ஓரே மாதத்தில் 40 லட்சம் வேலைவாய்ப்புகள்.. உண்மையா..?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்திய பொருளாதாரம் ஒருபக்கம் சரிவில் தத்தளித்து வரும் நிலையில் குறைந்து வரும் வேலைவாய்ப்பு எண்ணிக்கை மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட இந்திய ஆட்டோமொபைல் துறையில் ஏற்பட்டுள்ள வர்த்தக சரிவால் வாகன உற்பத்தி நிறுவனங்கள் உற்பத்தியைக் குறைத்துள்ளதாகவும், இதனால் நாடு முழுவதும் கிட்டத்தட்ட 1 லட்சம் பேர் வேலைவாய்ப்பு இழந்துள்ளதாகச் செய்திகள் வெளியானது.

 

ஆனால் தற்போது வெளியாகியுள்ள செய்தி சற்று ஆறுதலாக அமைந்துள்ளது என்றால் மிகையில்லை.

CIME அமைப்பு

CIME அமைப்பு

இந்திய பொருளாதாரத்தைக் கண்காணிக்கும் அமைப்பான CIME அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் 2019ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் வேலைவாய்ப்புகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. இக்காலகட்டத்தில் மட்டும் சுமார் 40.5 கோடி பேர் வேலைவாய்ப்பில் உள்ளதாக அறிவித்துள்ளது.

40 லட்சம் வேலைவாய்ப்புகள்

40 லட்சம் வேலைவாய்ப்புகள்

இது ஜூன் மாதத்தை ஒப்பிடுகையில் 40 லட்சம் அதிகமாகும். சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால் ஜூலை மாதத்தில் மட்டும் இந்தியாவில் சுமார் 40 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகியுள்ளதாகத் தெரிகிறது. கடந்த நிதியாண்டின் ஜூலை மாதத்தில் புதிதாக உருவாகியுள்ள எண்ணிக்கை 39 லட்சமாக இருந்தது.

வளர்ச்சிப் பாதை
 

வளர்ச்சிப் பாதை

2017ஆம் ஆண்டில் ஒரு மாதத்தில் வேலைவாய்ப்பு எண்ணிக்கை 40.3 கோடியிலிருந்து 40.9 கோடியாக வாயிலாக இருந்தது. இதன் சராசரி 40.65 கோடி வேலைவாய்ப்புகள்.

இதுவே 2018ஆம் ஆண்டை எடுத்துக்கொண்டால் சராசரி அளவு 40.1 கோடி ரூபாயாக இருந்தது. இந்நிலையில் 2019ஆம் ஆண்டின் முதல் 4 மாதத்தில் இதன் அளவு 40.2 கோடியாக உயர்ந்துள்ளது வேலைவாய்ப்பு துறையில் ஏற்பட்டுள்ள சாதகமான சூழ்நிலையை காட்டுகிறது.

ஜூலை 2019

ஜூலை 2019

இதை ஒப்பிடுகையில் ஜூலை 2019இல் இதன் எண்ணிக்கை 40.5 கோடி என்பது வேலைவாய்ப்பு துறையில் ஏற்பட்டுள்ள மாற்றத்தைக் காட்டுகிறது. இதன் மூலம் 2018இல் உருவான வேவைவாய்ப்புகள் பிரச்சனைகளிலிருந்து தற்போது இந்தியச் சந்தை மீண்டு உள்ளது என்று சொன்னால் மிகையில்லை.

இந்தியக் கிராமம்

இந்தியக் கிராமம்

இந்த உயர்வு அனைத்தும் இந்தியக் கிராமங்களில் உருவான புதிய வேலைவாய்ப்புகள் மூலம் ஏற்பட்டுள்ளது என CIME அமைப்பின் ஆய்வறிக்கை கூறுகிறது.

ஜூலை மாதத்தில் நகரங்களில் 27 லட்ச வேலைவாய்ப்புகள் இழந்தாலும், கிராமங்களில் 70 லட்ச வேலைவாய்ப்புகள் உருவானதாக CIME அறிக்கை கூறுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Employment increases in July 2019

Reliance Industries and UK's BP plc have agreed to form a new joint venture to set up petrol pumps and retail aviation turbine fuel to airlines in India, the two companies said on Tuesday. Reliance's existing 1,400-odd petrol pumps, as well as 31 aviation fuel stations, will be transferred to the new joint venture where BP will hold 49 per cent equity stake.
Story first published: Wednesday, August 7, 2019, 15:52 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X