GreenCard: 3.5 லட்சம் இந்தியர்கள் காத்திருப்பு.. சீனர்கள் எத்தனை பேர் தெரியுமா..!!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்திய ஐடி மற்றும் ஊழியர்களுக்கு ஹெச்1பி விசா-வுக்கு அடுத்தது மிகப்பெரிய கனவாக இருப்பது அமெரிக்காவில் கிடைக்கும் வேலை அடிப்படையிலான குடியுரிமை தான், இதைக் கிரீன் கார்டு எனவும் சொல்வோம்.

அமெரிக்காவில் அதிகம் சம்பாதிக்கும் பிற நாட்டுக் குடும்பங்களில் இந்தியர்கள் தான் முதல் இடத்தில் உள்ளனர், இதனால் இந்தியர்களும், இந்திய நிறுவனங்களும் அமெரிக்க அரசு தொடர்ந்து சாதகமான முடிவுகளை எடுத்து வருகிறது.

அமெரிக்கா - சீனா மத்தியில் மீண்டும் வர்த்தகத் தடை, வரி விதிப்பு.. என்ன காரணம்..?!அமெரிக்கா - சீனா மத்தியில் மீண்டும் வர்த்தகத் தடை, வரி விதிப்பு.. என்ன காரணம்..?!

 ஹெச்1பி விசா

ஹெச்1பி விசா

சமீபத்தில் ஹெச்1பி விசா தேர்வு முறையில் சம்பளம் மற்றும் பதவி அடிப்படையில் விசா வழங்கும் விதிமுறையை நீக்கி மீண்டும் லாட்டரி முறையைக் கொண்டு வந்தது. இதேபோல் ஜோ பைடன் ஆட்சிக்கு வந்த நேரத்தில் கிரீன் கார்டு அதாவது அமெரிக்காவில் நிரந்தரக் குடியுரிமை பெறுவதற்குச் சில தரவுகளையும் அறிவித்தார்.

 கிரீன் கார்டு

கிரீன் கார்டு

ஆனால் இன்னும் வேலை அடிப்படையிலான கிரீன் கார்டு பெறுவதற்குச் சுமார் 3,57,720 இந்தியர்கள் விண்ணப்பத்தைக் கூட முழுமையாகச் சமர்ப்பிக்க முடியாமல் நீண்ட காலமாக காத்திருக்கின்றனர் என அந்நாட்டின் அரசு அமைப்பான அமெரிக்கக் குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகள் அமைப்பு தெரிவித்துள்ளது.

சீனா

சீனா

இந்தியர்களுக்கு அடுத்தபடியாக 46,926 சீனர்கள் காத்திருக்கின்றனர். இந்த எண்ணிக்கை இந்தியாவின் 3,57,720-ஐ ஒப்பிடும் போது சுமார் 8 மடங்கு அதிகமாகும். சரி இந்தக் காத்திருப்புக்கு என்ன காரணம்..

 I-140 விண்ணப்பம்

I-140 விண்ணப்பம்

அமெரிக்காவில் ஹெச்1பி விசா அடிப்படையில் கிரீன் கார்டு பெற நினைப்பவர்கள் முதலில் I-140 சமர்ப்பிக்க வேண்டும், இந்த விண்ணப்பம் ஒப்புதல் பெற்ற பின்னர் அமெரிக்கக் குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகள் அமைப்பு I-485 விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க அனுமதி அளிக்கும்.

 நந்தினி நாயர்

நந்தினி நாயர்

ஆனால் அவற்றின் முன்னுரிமை தேதிகள் (priority dates) உண்மையில் இறுதி செயல் விளக்கப்படத்தின் (final action chart) அடிப்படையில் இல்லை என்பது தான் தற்போதைய பிரச்சனை எனக் கிரீன் ஸ்பூன் மார்டர் அமைப்பின் பார்ட்னரான நந்தினி நாயர் தெரிவித்துள்ளார்.

 7 சதவீதம் மட்டுமே

7 சதவீதம் மட்டுமே

அதாவது மொத்த இந்திய விண்ணப்பதாரர்களுக்கும் 1,40,000 கிரீன் கார்டில் 7 சதவீதம் மட்டுமே கிடைக்கும். கிரீன் கார்டுக்காக விண்ணப்பம் செய்த இந்தியர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் காரணத்தால் காத்திருப்போரின் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

357,720 Indians are waiting to complete their GreenCard Applications, Check Chinese waiting list

357,720 Indians are waiting to complete their GreenCard Applications, Check Chinese waiting லிஸ்ட் GreenCard: 3.5 லட்சம் இந்தியர்கள் காத்திருப்பு.. சீனர்கள் எத்தனை பேர் தெரியுமா..!!
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X