அடேங்கப்பா.. டெல்லி மும்பையை விஞ்சும் பெங்களூரு.. அதிகரித்து வரும் வாடகை கட்டணம்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை : ஆசியாவிலேயே பெங்களூருவில் அலுவலகங்களுக்கான வாடகை கட்டணம் அதிகம் உள்ளதாகவும், அதிலும் நடப்பு ஆண்டில், இரண்டாவது காலாண்டில், 9 சதவிகிதம் அதிகரிப்புடன் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

நாட்டில் வேகமாக நகர்ந்து வரும் வணிகத்தின் மத்தியில், மத்திய வணிக பகுதியாக இருப்பது பெங்களூரு தான் என்றும், அதிலும் ஆசிய பசிபிக் பிராந்தியத்திலேயே ஐந்தாவது இடத்தில் உள்ள பெங்களூவில், அலுவலக வாடகை கட்டணங்கள் இவ்வாறு அதிகரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

அடேங்கப்பா.. டெல்லி மும்பையை விஞ்சும் பெங்களூரு.. அதிகரித்து வரும் வாடகை கட்டணம்!

நைட் பிராங்க் (Knight Frank) நடத்திய ஆய்வில், இந்தியாவில் பெங்களூருவில் தான் அதிக அலுவலக வாடகை என்றும், இது முன்பை விட அதிகளவில் நல்ல வளர்ச்சி கண்டுள்ளதாகவும் அந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அதிலும் தற்போது ஒரு சதுர அடிக்கு 125 ரூபாய் கொடுக்க வேண்டியுள்ளது என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் நைட் பிராங்க் வெளியிட்டுள்ள அறிக்கையில், அலுவலக வாடகையில் அதிகளவில் உள்ள முதல் 20 நகரங்களை பட்டியலிட்டுள்ளதாகவும், இதில் பெங்களூரு 9 சதவிகித வளர்ச்சியுடனும், மும்பை 5 சதவிகித வளர்ச்சியுடனும், டெல்லி 1.4 சதவிகிதமும் அதிகரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இனி எல்லோரும் கண்டிப்பா இன்சூரன்ஸ் எடுங்க.. பிரச்சனை எப்ப வேணா வரலாம்?இனி எல்லோரும் கண்டிப்பா இன்சூரன்ஸ் எடுங்க.. பிரச்சனை எப்ப வேணா வரலாம்?

இதே சர்வதேச அளவில் மெல்போர்ன் அதிகளவில் வளர்ச்சி கண்டுள்ளதாகவும், குறிப்பாக கடந்த ஆண்டோடு ஒப்பிடும்போது 16 சதவிகிதம் அதிகரித்தும், டோக்கியோ 12 சதவிகித வளர்ச்சியுடனும், பாங்காக் 10.4 சதவிகிதத்துடனும், சிங்கப்பூர் 10.3 சதவிகிதத்துடனும், இந்தியாவைப் பொறுத்தவரை பெங்களூருவிலும் அதிகளவு அலுவலக வாடகை கட்டணம் அதிகரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும் நடப்பு ஆண்டின் முதல் பாதியில், புதியவர்களின் வருகை அதிகம் இருந்ததால், இந்திய அலுவலக கட்டிடங்களின் வாடகை நிலையானதாக இருந்தது என்றும், இது 23 மில்லியன் சதுர அடியை புதியதாக சேர்த்துள்ளது என்றும் கூறப்படுகிறது.

இந்தியாவின் அலுவலக சந்தைகள் உலகளாவிய மற்றும் தேசிய பொருளாதார நிலைமைகளின் தலைவலிகளையும் தாண்டி, ஒரு சுவாரஸ்மான வளார்ச்சி கதையைக் கூறுகின்றன. மேலும் குத்தகை அளவுகளும் தொடர்ச்சியாக வளர்ந்து வரும் வரலாற்று உச்சத்தில் உள்ளது. ஆக இது கார்ப்பரேட்களின் உலகம். இது நீண்ட கால கண்ணோட்டத்தில் ஒரு உயர் மட்ட நம்பிக்கையை குறிக்கிறது என்றும் நைட் பிராங்க் நிறுவனத்தின், இந்தியாவின் தலைவரும் நிர்வாக இயக்குனருமான ஷிஷிர் பைஜால் கூறியுள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Bengaluru’s CBD became the fastest growing prime office space in the country

Bengaluru’s CBD became the fastest growing prime office space in the country
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X