May 23, It would be effect the Indian markets.
Story first published: Sunday, May 19, 2019, 14:34 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X