மீண்டும் வட்டி குறைப்பு.. அக்.4 ரிசர்வ் வங்கி அதிரடி முடிவு..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சியில் வளர்ச்சி பாதையிலிருந்த இந்தியப் பொருளாதாரம் தற்போது மோசமான நிலையில் உள்ளது. மோடி அரசு பல திட்டங்களைச் சரியாகத் திட்டமிடாமல், பொருளாதாரப் பாதிப்புகள் குறித்து முழுமையான புரிதல் இல்லாமல் அமலாக்கம் செய்யத் திட்டங்கள் நாட்டின் பொருளாதார வளர்ச்சியைப் பாதித்துள்ளது.

இதைச் சமாளிக்க ரிசர்வ் வங்க நடப்பு ஆண்டில் மட்டும் 1.10 சதவீதம் வரையில் குறைத்த நிலையில் அக்டோபர் 4ஆம் தேதி முடிய உள்ள ரிசர்வ் வங்கியின் 4வது இருமாத நாணய கொள்கை கூட்டத்தில் மீண்டும் வட்டியைக் குறைக்க உள்ளதாகத் தெரிகிறது.

ரிசர்வ் வங்கி
 

ரிசர்வ் வங்கி

வெள்ளிக்கிழமை முடிய உள்ள ரிசர்வ் வங்கியின் 4வது நாணய கொள்கை கூட்டத்தில் அரசு அறிவித்துள்ள கார்ப்பரேட் வரிக் குறைப்பு, பொருளாதார வளர்ச்சிக்கான பணிகளைய ஊக்குவிக்கும் வகையிலும், பணியை எளிதாக்கும் வகையிலும் ரிசர்வ் வங்கி 5வது முறையாக வட்டியைக் குறைக்க உள்ளதாகத் தெரிகிறது.

இவ்வட்டிக் குறைப்புப் பண்டிகை காலத்தில் வர்த்தகத்தில் பெரிய அளவில் உதவும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

சக்திகாந்த தாஸ்

சக்திகாந்த தாஸ்

ரிசர்வ் வங்கியின் நாணய கொள்கை அமைப்பிற்கு சக்திகாந்த தாஸ் தலைமையேற்று நடப்பு நிதியாண்டின் 4வது நாணய கொள்கை கூட்டம் துவங்க உள்ளது. இக்கூட்டத்தின் மூடிவை அக்டோபர் 4ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ளது.

வட்டி குறைப்பு

வட்டி குறைப்பு

ஆகஸ்ட் மாதம் நடந்த நாணய கொள்கை கூட்டத்தின் முடிவில் எப்போதும் இல்லாத வகையில் ரிசர்வ் வங்கி சுமார் 35 அடிப்படை புள்ளிகள் வட்டி விகிதத்தைக் குறைத்தது. எப்போதும் குறைந்தபட்சம் 10 அல்லது அதிகப்படியாக 25 அடிப்படை புள்ளிகளை மட்டுமே குறைக்கப்படும் நிலையில், இந்த முறை 35 புள்ளிகள் குறைக்கப்பட்டது பலருக்கும் அதிர்ச்சியை அளித்தது.

இக்குறைப்பின் மூலம் ரெப்போ விகிதம் 5.40 சதவீதமாகக் குறைந்தது.

மீண்டும் வட்டி குறைப்பு
 

மீண்டும் வட்டி குறைப்பு

கடந்த சில வாரங்களாகவே நாட்டின் பொருளாதாரம் மற்றும் வர்த்தகச் சூழ்நிலை மேம்பட வட்டி விகிதம் இன்னும் குறைக்கப்பட வேண்டும் எனப் பல தரப்புகளிடம் இருந்து வந்த கருத்துகள் அனைவரையும் யோசிக்க வைத்தது.

நாட்டின் பொருளாதாரமும், வர்த்தகமும் இப்படியே போனால் பல கோடி வேலைவாய்ப்புகளும், பல லட்ச வேலை இழப்புகள் தான் அதிகரிக்கும் இதைச் சமாளிக்க வேண்டுமெனில் மீண்டும் வட்டியைக் குறைக்க வேண்டும் என ரிசர்வ் வங்கி தீர்மானித்துள்ளது.

கணிப்பு

கணிப்பு

இந்தியாவில் இருக்கும் சிறு, குறு வர்த்தகத் துறையில் வளர்ச்சியைக் கணக்கில் கொண்டு ரிசர்வ் வங்கியின் நாணய கொள்கை கூட்டத்தில் 25 அடிப்படை புள்ளிகள் வரையில் குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வட்டி குறைப்பின் மூலம் ரெப்போ விகிதம் 5.15 சதவீதம் வரையில் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Another rate cut on October 4: RBI MPC

The RBI may cut the key policy rate again on Friday, fifth in row. The RBI governor Shaktikanta Das headed Monetary Policy Committee (MPC) will announce the fourth bi-monthly monetary policy for 2019-20 on Friday, October 4, after its three-day meeting.
Story first published: Monday, September 30, 2019, 8:39 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X