Automobile துறையில் 32,000 பேருக்கு வேலை போச்சுங்கய்யா! வேலையிழப்பு பயத்தில் 10 லட்சம் பணியாளர்கள்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவின் Automobile துறை அடிமேல் அடி வாங்கிக் கொண்டிருக்கிறது. இந்த Automobile துறை தான் இந்திய பொருளாதாரத்தில் சுமார் 3 சதவிகித இடத்தைப் பிடித்திருக்கிறது.

 

அதோடு இந்த ஒரு துறையில் மட்டும் சுமார் 50 லட்சம் பேருக்கு, நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு கொடுத்துக் கொண்டிருக்கிறது என இந்தியாவின் Automobile உதிரிபாக தயாரிப்புச் சங்கம் சொல்கிறது.

இந்தியாவின் ஆட்டோமொபைல் துறை சார்ந்த அனைத்து பொருட்கள் மற்றும் சேவைகளுக்கும் 18% ஜிஎஸ்டி வரி விதித்திருப்பது, கார் இன்ஷூரன்ஸுக்கான பிரீமியம் அதிகரித்தது, பெட்ரோல் டீசல் விலை உயர்வு, எலெக்ட்ரிக் கார்களை கொண்டு வர அரசு காட்டும் முனைப்பு, பி எஸ் ஸ்டேஜ் 6 விதிகள் மாற்றம்... என பல முனை சிக்கல்களில் இந்திய Automobile துறை கடுமையான விற்பனை சரிவை சந்தித்துக் கொண்டிருக்கிறது.

வேலை இழப்பு

வேலை இழப்பு

இதனால், சுமார் 10 லட்சம் பேர், இந்திய ஆட்டோமொபைல் துறையில் தங்கள் வேலையை இழக்க வாய்ப்பிருப்பதாகவும், அதே இந்திய Automobile உதிரிப் பாகங்கள் தயாரிப்புச் சங்கம் தன் கவலையை, சில வாரங்களுக்கு முன் தெரிவித்திருந்தது. அந்த Automobile சங்கம் சொன்ன விஷயம் தற்போது எதார்த்தத்தில் நடக்கத் தொடங்கி இருக்கிறது. இந்தியா முழுக்க மொத்தம் 286 Automobile டீலர்கள், போதுமான விற்பனை இல்லாததால் தங்கள் கடைகளை இழுத்து மூடி இருக்கிறார்களாம்.

எங்கே

எங்கே

பெரும்பாலும் நகர் புறங்களில் இருந்த Automobile டீலர்கள் தான் இந்த விற்பனைச் சரிவைத் தாங்க முடியாமல் கடையை இழுத்து மூடி இருக்கிறார்களாம். இந்திய ஆட்டோமொபைல் துறையின் Federation of Automobile Dealers Associations (FADA) என்கிற அமைப்பு சொல்லி இருக்கும் கணக்குப் படி மகாராஷ்டிரத்தில் 84 டீலர்கள், தமிழகத்தின் 35 டீலர்கள், டெல்லியில் 27 டீலர்கள், பீஹாரில் 26 டீலர்கள், ராஜஸ்தானில் 21 டீலர்கள் என கடையை மூடி இருக்கிறார்களாம். நாடு முழுக்க, இன்னும் பல டீலர்களும் தங்கள் கடையை மூடலாமா..? என யோசித்துக் கொண்டிருக்கிறார்களாம்.

விளைவு
 

விளைவு

"இப்படி 286 Automobile டீலர்கள் தங்கள் கடையை இழுத்து மூடுவதால் என்ன வந்துவிட்டது" எனக் கேட்கிறீர்களா..? இன்றைய தேதிக்கு சுமார் 32,000 பேர் தங்கள் வேலையை இழந்திருக்கிறார்களாம். அவர்களின் குடும்பத்தின் எதிர்காலம் இன்று கேள்விக் குறியாகி இருக்கிறது. இதோடு ஒழிந்தால் பரவாயில்லை. ஆனால் தொடர்ந்து விற்பனை சரிந்து கொண்டிருந்தால், உற்பத்தியைக் குறைக்க வேண்டி இருக்கும். உற்பத்தியைக் குறைத்தால் ஒப்பந்த அடிப்படையில் வேலை கொடுப்பது குறையும், இதனால் சுமார் 10 லட்சம் பேர் வரை தங்கள் வேலையை இழப்பார்கள் எனச் சொல்லி திகில் கிளப்பி இருக்கிறார்கள் ஆட்டோமொபைல் உதிரிபாக உற்பத்தியாளர்கள் சங்கம். இந்திய ஆட்டோமொபைல் உதிரி பாக தொழிலில் 70% பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் தான் வேலைக்கு அமர்த்தப்படுகிறார்கள் என்பது கவனிக்க வேண்டி இருக்கிறது.

அரசு கொள்கை முடிவுகள்

அரசு கொள்கை முடிவுகள்

இந்திய Automobile உதிரிப் பாக உற்பத்திச் சங்கத்தின் இயக்குநர் வின்னி மேத்தா "அரசு எலெக்ட்ரிக் வாகன விஷயத்தில் ஒரு நிலையான வழிமுறையை கையாள வேண்டும். நிதி ஆயோக் வைக்கும் அபரீவிதமான எலெக்ட்ரிக் வாகன இலக்குகள், இந்திய ஆட்டோமொபைல் துறையை பெரிய அளவில் பதற்றத்துக்கு உள்ளாக்கிக் கொண்டிருக்கிறது." என்கிறார். இந்தியாவில் விற்கப்படும் அனைத்து இருசக்கர வாகனங்களும் 2025 முதல் மின்சார வாகனங்களாக இருக்க வேண்டும் என்கிற இலக்கை வைத்திருப்பதையும், மூன்று சக்கர வாகனங்கள் 2023-க்குள் மின்சார வாகனமாக இருக்க வேண்டும் என்று சொல்வதையும் பார்க்க முடிகிறது. ஆனால் மத்திய நிதி அமைச்சரோ இதுவரை மின்சார வாகனங்களுக்கான இலக்கு காலம் நிர்ணயிக்கவில்லை, வெறும் பேச்சு வார்த்தை தான் நடந்து கொண்டிருக்கிறது என்கிறார்.

வருத்தம்

வருத்தம்

சமீபத்தில் தான், ஏப்ரல் 01, 2020 முதல் இந்திய Automobile துறையினர்கள் பி எஸ் ஸ்டேஜ் 4 ரக வாகனங்களை விற்கக் கூடாது என ஒரு தடையை கொண்டு வந்தார்கள். இப்போது இந்திய Automobile துறையினர் பி எஸ் 6 ஸ்டேஜ்-ல் வாகனங்களைத் தயாரிக்க பல கோடி ரூபாய் முதலீடு செய்து தங்கள் தொழிற்சாலைகளை மாற்றி அமைத்திருக்கிறார்கள். இன்னும் ஏப்ரல் 2020 கூட வரவில்லை. சட்டப் படி இன்னும் சில மாதங்கள் வரை பி எஸ் ஸ்டேஜ் 4 ரக வாகனங்களை விற்கலாம்.

அடி வேண்டாம்

அடி வேண்டாம்

அதற்குள் Automobile துறையினர் எல்லோரையும் மின்சார வாகனங்களைத் தயாரிக்கச் சொல்வது எப்படி சாத்தியப்படும் என பஜாஜ், டிவிஎஸ் போன்ற இந்தியாவின் முன்னணி Automobile நிறுவனங்கள், தங்கள் வருத்தத்தையும், பிசினஸ் சிக்கலையும் அரசிடம் எடுத்துச் சொல்லி பதிவு செய்தது. ஏற்கனவே ஜிஎஸ்டி, புதிய பி எஸ் 6 விதிமுறைகள் என பல விஷயத்தில் பலமாக விற்பனையில் அடி வாங்கி இருக்கும் Automobile துறையை மின்சார வாகனம் மூலம் மேலும் அடிக்க வேண்டாம் என வாய் விட்டு கதறுகிறார்கள் Automobile நிறுவனத்தினர்கள்.

10 லட்சம் பேர்

10 லட்சம் பேர்

இந்திய சுற்றுச்சூழலை பாதுகாக்க, மின்சார வாகனங்களைக் கொண்டு வருவது சரி தான். ஆனால் அதற்கு விலையாக, இந்திய Automobile துறைக்கு நஷ்டம் ஏற்படுத்துவதோடு மட்டும் இல்லாமல் 10 லட்சம் பேரின் வேலையைக் கேட்பது சரியா..? இதை அரசு கொஞ்சம் கருத்தில் எடுத்துக் கொண்டு தங்கள் மின்சார வாகனங்களுக்கான இலக்குகள் மற்றும் கொள்கைகளில் சில மாற்றங்களைக் கொண்டு வர வேண்டும். அரசு செய்யும் என்கிற நம்பிக்கையைத் தவிர வேறு ஒன்றும் இல்லாமல் காத்திருக்கிறது இந்திய Automobile துறை.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Indian automobile industry may lay off 10 lakh employees 32000 lost their job

Indian automobile industry may lay off 10 lakh employees 32000 lost their job
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X