அமெரிக்காவில் செட்டிலாக நினைக்கும் இந்திய ஐடி இளைஞர்களின் கனவு நனவாகும்

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வாஷிங்டன்: அமெரிக்காவில் நிரந்தரமாக குடியேறுவதற்காக வழங்கப்பட்டு வரும் கிரீன் கார்டுக்கான 7 சதவிகித உச்ச வரம்பை நீக்குவதற்காக கொண்டுவரப்பட்ட மசோதா அமெரிக்க பார்லிமென்டில் வாக்கெடுப்பின் மூலம் வெற்றி பெற்றதை அடுத்து இந்திய தொழில்நுட்பத்துறை இளைஞர்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

மசோதா வெற்றி பெற்றதை அடுத்து கடந்த 70 ஆண்டுகளாக நீடித்துவந்த சோகம் முடிவுக்கு வந்ததோடு, இனி வரும் காலங்களில் அதிக அளவில் இந்திய தகவல் தொழில்நுட்பத்துறை இளைஞர்கள் கிரீன் கார்டுக்கான எச்ஆர்-1044 விசா பெற்று அமெரிக்காவில் குடியேறுபவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கிரீன் கார்டு பெறவேண்டுமெனில், குறிப்பிட்ட நபரின் உறவினர்கள் அமெரிக்காவில் வசிப்பவர்களாக இருக்கவேண்டியது கட்டாயமாகும். இல்லையெனில், சம்பந்தப்பட்ட நபர், அமெரிக்காவில் தகுதியுள்ள 10 அமெரிக்கர்களுக்கு முழுநேர நிரந்தர வேலைவாய்ப்பை அளித்திடும் வகையில், ஏதாவது ஒரு நிறுவனத்தில் முதலீடு செய்பவராகவோ இருக்கவேண்டும் என்பது அமெரிக்க விசா சட்டவிதிகளாகும்.

அமெரிக்கா போறோம், செட்டிலாறோம்
 

அமெரிக்கா போறோம், செட்டிலாறோம்

அமெரிக்கா.... இன்றைக்கு இந்தியாவிலுள்ள நடுத்தர மக்கள் முதல் மெத்த படித்த இளைஞர்களை வரை அனைவராலும் விரும்பப்படும் நாடாகும். அதிலும் தகவல் தொழில்நுட்பத்துறையில் பட்டம் பெற்ற அனைத்து இளைஞர்களின் கனவு தேசமாகவே அமெரிக்கா இருந்து வருகிறது. இவர்கள் அனைவருமே எப்படியாவது ஒரு நல்ல ஐடி நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்து அப்படியே அமெரிக்காவில் போய் செட்டிலாக வேண்டும் என்றுதான் கனவு கண்டு கொண்டிருப்பார்கள்.

இந்தியர்களின் எண்ணிக்கை

இந்தியர்களின் எண்ணிக்கை

இன்றைக்கும் லட்சக்கணக்கான இந்தியர்களும் அமெரிக்காவில் வாழ்ந்து வருகின்றனர். அதோடு அங்கே வசிக்கும் இந்தியர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் இந்தியர்களின் எண்ணிக்கை சுமார் 38 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக புள்ளிவிவர அறிக்கை தெரிவிக்கிறது.

மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

அதேபோல் அமெரிக்க சென்று உயர்கல்வி படிப்பவர்களின் எண்ணிக்கையும் தொடர்ச்சியாக அதிகரித்த வண்ணம் உள்ளன. இது குறித்து சர்வதேச கல்வி சந்தை ஆய்வறிக்கை வெளியிட்டுள்ள தகவலின் படி, நடப்பு 2019ஆம் ஆண்டில் சுமார் 1 லட்சத்து 96 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் அமெரிக்காவில் உயர் கல்வி படித்து வருவாகவும், கடந்த 2018ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 1 லட்சத்து 86 ஆயிரம் இந்திய மாணவர்கள் அமெரிக்காவில் உயர்கல்வி படித்ததாகவும் அந்த ஆய்வறிக்கை தெரிவிக்கின்றது.

எச்-1பி விசா
 

எச்-1பி விசா

அமெரிக்கா செல்வதற்கு வழங்கப்பட்டு வரும் விசாக்களில் குடியேற்ற உரிமை விசா மற்றும் குடியேற்ற உரிமை அல்லாத என இரண்டு மட்டுமே முக்கியமானவையாகும். இதில் பிற நாடுகளில் வேலை செய்யும் ஊழியர்கள் அமெரிக்காவில் தற்காலிகமாக தங்கி வேலை செய்வதற்காக எச்-1பி என்னும் விசா ஆகும். இவ்வகையான விசாக்கள் குறிப்பிட்ட துறையில் அதிக திறம்படைத்த நிபுணர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது.

கிரீன் கார்டு

கிரீன் கார்டு

மற்றொரு விசாவானது நிரந்தர குடியேற்ற விசா என்றழைக்கப்படும் கிரீன் கார்டு விசா ஆகும். இவ்வகையான விசாக்கள் எச்ஆர்-1044 விசா (HR-1044) என்றழைக்கப்படுகிறது. தற்போது, நீண்ட காலம் அமெரிக்காவில் தங்கி வேலை செய்யும் பிற நாடுகளைச் சேர்ந்தவர்களில் சுமார் 1.20 லட்சம் பேர்களக்கு ஆண்டு தோறும் கிரீன் கார்டு எனப்படும் எச்ஆர்-1044 விசா வழங்கப்பட்டு வருகிறது.

10 பேருக்கு வேலை தரணும்

10 பேருக்கு வேலை தரணும்

கிரீன் கார்டு பெறவேண்டுமெனில், குறிப்பிட்ட நபரின் உறவினர்கள் அமெரிக்காவில் வசிப்பவர்களாக இருக்கவேண்டியது கட்டாயமாகும். இல்லையெனில், சம்பந்தப்பட்ட நபர், அமெரிக்காவில் தகுதியுள்ள 10 அமெரிக்கர்களுக்கு முழுநேர நிரந்தர வேலைவாய்ப்பை அளித்திடும் வகையில், ஏதாவது ஒரு நிறுவனத்தில் முதலீடு செய்பவராகவோ இருக்கவேண்டும் என்பது அமெரிக்க விசா சட்டவிதிகளாகும்.

70 ஆண்டு துயரம்

70 ஆண்டு துயரம்

ஒவ்வொரு ஆண்டும் பிற நாட்டவர்களுக்கு வழங்கப்படும் கிரீன் கார்டுகளின் எண்ணிக்கை 1.20 லட்சமாக இருந்தாலும், இதில் இந்தியர்களுக்கு கிடைப்பதோ வெறும் 7 சதவிகிதம் மட்டுமே. இந்த துயரம் கடந்த 70 ஆண்டுகளாகவே நடந்து வருகிறது. இதனால் அமெரிக்காவில் நிரந்தரமாக குடியேறுவதற்காக வழங்கப்படும் கிரீன் கார்டுக்காக காத்திருக்கும் இந்தியர்களின் எண்ணிக்கை தொடர்ந்து கணிசமாக உயர்ந்து வருகிறது.

உச்ச வரம்பை நீக்கணும்

உச்ச வரம்பை நீக்கணும்

இந்தியர்களின் நிலைமையை நன்கு உணர்ந்துகொண்ட அமெரிக்க பார்லிமென்ட் உறுப்பினர்களில் பெரும்பாலானவர்கள், இந்தியர்களுக்கு வழங்கப்பட்டு வரும் கிரீன் கார்டுகளுக்கான 7 சதவிகித உச்ச வரம்பை நீக்கவேண்டும் என்று தொடர்ந்து வலியுறத்தி வந்தனர். இந்தியர்களுக்கு அதிக அளவில் கிரீன் கார்டு வழங்கினால் அது அமெரிக்கர்களுக்கு அதிக அளவில் வேலை வாய்ப்பையும் அளிக்க உதவும் என்றும் வலியுறுத்தி வந்தனர்.

இந்தியர்களின் எதிர்பார்ப்பு

இந்தியர்களின் எதிர்பார்ப்பு

இதன் தொடர்ச்சியாக இந்தியர்களுக்கு வழங்கப்பட்டு வரும் கிரீன் கார்டுகளின் 7 சதவிகித உச்ச வரம்பை நீக்குவதற்கான மசோதாவை அமெரிக்க பார்லிமென்டில் தாக்கல் செய்ய முன்வந்தனர். அமெரிக்க பிரிதிநிதிகளின் சபையில் மொத்தம் 435 உறுப்பினர்கள் உள்ளனர். மசோதா வெற்றி பெறுவதற்கு 290 எம்பிக்களின் ஆதரவு தேவை என்ற சூழலில் இந்த மசோதா வெற்றிபெற்றால் இந்தியர்களுக்கு அதிக அளவில் பயன் கிடைக்கும் என்பதால் இந்தியர்களும் பெரும் ஆவலுடன் காத்திருந்தனர்.

வெற்றி வெற்றி வெற்றி

வெற்றி வெற்றி வெற்றி

கிரீன் கார்டுக்கான 7 சதவிகித உச்ச வரம்பை நீக்கும் மசோதா மீது கடந்த செவ்வாயன்று அமெரிக்க பிரதிநிதிகளின் சபையில் வாக்கெடுப்பு நடைபெற்றது. அதில் இந்த மசோதா எந்தவித எதிர்ப்பும் இன்றி எளிதாக பெற்றி பெற்றது. இதையடுத்து இந்த மசோதா சட்டமாக்கப்பட்டு அரசிதழில் வெளியிடப்படும். அதன் பின்னர் இந்தியர்கள் அதிக அளவில் கிரீன் கார்டு பெற்று அமெரிக்காவில் நிரந்தரமாக செட்டிலாவதற்கு எந்தவிதமான இடைஞ்சல்களும் இருக்காது என்ற அனைவரும் ஆவலோடு காத்திருக்கின்றனர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Green Card Bill passes in US House; Indians will get more benefit

Indian tech industry youth are delighted after the US parliament passed a bill to eliminate the 7 percent ceiling for the Green Card, which is being offered for permanent immigration in the US.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Goodreturns sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Goodreturns website. However, you can change your cookie settings at any time. Learn more