ஆட்டோமொபைல் துறையின் சரிவிற்குக் காரணம் ஓலா, உபர்: நிர்மலா சீதாராமன்

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்திய ஆட்டோமொபைல் சந்தை எப்போதும் இல்லாத வகையில் சுமார் 20 வருட சரிவைச் சந்தித்து உள்ளது. இதனால் பல லட்சம் பேர் வேலைவாய்ப்பை இழந்தது மட்டும் அல்லாமல் முன்னணி நிறுவனங்கள் பலவும் உற்பத்தியைத் தற்காலிகமாக நிறுத்தியுள்ளது.

இவை அனைத்திற்கும் காரணம் ஆன்லைன் டாக்ஸி நிறுவனங்களான ஓலா, உபர் தான் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

20 வருட சரிவு
 

20 வருட சரிவு

இந்திய ஆட்டோமொபைல் சந்தை சில வருடங்களுக்கு முன்பு வரையில் கூடச் சிறப்பான நிலையில் தான் இருந்தது. ஆனால் ஆகஸ்ட் மாத விற்பனை பார்க்கும் போது 20 வருட சரிவில் இருப்பதாக SIAM அமைப்பின் தகவல் கூறுகிறது.

இத்தகைய நிலைக்குக் காரணம் இன்றைய இளைய தலைமுறை தான் காரணம் எனத் தெரிவித்துள்ளார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.

நிர்மலா சீதாராமன்

நிர்மலா சீதாராமன்

இதை விளக்கிய நிர்மலா சீதாராமன் அவர்கள், இன்றைய இளைய தலைமுறையினர் EMI செலுத்துவதில் விருப்பம் இல்லை ஆகவே தான் சொந்த கார் வாங்காமல் அனைவரும் ஓலா, உபர் போன்ற ஆன்லைன் டாக்ஸி சேவைகளைப் பயன்படுத்துகிறார்கள் எனச் சில ஆய்வுகள் கூறுவதாக நிதியமைச்சர் விளக்கம் அளித்தார்.

இது எந்த அளவிற்கு உண்மை என்பது ஆராயும் முன், கார்களின் மீதான ஜிஎஸ்டி, காப்பீடு கட்டுப்பாடுகள் போன்ற மக்களையும், பிஎஸ்6 தர கட்டுப்பாடுகள் உற்பத்தி நிறுவனங்களையும் அதிகளவில் பாதித்த காரணத்தால் இந்த நிலைமை என்பதையும் நாம் உணர வேண்டும்.

ஜிஎஸ்டி

ஜிஎஸ்டி

இத்தகைய இக்கட்டான சூழ்நிலையில் வருகிற 20ஆம் தேதி ஜிஎஸ்டி அமைப்பின் முக்கியமான கூட்டம் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் கார் மற்றும் பைக் மீதான ஜிஎஸ்டி வரி குறையுமா என்ற கேள்விக்கு இதைப் பற்றித் தற்போது எதுவும் சொல்ல முடியாது என்ற வகையில் எதிர்மறையாகப் பதில் கூறினார் நிதியமைச்சர்.

விற்பனையில் மாபெரும் வீழ்ச்சி
 

விற்பனையில் மாபெரும் வீழ்ச்சி

ஆகஸ்ட் மாதத்தில் இந்தியாவில் கார் விற்பனை அளவு கடந்த ஆண்டை விடவும் 31,6 சதவீதம் வரையில் சரிந்து 196,524 கார்களை மட்டுமே விற்பனையாகியுள்ளது.

பைக் விற்பனையில் 22.24 சதவீத வீழ்ச்சி, மீடியம் மற்றும் ஹெவி வர்த்தக வாகன விற்பனையில் 54.3 சதவீத வீழ்ச்சி, மொத்த வர்த்தக வாகன விற்பனையில் 38.7 சதவீத வீழ்ச்சி பதிவாகி மோசமான விற்பனை அளவை பதிவு செய்துள்ளது.

இதேபோல் நடப்பு நிதியாண்டின் முதல் 5 மாதத்தில் மட்டும் பயணிகள் வாகன விற்பனை 23.54 சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ளது.

SIAM அமைப்பு

SIAM அமைப்பு

இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் அமைப்பு உருவாக்கப்பட்டு விற்பனை அளவுகளைக் குறித்து வைக்கப்பட்ட காலமான 1997-98 ஆண்டுத் தரவுகளில் இருந்து இன்றைய காலகட்டம் வரையில் ஒப்பிடுகையில் இந்த ஆகஸ்ட் மாதம் 20 வருடச் சரிவை பதிவு செய்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Reason behind automobile slowdown is Millennials Prefer Ola, Uber: nirmala Sitharaman

SIAM reported that automobile sales in India have witnessed their worst-ever drop in August this year, Finance Minister Nirmala Sitharaman on Tuesday, 10 September, blamed the BS6 and mindsets of millennial for preferring Ola, Uber for the state of the industry.
Story first published: Wednesday, September 11, 2019, 8:16 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?