மரத்துலருந்து வெட்றோம்.. ஆன்லைன்ல இளநீரை டெலிவரி பண்றோம்.. அசத்தும் இந்தியர்கள்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி : இளநீர் என்ற வார்த்தைய கேட்டாலே யாருக்குத் தான் பிடிக்காது. சிறியவர் முதல் பெரியவர் வரை விரும்பி உண்ணும் ஒரு பானமே இளநீர். அதுவும் இந்திய மக்களின் விருப்பமான பானங்களில் இளநீருக்கு என்றுமே தனி இடம் உண்டு.

 

அதுவும் கோடை காலம் என்றால், தகிக்கும் வெயிலுக்கு ஏற்ப குளு குளு இளநீருக்கு மிஞ்சியது எதுவும் இல்லை. அதுவும் கலப்படம் இல்லா ஒரு பானம் என்றால் அது இளநீர் தான், இந்த இளநீரை வைத்து இப்படி கூட ஒரு வர்த்தகம் செய்யலாம் என்ற அளவுக்கு நம் மக்கள் ஆப்பை உருவாக்கியுள்ளனர்.

மரத்துலருந்து வெட்றோம்.. ஆன்லைன்ல இளநீரை டெலிவரி பண்றோம்.. அசத்தும் இந்தியர்கள்!

ஆமாங்க.. ஸ்விக்கி சோமேட்டோ போல "Niu neer" ஆப் மூலமாக இளநீர் டெலிவரி செய்யப்படுகிறதாம். இது இந்தியாவிலேயே முதன் முறையாக இளநீரை இப்படி டெலிவரி கொடுப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட முதல் ஆப்பாம்.

இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில் பலரும் தொழில் செய்ய நினைப்பார்கள், ஆனால் என்ன செய்வது என்பது தான் பலரின் கேள்வியே. ஏன்? பலரின் குழப்பமான கேள்வியும் இது தான். ஆனால் அதுபோன்றோருக்கு இது தான் பதிலாக இருக்கும். ஆமாங்க.. இளநீர் கடைகளை ஆங்காங்கே தெருவில் பார்த்தாலும்,சிலருக்கு அதை சென்று வாங்க முடியாத நிலை இருக்கலாம். அப்படி பட்டவர்களுக்கு இந்த இளநீர் டெலிவரி ஆப் மிக உபயோகமாக இருக்கும்.

இது குறித்து இந்த "Niu neer" ஆப் மூலம் வாடிக்கையாளர்கள் நினைத்த நேரத்தில் இளநீரை ஆர்டர் செய்து பருகுவதோடு, ஒரு நாளைக்கு பலமுறை பருகும் வாய்ப்பும் உள்ளதாம். இது குறித்து இந்த ஆப்பின் உரிமையாளர்கள் கூறுகையில் எங்களது வாடிக்கையாளர்கள் அதுவும் இந்த கோடைக்காலத்தில் ஒரு நாளைக்கு பல முறை ஆர்டர் செய்கிறார்களாம்.

தற்போது மும்பை மற்றும் சென்னையில் மட்டுமே டெலிவரி செய்து வரும் இந்த குழுவினர், அடுத்த 18 மாதங்களில் பெங்களுரூ, ஹைதராபாத், அகமதாபாத், பூனே, இண்டூர் உள்ளிட்ட முக்கிய இடங்களில் விரிவாக்கம் செய்ய உள்ளார்களாம். எந்த ஒரு வர்த்தகமாக இருந்தாலும் அதில் புதுமைக்கு வரவேற்பு என்பது என்றைக்கும் மக்களிடையே இருக்கிறது என்பது இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

“Niu Neer” is India's first-ever tender coconut delivery service provide in india

Niu Neer, India's first-ever tender coconut delivery service provider, is determined to offer India's beloved tender coconut with the utmost convenience.
Story first published: Wednesday, June 5, 2019, 9:53 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X