ஆபீஸ்-க்கு கூப்பிட்டா வேலை ராஜினாமா.. ஹைபிரிட் மாடலுக்கு அடம்பிடிக்கும் ஊழியர்கள்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கொரோனாவின் வருகைக்கு பிறகு ஊழியர்கள் பணிபுரியும் சூழலே மாறியுள்ளது. கோவிட் - 19 ஆரம்பத்தில் பல நிறுவனங்களின் ஊழியர்களையும் வீட்டில் இருந்து பணிபுரிய வழிவகுத்தது. ஆனால் அது பின்னர் ஹைபிரிட் கலாச்சாரமாக மாறியுள்ளது.

 

எனினும் தற்போதைய காலகட்டங்களில் கொரோனாவின் தாக்கம் குறைந்து, அலுவலகங்கள் மீண்டும் வழக்கம்போல செயல்படத் தொடங்கி விட்டன. சில நிறுவனங்கள் இன்னும் ஊழியர்களை வீட்டில் இருந்தே செயல்பட அனுமதித்துள்ளன.

சில நிறுவனங்கள் ஊழியர்களின் வசதிக்கு ஏற்ப ஹைபிரிட் மாடல் பணியினை செய்ய வலியுறுத்தி வருகின்றன.

IPO-வில் முதலீடு செய்ய அலைமோதும் எல்ஐசி ஊழியர்கள், பாலிசிதாரர்கள்.. என்ன காரணம்..?!

எங்கிருந்து வேண்டுமானாலும் பணிபுரியலாம்

எங்கிருந்து வேண்டுமானாலும் பணிபுரியலாம்

ஆனால் கொரோனாவின் வருகைக்கு பின்னர் ஊழியர்கள் எங்கிருந்து வேண்டுமானாலும் பணிபுரியலாம் என்ற நிலை இருந்து வருகின்றது. இதனால் ஊழியர்கள் கட்டாயம் அலுவலகம் செல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை. இதனை கடந்த 2 ஆண்டுகளிலேயே நாம் தெரிந்து கொண்டுள்ளோம்.

 வேலையை விடவும் தயார்

வேலையை விடவும் தயார்

ஊழியர்களும் வீட்டில் இருந்து பணிபுரியும்போது அது அவர்களின் பர்சனல் லைஃப் மற்றும் அலுவலக பணியினையும் சிறப்பாக செய்ய அனுமதிக்கிறது. அதிக செலவானாலும் சிறப்பாக வீட்டையும் கையாள முடிகிறது. அதேசமயம் அலுவலக வேலையும் சிறப்பாக செய்ய முடிகிறது. இதனால் பெரும்பாலான ஊழியர்கள் இந்த ஹைபிரிட் பணி மாடலையே விரும்புவதாக ஆய்வறிக்கையில் தெரிய வந்துள்ளது.

சரியான வழி இது தான்
 

சரியான வழி இது தான்

இதற்கிடையில் ஊழியர்களை தக்க வைத்துக் கொள்ள இந்த ஹைபிரிட் மாடல் பணி என்பது சிறந்த வழியாகவும் பார்க்கப்படுகிறது. இது ஊழியர்கள் விரும்பும் ஆப்சன் என்பதோடு, நிறுவனத்திற்கும் பயனளிக்கும். நிறுவனங்கள் இந்த ஹைபிரிட் மாடல் பணியின் மூலம் 13 - 24% உற்பத்தி திறன் அதிகரித்துள்ளதாகவும் தரவுகள் சுட்டிக் காட்டுகின்றன.

செலவு மிச்சம்

செலவு மிச்சம்

அதேபோல் ஊழியர்களுக்கும் ஹைபிரிட் மாடல் பணியினை தேர்ந்தெடுப்பதன் மூலம் வருடத்திற்கு சுமார் 11,000 டாலர்கள் சேமிக்க உதவுவதாகவும் ஆய்வறிக்கை சுட்டிக் காட்டுகின்றது.

இது குறித்து WorkInSync நடத்திய ஆய்வின் படி, சராசரியாக 44% ஊழியர்கள் ஒரு மாதத்தில் 1 - 5 நாட்கள் மட்டுமே அலுவலகத்தில் இருந்து வேலை செய்கிறார்கள். கூடுதலாக 29% ஊழியர்கள் ஒரு மாதத்தில் 6 - 10 நாட்கள் அலுவலகத்தில் இருந்து பணியாற்றுகிறார்கள். இதே 27% பேர் ஒரு மாதத்தில் 11 நாட்களுக்கு மேல் அலுவலகம் சென்று பணியாற்றுகிறார்கள்.

முன்னதாக அலுவலகம் வரும் ஊழியர்கள்

முன்னதாக அலுவலகம் வரும் ஊழியர்கள்

இவ்வாறு வாரத்தில் அலுவலகத்திற்கு சில நாட்கள் வரும் ஊழியர்கள், செவ்வாய் கிழமை, புதன் கிழமை, வியாழக்கிழமை என நாட்களை தேர்வு செய்கிறார்கள். அதோடு அலுவலகத்திற்கு வரும் நாட்கள் முன்னதாகவே அலுவலகம் வந்து தங்களது பணியினை தொடங்குவதாகவும் தெரிவித்துள்ளது.

டெக் நிறுவனங்களின் அறிவிப்பு

டெக் நிறுவனங்களின் அறிவிப்பு

இவ்வாறு வாரத்தில் அலுவலகத்திற்கு சில நாட்கள் வரும் ஊழியர்கள், செவ்வாய்க்கிழமை, புதன் கிழமை, வியாழக்கிழமை என நாட்களை தேர்வு செய்கிறார்கள். அதோடு அலுவலகத்திற்கு வரும் நாட்கள் முன்னதாகவே அலுவலகம் வந்து தங்களது பணியினை தொடங்குவதாகவும் தெரிவித்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

54% employees may consider quitting if not allowed hybrid work

54% employees may consider quitting if not allowed hybrid work/வேலையை விட்டு போகவும் தயார்.. ஹைபிரிட் மாடல் பணியினை தேர்வு செய்யும் ஊழியர்கள்..!
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X