60000 பேர் பணிநீக்கம் செய்யப்படலாம்.. புதிய கணிப்பு..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் கடந்த ஐந்து மாதங்களில் சுமார் 10,000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்துள்ளது.

இந்தப் பிரச்சனை இதோடு நிற்காமல் தொடர்ந்து ஸ்டார்ட்அப் சந்தையில் அடுத்த சில மாதங்களுக்குத் தொடரும் எனக் கணிக்கப்பட்டு உள்ளதாக இத்துறை வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சூழ்நிலையில் இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனத்தில் 60000 பேர் வரையில் பணிநீக்கம் செய்யப்படலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

விஸ்வரூபம் எடுக்கும் இஸ்ரோ.. 55 ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு ஒப்புதல்! விஸ்வரூபம் எடுக்கும் இஸ்ரோ.. 55 ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு ஒப்புதல்!

பெரிய முதலீடுகள்

பெரிய முதலீடுகள்

இந்திய ஸ்டார்ட்அப் துறையில் 2022 துவக்கம் முதலே பெரும் தொகை கொண்ட முதலீடுகள் அதிகளவில் குறைந்துள்ளது. மேலும் இந்த மோசமான முதலீட்டுச் சூழ்நிலை அடுத்த 6 மாதம் முதல் 12 மாதம் வரையில் நீடிக்கவும் வாய்ப்பு உள்ளது என ஏற்கனவே முன்னணி வென்சர் கேப்பிடல் நிறுவனங்கள் தெரிவித்துள்ளது.

10 மடங்கு

10 மடங்கு

முன்னணி ஸ்டார்ட்அப் நிறுவனத்தின் இணை நிறுவனர் ஆர்சித் கார்க், இந்திய ஸ்டார்ட்அப் சந்தையில் ஐபிஓ வெளியிடாத நிறுவனங்களில் மட்டும் கணக்கு எடுத்தால் கடந்த 5 மாதத்தில் அதாவது 2022ல் மட்டும் 6000 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். இந்த எண்ணிக்கை தற்போதைய அளவை காட்டிலும் 10 மடங்கு அதிகரிக்கும்.

60,000 பேர் பணிநீக்கம்

60,000 பேர் பணிநீக்கம்

அதாவது இந்திய ஸ்டார்ட்அப் சந்தையில் அடுத்த 6 முதல் 12 மாதத்தில் தற்போதைய அளவான 6000-த்தை விட 10 மடங்கு அதிகமாக அதாவது 60,000 பேர் பணிநீக்கம் செய்யப்பட வாய்ப்பு உள்ளது என ஆப்சித் கார்க் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு ஸ்டார்ட்அப் துறையில் இருக்கும் ஊழியர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் செய்தியாக உள்ளது.

ஸ்டார்ட்அப் சந்தை

ஸ்டார்ட்அப் சந்தை

இந்திய ஸ்டார்ட்அப் சந்தையில் துரதிர்ஷ்டவசமாகத் தற்போது அதிகப்படியான நிதி நெருக்கடிகள் உருவாகியுள்ளது. பல முன்னணி நிறுவனங்கள் தங்களது வர்த்தகத்தை நகர்த்த புதிய முதலீடுகள் தேவைப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இந்தச் சூழ்நிலையில் ஊழியர்களைப் பணிநீக்கம் செய்வது தான் ஓரே தீர்வு என்ற நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளது.

Edtech நிறுவனங்கள்

Edtech நிறுவனங்கள்

இந்தச் சூழ்நிலையில் அதிகமாகப் பாதிக்கப்பட்டது Edtech நிறுவனங்கள் தான், கொரோனா தொற்று இருந்த போது அனைவரும் Edtech நிறுவன சேவைகளை நம்பியிருந்த வேளையில் தற்போது பள்ளி, கல்லூரி அனைத்தும் திறக்கப்பட்ட காரணத்தால் வர்த்தகம் பெரிய அளவில் சரிந்துள்ளது.

முக்கிய நிறுவனங்கள்

முக்கிய நிறுவனங்கள்

கார்ஸ்24 - 600 ஊழியர்கள்
வேதாந்து - 424 ஊழியர்கள்
Unacademy குரூப் - 1000 ஊழியர்கள்
ட்ரெல் - 300 ஊழியர்கள்
லிடோ - 200 ஊழியர்கள்
furlenco - 180 ஊழியர்கள்
மீஷோ - 150 ஊழியர்கள்
ஓகேகிரெடிட் - 40 ஊழியர்கள்
Whitehat Jr- 1000 ஊழியர்கள்
பிளிங்க்இட் - 1600 ஊழியர்கள்
பெட்டர்.காம் (இந்தியா) - 3000 ஊழியர்கள்
ஓலா - 2100 ஊழியர்கள்

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

60000 employees might lose their jobs from Indian startups in next 6-12 months

60000 employees might lose their jobs from indian startups in next 6-12 months 60000 பேர் பணிநீக்கம் செய்யப்படலாம்.. புதிய கணிப்பு..!
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X