Automobile துறையில் அதிரடி..! 2 நாட்களுக்கு வேலை இல்லை! ஆட் குறைப்பு செஞ்சிக்குங்க..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்திய ஆட்டோமொபைல் துறையில் பலத்த நெருக்கடி நிலவிக் கொண்டிருக்கிறது என்பதை அதன் விற்பனை விவரங்களைப் பார்த்தாலே தெரியும்.

இப்போது ஏகப்பட்ட ஆட்டோமொபைல் மற்றும் ஆட்டோமொபைல் உதிரிபாக நிறுவனங்கள், தங்கள் உற்பத்தியைக் குறைத்துக் கொள்ளத் தொடங்கி இருக்கிறார்களாம்.

அதிலும் குறிப்பாக டிவிஎஸ் மற்றும் Mitsuba Sical என்கிற நிறுவனங்கள் தங்கள் மனித வளங்களைக் குறைப்பது மற்றும் வேலையில்லா நாட்களை அறிவிப்பது என தங்கள் உற்பத்தி குறைப்பு நடவடிக்கைகளில் ஈடுபடத் தொடங்கி இருக்கிறார்கள்.

Mitsuba Sical India

Mitsuba Sical India

கடந்த ஆகஸ்ட் 09, 2019 அன்று Mitsuba Sical வெளியிட்டிருக்கும் அறிக்கையில் "இந்திய ஆட்டோமொபைல் துறை கடந்த ஜூன் 2019 காலாண்டில் கடுமையான சூழலில் பயணித்துக் கொண்டிருக்கிறது என்பதை நீங்கள் அறிவீர்கள். அதற்கு சாட்சியாக ஆட்டோமொபைல் விற்பனை கடுமையாக் பாதிக்கப்பட்டிருப்பதைப் பார்க்க முடிகிறது. இந்தியாவின் ஆட்டோமொபைல் விற்பனை சரிவுக்கு பலவீனமான பொருளாதார சூழல், போதுமான கடன் கிடைக்காத நிலை, நிலையற்ற கொள்கைகள், அசாதாரண பருவநிலை மாற்றங்கள், இந்திய கிராமபுறங்களில் இருக்கும் பொருளாதார அழுத்தம், சரியும் நுகர்வு என காரணிகள் நீள்கின்றன" எனக் கடிதத்தைத் தொடங்கி இருக்கிறார்கள்.

சரிவு விரிவு

சரிவு விரிவு

மேலும் "மாருதி சுசூகி நிறுவனத்தின் விற்பனை கடந்த ஜூலை 2018-ஐ விட ஜூலை 2019-ல் 33.5 % சரிந்திருக்கிறது. அதே போல ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனத்தின் விற்பனையும் 21.18% சரிந்து இருக்கிறது. ஹோண்டா நிறுவனத்தின் விற்பனை 10.77% சரிந்திருக்கிறது. மஹிந்திரா நிறுவனத்தில் 15% சரிவு.
டாடா மோட்டார்ஸில் 34% சரிவு என ஒவ்வொரு மாதமும் இந்திய ஆட்டோமொபைல் விற்பனை சரிவு அதிகரித்துக் கொண்டே போகிறது" என சந்தை நிலவரத்தைச் சொல்லி இருக்கிறார்கள்.

சப்ளையர்கள் அடி

சப்ளையர்கள் அடி

"இப்படி ஆட்டோமொபைல் நிறுவனங்களின் விற்பனை சரிவு அதிகரித்துக் கொண்டிருப்பதால், நம்மை (Mitsuba Sical India) போன்ற முக்கிய சப்ளையர்கள் பாதிக்கப்பட்டிருக்கிறோம். அதோடு, ஒட்டுமொத்த இண்டிய ஆட்டோமொபைல் துறையும் சுமார் 15 - 20 சதவிகித உற்பத்தியைக் குறைத்திருப்பதாகச் சொல்கிறது இந்திய ஆட்டோமொபைல் உதிரிபாக உற்பத்தியாளர்கள் சங்கமும் சொல்லி இருக்கிறது. ஆகையால் அதன் எதிரொலியாக உதிரிபாக நிறுவனங்களிலும் உற்பத்திச் சரிவு ஏற்பட்டிருக்கிறது" என விளக்கி இருக்கிறார்கள்.

மனித வளத்தை குறை

மனித வளத்தை குறை

"மேலே சொன்ன காரணங்களால், நாமும் (Mitsuba Sical India), நம்முடைய உற்பத்தியை சந்தை தேவைக்கு தகுந்தாற் போல குறைத்துக் கொள்ளலாம். எனவே நம் மனித வளம் போன்றவைகளை குறைத்துக் கொள்ளவும். அதுவரை திட்டமிட்ட படி உற்பத்தியைக் குறைத்துக் கொள்ளவும்" எனச் சொல்லி பயம் காட்டி இருக்கிறது Mitsuba Sical என்கிற ஆட்டொமொபைல் உதிரிபாக நிறுவனத்தின் பர்சேஸ் பிரிவில் இருந்து வந்த கடிதம்.

டிவிஎஸ் லூகாஸ்

டிவிஎஸ் லூகாஸ்

Mitsuba Sical நிறுவனத்தைப் போல லூகாஸ் டிவிஎஸ் நிறுவனமும் தன் உற்பத்தி குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கிறது. வரும் ஆகஸ்ட் 16 மற்றும் 17 தேதிகள் வேலையில்லா நாட்களாக அறிவித்து இருக்கிறார்கள். அதற்கு காரணமாக ஆட்டோமொபைல் துறையில் நிலவும் மந்த நிலையையே இவர்களும் சுட்டிக் காட்டி இருக்கிறார்கள். லூகாஸ் டிவிஎஸ் நிறுவனத்தில் ஒரு சில பிரிவுகள் போக மற்ற அனைத்து பிரிவுகளும் இரண்டு நாட்கள் வேலையில்லாமல் மூடப்பட இருப்பதையும் அந்தக் கடிதத்திலேயே சொல்லி இருக்கிறார்கள்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

automobile industry companies lucas tvs mitsuba sical taking steps to reduce production

automobile industry companies lucas tvs mitsuba sical steps to reduce production
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X