மோடியின் முதல் 100 நாள் அதிரடி திட்டங்கள் .. உலக வரைபடத்தில் டாப்புக்குப் போகுமா இந்தியா?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி : நரேந்திர மோடி தலைமையிலான அரசு, இரண்டாம் முறையாக பதவியேற்ற பின் 100 நாட்களுக்குள் பல அதிரடியான செயல் திட்டங்களை செயல்படுத்த திட்டமிட்டுள்ளதாம், இது அனைவரும் அறிந்த ஒரு விஷயமே என்றாலும், இந்த அதிரடியான திட்டங்கள் மக்களுக்கு உபயோகமாக இருக்குமா? என்பது தான் தற்போது கேள்விக்குறியாகவே இருக்கிறது.

ஆமாப்பு தற்போது இருக்கும் பொருளாதார நிலையை யோசித்து செயல்படுவதற்காக ஒரு சிந்தனை குழுவை நியமித்துள்ளராம் மோடி. அவர்களின் கூற்றுப்படி அரசு விரைவில் பெரிய பெரிய முதலீடுகளை பெற வேண்டும் என்பதே அரசின் முதல் நோக்கமாம்.

அவ்வாறு அரசு தேவைக்கேற்ப முதலீடு வேண்டும் எனில், பெரிய அளவிலான அன்னிய முதலீடுகளை ஈர்க்க வேண்டுமாம். அவ்வாறு அன்னிய முதலீடுகளை பெருமளவுக்கு நமது பொருளாதார கொள்கையோ தற்போது சொல்லிக் கொள்ளும் அளவுக்கு இல்லை என்பதே இந்த குழுவின் கருத்து.

மோடி தலைமைக்கு கோரிக்கை

மோடி தலைமைக்கு கோரிக்கை

ஆக அதிகளவிலான அன்னிய முதலீடுகளை பெற வேண்டுமெனில் முதலில் பொருளாதார கொள்கையை சீர்திருத்த வேண்டும் என்று பல தரப்பிலும் மோடிக்கு இடி விழுந்து கொண்டே இருக்கிறதாம். ஆமாப்பு இது குறித்து NITI aayog அமைப்பின் துணைத் தலைவர் ராஜீவ் குமார் கூறுகையில், குறிப்பாக தொழிலாளர் குறித்த சட்டங்களில் சீர்திருத்தங்கள், புதிய தொழில்துறை வளர்ச்சிக்கான நிலச்சீர்த்திருத்தங்கள், தனியார் மயமாக்கல் நடவடிக்கைகள் உள்ளிட்ட பலவற்றினை பற்றிய அறிக்கைகள் மோடி தலைமையிலான அரசுக்கு தரப்பட்டுள்ளதாம்.

நில சீர்திருத்தம் செய்!

நில சீர்திருத்தம் செய்!

இது குறித்து ராஜீவ் குமார் கூறுகையில், அதிக அளவிலான அன்னிய முதலீடுகளை பெறவும், அன்னிய முதலீட்டாளர்கள் சந்தோஷப்படும் வகையில் நில சீர்திருத்தங்களை செய்து கொடுக்க வேண்டும். அப்போது தான் முதலீடுகள் அதிகரிக்கும். இதற்காக நான் உறுதியளிக்கிறேன். நிச்சயம் இது மிகுந்த பயனளிக்கும் எனவும் செய்திக் குறிப்பில் ராஜீவ் குமார் கூறியுள்ளார்.

நிதி ஆயோக் திட்டம்
 

நிதி ஆயோக் திட்டம்

சோவியத் பாணியிலான அதிகாரத்துவத்துடன் இந்தியா முடங்கிவிட்டதாகக் கூறி, கடந்த 65 ஆண்டுகால திட்டக் கமிசனைக் கலைத்தது மோடி தலைமையிலான அரசு. அதற்குப் பதிலாகத் தான் கடந்த நான்கு ஆண்டுக்களுக்கு முன்பு நிதி ஆயோக் அறிமுகப்படுத்தப்பட்டது. இது தற்போது அரசின் கொள்கை முடிவுகளின் மையமாகவும் அரசுக்கு புதிய யோசனைகளைத் தரும் அமைப்பாகவும் செயல்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.

ஜீலையில் முடிவு காணப்படும்

ஜீலையில் முடிவு காணப்படும்

ஜூலையில் தொடங்கவிருக்கும் பாராளுமன்ற கூட்டத்தொடரில் இந்தியாவின் பிரச்சினைக்குரிய தொழிலாளர் சட்ட சீர்திருத்தங்களுக்கு ஒரு முக்கிய முடிவு கட்டப்படும் என்றும், முன்னதாக கீழ் அவையில் இந்தச் சட்டங்கள் நிறைவேற்றப்படும் என்றும் ராஜீவ் குமார் கூறியுள்ளார்.

44 சட்டங்கள்

44 சட்டங்கள்

குறிப்பாக இந்த சட்ட சீர்திருத்தங்கள் நான்கு குறியீடுகள் அடிப்படையில் 44 சட்டங்களை நிறைவேற்றப்படுமாம். ஆமாப்பு குறிப்பா சம்பளம், தொழில்துறை உறவுகள், சமூக பாதுகாப்பு, நலன் மற்றும் தொழில் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் பணி நிலைமைகள் அடங்கிய சட்டங்களைக் குறிவைத்து இது நிறைவேற்றப்படும் எனவும் கூறப்பட்டுள்ளதாம்.

முதலீட்டாளர்களுக்கு நிலங்களை அனுமதிக்கலாம்

முதலீட்டாளர்களுக்கு நிலங்களை அனுமதிக்கலாம்

பொதுத்துறை நிறுவனங்களிடம் உள்ள பயன்படுத்தப்படாத நிலங்களை, வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு அளிப்பது குறித்த முக்கியமான முடிவை அரசு எடுக்க இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. அதோடு அரசு வசம் உள்ள நிலத்தில் சரக்கு முனையத்தை உருவாக்கி அதை வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பயன்படுத்த அனுமதிக்கலாம் என்கிறார். இத்தகைய நிலம் வழங்கும் திட்டத்தை முதலீட்டாளர் அல்லது தொழில்துறைக்கு ஏற்றபடி உருவாக்கிக்கொள்ளவும் முடியும். இதனால் அன்னிய முதலீடுகளை ஈர்க்க இது ஏதுவாக அமையும் என்கிறார் ராஜீவ்.

பிரச்சனைகள் குறையும்

பிரச்சனைகள் குறையும்

அரசின் நிலம் வழங்கும் திட்டம், வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு இருக்கக்கூடிய மிகப்பெரிய உரிமை தொடர்பான சட்ட பிரச்சினைகளுக்கு ஒரு முடிவாக இருக்கும். அதோடு அது போன்ற பிரச்சனைகளில் இருந்து அவர்களை அது காப்பாற்ற உதவும். ஏனெனில் விவசாய நிலங்களை வழங்குவதால் போராட்டம், வழக்கு உள்ளிட்ட பல பிரச்சினைகள் உள்ளது. ஏற்கனவே இவ்வாறு வழங்கப்பட்டதால் பல பிரச்சனைகளை அரசு சந்தித்தது. அதோடு மக்கள் போராட்டம், சுற்றுச்சூழல் பிரச்சனை பல வகையிலும் பிரச்சனை இருந்து வந்தது. ஆனால் அரசுக்கு சொந்தமான நிலங்களை வழங்குவதால் இந்த பிரச்சனைகள் அதிகளவில் இருக்காது என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.

மூடுவிழாவா? - தனியார் மயமாக்கலா?

மூடுவிழாவா? - தனியார் மயமாக்கலா?

மோடி அரசு மேற்கொள்ள உள்ள மற்றொரு முக்கியமான சீர்திருத்தம், என்னவெனில் அதிக பிரச்சனைகளில் உள்ள 42-க்கும் அதிகமான அரசு நிறுவனங்களை முழுவதுமாக தனியார் மயமாக்குவது அல்லது இழுத்து மூடிவிடலாமா? என்பது குறித்து மோடி அரசு கவனம் செலுத்த உள்ளதாம். என்ன கொடுமை சாமி இது. அதிலும் குறிப்பாக தொடர்ந்து நஷ்டத்திலேயே இயங்கிவரும் ஏர் இந்தியா நிறுவனத்தை விற்கவோ அல்லது அன்னிய நேரடி முதலீட்டில் உள்ள சில நிபந்தனைகளைக்கூட தளர்த்திக்கொள்ள திட்டமிடுவதாகவும் குமார் தெரிவித்துள்ளார்.

அனைத்து நிறுவனங்களையும் நிர்வகிக்க நிறுவனம்

அனைத்து நிறுவனங்களையும் நிர்வகிக்க நிறுவனம்

வெவ்வேறு அமைச்சகங்களின் கீழ் உள்ள அனைத்து அரசு நிறுவனங்களையும் நிர்வகிக்க தனியாக ஒரு நிறுவனத்தை உருவாக்குவதன் மூலம், அந்த நிறுவனங்கள் வசம் உள்ள சொத்துக்களை எளிதில் விற்க முடியும் எனவும், இதற்காக பல்வேறு மந்திரிகளுக்கு பதில் கூற இயலாது எனவும், இதற்கான நேரமும் தற்போது இல்லை எனவும், இவ்வாறு செய்வதன் மூலம் அரசின் நிர்வாக பொறுப்புகள் குறையும் எனவும் ராஜீவ் குமார் கூறியுள்ளார்.

வேலை வாய்ப்பும் உருவாக்கப்பட வேண்டும்

வேலை வாய்ப்பும் உருவாக்கப்பட வேண்டும்

நரேந்திர மோடி தலைமையிலான புதிய அரசுக்கு காத்திருக்கும் பெரிய சவாலே, இந்திய பொருளாதார வளர்ச்சி விகிதம் தான். ஆமாப்பு கடந்த ஐந்து காலாண்டுகளில் இல்லாத அளவுக்கு கடந்த காலாண்டில் 6.6% சரிவடைந்தது கவனிக்கதக்கது. அதிலும் கடந்த ஜனவரி - மார்ச் காலாண்டில் இந்த விகிதம் இன்னும் குறையலாம் என்றும், அது மிக கவலை கொள்ளும் விதமாகவே இருக்கும் என்றும் கருதப்படுகிறது. அதோடு மில்லியன் கணக்கான இளைஞர்கள் வேலைவாய்ப்பை தேடிக் கொண்டிருக்கும் நிலையில், அவர்களுக்கு பணி வழங்கும் வகையில் பொருளாதார வளர்ச்சியை விரைவில் அதிகரிக்க வேண்டுமாம்.

வரி வசூலும் அதிகரிக்கும்

வரி வசூலும் அதிகரிக்கும்

வங்கிகளின் கவலைக்குரிய இருப்பு நிலையும், கடன் அளிக்கும் துறையில் இருக்கும் இந்த பெரிய நெருக்கடியும் இந்த நிலைக்குக் ஒரு காரணம் என்றே கூறலாம். ஆக அரசு வங்கிகளை சீர்திருத்துவதில் கவனம் செலுத்த வேண்டும் என யோசனை தெரிவிக்கும் ராஜீவ் குமார், கட்டுமான மற்றும் புதிய பொது வீடுகளுக்கு செலவழிக்கும் வகையில் அதிகத் தொகையை உருவாக்க வேண்டும் என்கிறார். புதிய பொது வீடுகள் மூலம் தனியார் மயமாக்கத்தை விரைவாக்க முடியும் என்றும், அதன் மூலம் அதிக வரி வசூலும் கிடைக்கும் என்கிறார் ராஜீவ்.

அதிரடியாக ஆயத்தமாகி கொண்டிருக்கிறோம்

அதிரடியாக ஆயத்தமாகி கொண்டிருக்கிறோம்

இந்த தொடக்கத்தை முதலில் நாம் வங்கிகளிலிருந்து தொடங்கலாம். அதோடு அடுத்த நூறு நாட்களில் பெரிய விசயங்கள் நடக்க இருக்கின்றன. அதற்கான ஆயத்தத்தில் தான் இருக்கிறோம். இந்த நிதிக் கொள்கையானது எதிர் சுழற்சிக்கானதாக இருக்கும். இதன் மூலம் நல்ல பலன் கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுவதாகவும் ராஜீவ் குமார் கூறியுள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Land, labour, privatisation will sonn Big bang reforms soon

PM Narendra Modi's In the first 100 days of a slew economic reforms that should foreign investors are likely to be pursued.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X