Reliance-ன் அடுத்த அதிரடி..! உலக லாஜிஸ்டிக்ஸ் ஹப்பை அமைக்க திட்டம்! அதுவும் எங்கு தெரியுமா..?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

போபால்: Reliance நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி, மத்தியப் பிரதேசத்தில், Reliance நிறுவனத்தின் உலக லாஜிஸ்டிக்ஸ் ஹப்பை நிறுவ திட்டமிடுவதாகச் சொல்லி இருக்கிறார்.

மத்தியப் பிரதேசத்தில் Reliance நிறுவனத்தின் உலக லாஜிஸ்டிக்ஸ் ஹப் வருவதால், அது மத்தியப் பிரதேச மாநிலத்தின் தொழில் வளத்தை மேம்படுத்த உதவும். அதோடு வர்த்தகமும், வேலைவாய்ப்பும் அதிகரிக்கும் எனவும் மத்தியப் பிரதேசத்தின் முதல்வர் கமல்நாத் சொல்லி இருக்கிறார்.

சில தினங்களுக்கு முன் தான் மத்தியப் பிரதேச முதல்வர், Reliance நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானியை மும்பையில் சந்தித்திருக்கிறார். அப்போதே மத்தியப் பிரதேசத்தில் முதலீடு செய்ய அழைத்தாராம்.

8 வயதில் விபத்து.. 48 வயதில் இழப்பீடு.. வட்டியுடன் ரூ.1.42 கோடி.. உச்ச நீதிமன்றம் அதிரடி! 8 வயதில் விபத்து.. 48 வயதில் இழப்பீடு.. வட்டியுடன் ரூ.1.42 கோடி.. உச்ச நீதிமன்றம் அதிரடி!

மபியில் முதல் கடை

மபியில் முதல் கடை

ஏற்கனவே Reliance நிறுவனத்துக்கு போட்டியாக, அமேஸான் மற்றும் வால்மார்ட் போன்ற நிறுவனங்களுக்கு மத்தியப் பிரதேசத்தில் லாஜிஸ்டிக்ஸ் ஹப்புகள் இருப்பது குறிப்பிடத்தக்கது. இப்போது இவர்களுக்கு போட்டியாக Reliance குழுமமும் தன் உலக லாஜிஸ்டிக்ஸ் ஹப்பை மத்தியப் பிரதேசத்தில் திறக்க இருப்பதால் தான் இது கொஞ்சம் பெரிய செய்தியாகி இருக்கிறது. Reliance குழுமத்துக்கு இந்தியாவில் மும்பை மற்றும் பெங்களூரூ பகுதிகளில் ஏற்கனவே லாஜிஸ்டிக்ஸ் ஹப்புகள் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற தொழில்கள்

மற்ற தொழில்கள்

மத்தியப் பிரதேசத்தில் லாஜிஸ்டிக்ஸ் ஹப்புகளைத் தொடங்குவதோடு, மின் கலன் (Battery) உற்பத்தித் தொழிலையும் நிறுவ ஆசைப்படுவதாகச் சொல்லி இருக்கிறார் Reliance குழுமத் தலைவர் முகேஷ் அம்பானி. அதோடு மத்தியப் பிரதேசத்தில் பூக்கள் விவசாயம், உணவுப் பதப்படுத்துதல், டேட்டா பிராசசிங் மற்றும் எனர்ஜி பிராசசிங் போன்ற வேலைகளைச் செய்யலாம் எனவும் சொல்லி இருக்கிறார் Reliance குழுமத் தலைவர் முகேஷ் அம்பானி.

மபி கொள்கை

மபி கொள்கை

மத்தியப் பிரதேசத்தின் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் அதன் தேவை, கொள் திறன் போன்றவைகள் அடிப்படையில், அதன் முதலீட்டுக் கொள்கைகள் மாறுபடும் எனச் சொல்லி இருக்கிறார் முதல்வர் கமல்நாத். எங்கள் புதிய வேலைவாய்ப்பு கொளைகள் படி, எங்கள் மாநிலத்தில் வேலைவாய்ப்பு அதிகரிப்பதை உறுதி செய்வது மற்றும் பொருளாதார நடவடிக்கைகள் அதிகரிப்பதை உறுதி செய்வது எனச் சொல்லி இருக்கிறார் மத்தியப் பிரதேசத்தின் முதல்வர் கமல்நாத். எது எப்படியோ தன் மத்தியப் பிரதேசத்தில், இந்தியாவின் மிகப் பெரிய கார்ப்பரேட் கம்பெனியான Reliance-ன் லாஜிஸ்டிக்ஸ் ஹப் வந்தமையும் படி செய்திருக்கிறார் கமல்நாத்.

சந்திப்பு

சந்திப்பு

அதோடு நின்றாரா..? எனக் கேட்டால் இல்லை. குமார மங்களம் பிர்லா, நடராஜன் சந்திரசேகரன், பவன் கோயன்கா, பிரவீர் சின்ஹா, திலிப் கோர், ஹர்ஷ் கோயங்கா, திலிப் அகூரி, யஸ்வந்த் ஹோல்கர் அம்ரிஷ் படேல் என பல முன்னனி தொழில் நிறுவனங்களின் உயர் அதிகாரிகள் மற்றும் பிசினஸ் மேன்களை மத்தியப் பிரதேசத்தின் முதல்வர் கமல்நாத்தே சந்தித்துப் பேசி, மத்தியப் பிரதேசத்தில் தொழில் துறைக்கு சாதகமான சூழலைக் கொண்டு வரப் போகிறார்களாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

reliance is planning to set up its global logistics hub in mp

reliance is planning to set up its global logistics hub in mp
Story first published: Friday, August 9, 2019, 16:14 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X