தீபாவளியை நோக்கி படையெடுக்கும் ஆஃபர்கள்.. இனியாவது விற்பனை அதிகரிக்குமா.. கதறும் நிறுவனங்கள்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி : ஒரு புறம் தொய்ந்து போயுள்ள நிறுவனங்கள் விற்பனை அடுத்து வரும் பண்டிகை கால சீசனிலாவது, நிச்சயம் அதிகரிக்கும் என்ற எதிர்ப்பார்ப்பில் உள்ளனர்.

அதிலும் பல நிறுவனங்கள் தங்களது பொருட்களை ஊக்குவிக்க பல்வேறு வித சலுகைகளையும் தள்ளுபடிகளையும் அறிவித்து வருகின்றன.

இது தவிர தங்களது பொருட்களை பற்றிய விளம்பரங்களுக்காக பல கோடியையும் செலவு செய்து வருகின்றன.

பண்டிகை கால விற்பனை

பண்டிகை கால விற்பனை

பொதுவாகவே வருட விற்பனையில், 20 - 30 சதவிகிதம் திருவிழாகால விற்பனையாக இருந்தும் வரும் நிலையில், ஏற்கனவே, பொருளாதார பின்னடைவு, விற்பனை மந்தம் இவற்றை மட்டுமே கண்டு வந்த சில்லறை விற்பனையாளர்கள், வரப்போகின்ற பண்டிகை கால விற்பனையாவது களைக் கட்டுமா? என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர். இதற்காக தற்போதிலிருந்தே ஆயத்தமாகியும் வருவதாகவும் கூறப்படுகிறது. இதற்காக சில நிறுவனங்கள் பல சலுகைகளையும் வழங்க தொடங்கி விட்டன.

ஓணமும் தீபாவளியும் தான் டார்கெட்

ஓணமும் தீபாவளியும் தான் டார்கெட்

குறிப்பாக ஆடைகள், ஆபரணத் துறை, வீட்டு உபயோகப் பொருட்கள் உள்ளிட்ட பல சில்லறை விற்பனையாளர்கள் பெரும் எதிர்ப்பார்ப்பில் உள்ளனர். அதிலும் கடந்த செஉபடம்பர் 1 முதலே தொடங்கிய ஓணம் மற்றும் அதைத் தொடர்ந்து வர விருக்கும் தீபாவளி பண்டிகைகள் என அவர்களது இலக்காக உள்ளது. அதிலும் கடந்த ஆண்டு இதே பண்டிகை கால விற்பனை, இந்த சமயத்திலும் இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

விளம்பரத்துக்காக அதிக செலவு செய்யும் நிறுவனங்கள்

விளம்பரத்துக்காக அதிக செலவு செய்யும் நிறுவனங்கள்

குறிப்பாக வீட்டு உபயோகப் பொருட்கள் உற்பத்தியாளாரான பிலிப்ஸ், ஜூஸசர்கள், ஏர் பியூரிபையர், மின்சாரா ஷேவிங் சாதனம் உள்ளிட்ட இன்னும் பல பொருட்களை உற்பத்தி செய்யும் இந்த நிறுவனம், வரவிருக்கும் பண்டிகைக்காக கடந்த ஆண்டை விட 10 - 15 சதவிகிதம் விளம்பரங்களுக்காக அதிக செலவிட்டுள்ளதாகவும், இதே போல கடந்த ஆண்டை விட, இந்தாண்டில் புதிய பொருட்கள் அதிகம் அறிமுகம் செய்துள்ளதாகவும், அதிகளவில் ஆஃபர்களும், கடந்த இரண்டு வாரங்களாகவே வாடிக்கையாளர்களை கவரும் விதமாக விளம்பரப்படுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

விற்பனை அதிகரிக்கும் என்று எதிர்பார்ப்பு

விற்பனை அதிகரிக்கும் என்று எதிர்பார்ப்பு

இது தவிர அதிகளவில் விற்பனையாகும் வீட்டு உபயோகப்பொருட்களான பிரிட்ஜ், வாஷிங்மெஷின் உள்ளிட்ட சில சாதனங்கள வழக்கம் போல, இந்த பருவத்தில் அதிகம் விற்பனையாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுவதாகவும், அதே இப்பொருட்களுக்கான விலையை அதிகரிக்கும் பட்சத்தில், அது விற்பனையை பாதிக்குமே என்ற பயத்திலேயே எந்த நிறுவனமும் விலையை அதிகரிக்கவில்லை. ஏனெனில் ஏற்கனவே தேவையும் குறைவாக உள்ள நிலையில், இது மிக பின்னடைவை கொடுக்கும் என்பதால் விலையில் ஏதும் மாற்றம் செய்யப்படவில்லை என்றும், மேலும் நிதி வசதி குறித்தான ஆஃபர்களும் விற்பனையை அதிகரிக்கும் என்றும் கோத்ரேஜ் நிறுவனம் கூறியுள்ளது.

தங்கத்தில் என்ன சலுகை

தங்கத்தில் என்ன சலுகை

உச்சானிக் கொம்பை தொட்டிருக்கும் தங்கத்தின் விலையானது, தாறுமாறாக ஏறிவரும் நிலையில், பல எக்சேஞ்ச் ஆஃபர்களை அளித்து வருகின்றன. அதிலும் கேரளாரவை அடிப்படையாகக் கொண்ட கல்யாண் ஜூவல்ஸ் நிறுவனம் பழைய தங்க விற்பனையில் 10 சதவிகித விற்பனையை அதிகரித்துள்ளது. அதிலும் திருமண விழா காலம் என்பதால் விற்பனை களை கட்டியுள்ளதாகவும், அதிலும் செபடம்பர் மாதம் முதல் இது இன்னும் அதிகரித்திருப்பதாகவும் கூறியுள்ளது.

வளர்ச்சி பராவயில்லை

வளர்ச்சி பராவயில்லை

இதே தங்க நகை சில்லறை விற்பனை யாளரான, டைட்டன் கோ நிறுவனம்(Titan Co.,) கடந்த ஜூன் காலாண்டும் அதன் வருவாய் 13.3 சதவிகிதம் அதிகரித்துள்ளதாகவும் கூறியுள்ளது, தங்க நகை விற்பனை தவிர இந்த நிறுவனம் வைரம் விற்பனையிலும் ஈடுபட்டு வருவதாகவும், இதிலும் தற்போது நல்ல வளர்ச்சி கண்டிருப்பதாகவும் கூறியுள்ளது.

1000 ரூபாய்க்கு ரூ.500 மதிப்பிலான கிஃப்ட் வவுச்சர்

1000 ரூபாய்க்கு ரூ.500 மதிப்பிலான கிஃப்ட் வவுச்சர்

இதே ஆடைகள் மற்றும் சில்லறை வர்த்தகத்தில் ஈடுபட்டு வரும் இந்தியா பேம்லி மார்ட் நிறுவனம் பல்வேறு சலுகைகள் வழங்க உள்ளதாகவும், குறிப்பாக துணி மற்றும் காலணிகளை விற்கும் சில்லறை நிறுவனம் 1000 ரூபாய் பொருட்களை வாங்கினால், 500 கிஃப்ட் வவுசர் என்ற சலுகையை கொடுத்துள்ளதாகவும் கூறியுள்ளது.

10 – 12% விளம்பரம் அதிகம்

10 – 12% விளம்பரம் அதிகம்

மேலும் இந்த எஃப்.எம்.சி.ஜி, துணிகள், காலணிகள், வீட்டுப் உபயோகப்பொருட்கள், தங்க நகை ஆபரணங்கள் என அனைவரும் தங்களது பொருட்களை முன்னிருத்த பல கோடிகளை செலவிட்டுள்ளதாகவும், இது நடப்பாண்டில் 20,000 கோடி ரூபாயை தாண்டும் என்றும், இது கடந்த 2018ம் ஆண்டை விட 10 - 12 சதவிகிதம் அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது.

ஜி.டி.பியை ஊக்குவிக்கும்

ஜி.டி.பியை ஊக்குவிக்கும்

இது எல்லாவற்றையும் விட இத்திருவிழாக் காலங்களில் மக்கள் பொருட்களை வாங்கும்போது தேவை அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது, முன்னதாக கடந்த காலாண்டில் வெளிவந்த மொத்த உள் நாட்டு உற்பத்தி குறித்தான வெளியீடு கடந்த ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 5 சதவிகிதமாக குறைந்தது. ஆக இத்திருவிழா சீசனில் ஆவது தேவை அதிகரிக்கும் என்றும், இதனால் அடுத்த காலாண்டில் ஜி,டி.பி அதிகரிக்கலாம் என்றும், இதற்காக அரசும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது, இது விற்பனையும் இன்னும் கொஞ்சம் ஊக்குவிக்கும் என்றும் கூறப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: retailers diwali
English summary

Retailers hope sales will increase in festival season.

Most of the retailers expect to increase sales in coming festival season, also they spend more cost to promote their products.
Story first published: Sunday, September 8, 2019, 14:49 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X