மன்மோகன் மோகன் சிங்கை சந்தித்த நிர்மலா சீதாராமன்.. இது நல்ல விஷயம் தானே!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி : மத்தியில் மோடி தலைமையிலான ஆட்சி இரண்டாவதாக மத்திய பட்ஜெட் விரைவில் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலத்தில் பிரதமராக பதவி வகித்தவரும், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், உலகின் பொருளாதார மேதைகளில் ஒருவருமான மன்மோகன் சிங்கை, மோடி அமைச்சரவையில் புதிய நிதி அமைச்சர் பொறுப்பேற்று இருக்கும் நிர்மலா சீதாராமன் சந்தித்து பேசினார்.

 

மத்தியில் பாரதிய ஜனதா கட்சி தலைமைமையிலான கூட்டணி 2வது முறையாக ஆட்சியை பிடித்துள்ளது. பாரதிய ஜனதா கட்சியே மிகப் பெரிய பலத்துடன் ஆட்சியைப் பிடித்திருக்கிறார்கள். இந்த ஆட்சியில் முன்பு பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்த நிர்மலா சீதாராமன், தற்போது நிதியமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மன்மோகன் மோகன் சிங்கை சந்தித்த நிர்மலா சீதாராமன்.. இது நல்ல விஷயம் தானே!

சுதந்திரம் பெற்ற பிறகு முதல் முறையாக பெண் ஒருவர் முழுநேர நிதியமைச்சராக பொறுப்பேற்றுள்ளது இதுவே முதல்முறை எனவும் கருத்துக்கள் நிலவி வருகின்றன.

இந்த நிலையில் வரும் ஜூலை 5ம் தேதி மத்திய அரசின் பட்ஜெட் தாக்கல் அறிக்கையை தாக்கல் செய்கிறார் நிர்மலா சீத்தாராமன். அதோடு பட்ஜெட் தாக்கலுக்கான தயாரிப்புக்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும், இந்த சூழ்நிலையில் நிர்மலா பல பொருளாதார நிபுனர்களையும், அதிகாரிகளையும் சந்தித்து பேசி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்க விஷயம்.

பட்ஜெட் குறித்தான தகவல்களையும், ஐடியாக்களையும் கேட்டு வந்தார். இந்த நிலையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வியாழக்கிழமையன்று டெல்லியில் உள்ள முன்ளாள் பிரதமர் மன்மோகன் சிங் வீட்டில் அவரை சந்தித்தும் பேசியுள்ளார்.

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், உலகவங்கி உள்ளிட்ட பல்வேறு நிதியமைப்புகளில் பணியாற்றிய சிறந்த பொருளாதார நிபுனரும் ஆவார். இந்த சந்திப்பில் மத்திய பட்ஜெட் தயாரிப்பு மற்றும் பொருளாதார சீர்திருத்தங்கள் உள்ளிட்டவைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

அதோடு நிதித்துறையில் அனுபவம் மிக்க ஒருவரான மன்மோகன் சிங் சந்தித்து பேசியதில் நல்ல அனுபவம் கிடைத்திருக்கலாம். இது மிக நல்ல விஷயமே என்றும் நிபுனர்கள் கருதுகின்றனர்.

 

நிர்மலா சீதாராமன் நிதி அமைச்சராக பொறுப்பேற்றதையடுத்து, மன்மோகன் சிங்கை மரியாதை நிமித்தமாக சந்தித்துள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளன.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Finance minister Nirmala Sitharaman Meets Manmohan Singh Before her 1st Budget

Finance minister Nirmala Sitharaman Meets Manmohan Singh Before her 1st Budget
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X