இந்திய தொழிலதிபர்களின் ஆடம்பர வீடுகள்... எத்தனை கோடி மதிப்பு தெரியுமா?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நடுத்தர மற்றும் சாதாரண மக்களே ஒரு நல்ல வீடு வாங்கவேண்டும் என்ற கொள்கையுடன் இருக்கும் நிலையில் கோடிக்கணக்கில் பணம் சம்பாதிக்கும் தொழில் அதிபர்கள் மற்றும் பிசினஸ்மேன்கள் ஆடம்பர வீட்டை வாங்குவதில் எந்த விதமான வியப்பும் இல்லை.

அந்த வகையில் இந்தியாவில் சேர்ந்த 7 தொழிலதிபர்கள் வாங்கிய ஆடம்பரமான, கோடிக்கணக்கான மதிப்புள்ள வீடுகள் மற்றும் அவற்றின் சிறப்பு குறித்து தற்போது பார்ப்போம்.

இந்த வீடுகளின் ஆடம்பரம் மற்றும் மதிப்பு குறித்த தகவல்கள் நிச்சயம் உங்களுக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தும்.

1. டாடாவின் என் சந்திரசேகரனின் வீடு

1. டாடாவின் என் சந்திரசேகரனின் வீடு

டாடா குழுமத்தின் தலைவர் என் சந்திரசேகரன், மும்பை பெடர் சாலையில் உள்ள டவரில் ரூ.98 கோடி மதிப்பிலான வீடு ஒன்றை வாங்கியுள்ளார். சந்திரசேகரன் குடும்பம் ஏற்கனவே கடந்த ஐந்து ஆண்டுகளாக 28 மாடிகள் கொண்ட வீட்டில் வசித்து வந்தது. ஆனால் தற்போது அவர் டூப்ளக்ஸ் டவரின் 11வது மற்றும் 12வது தளங்களில் கிட்டத்தட்ட 6,000 சதுர அடியில் உள்ள வீட்டை வாங்கி அதில் வசித்து வருகிறார்.

2. பிளிப்கார்ட் கல்யாண் கிருஷ்ணமூர்த்தி வீடு

2. பிளிப்கார்ட் கல்யாண் கிருஷ்ணமூர்த்தி வீடு

இந்த ஆண்டு மார்ச் மாதம், பிளிப்கார்ட் சி.இ.ஓ கல்யாண் கிருஷ்ணமூர்த்தி கிழக்கு பெங்களூருவில் ஒரு வில்லாவை கிட்டத்தட்ட 8 கோடி ரூபாய்க்கு வாங்கினார். 6,918 சதுர அடி பரப்பளவில் பரந்து விரிந்துள்ள இந்த வில்லாவில் நான்கு படுக்கையறைகள், ஐந்து குளியலறைகள், இரண்டு சமையலறைகள் உள்பட பல அறைகள் உள்ளன.

3. ஐநாக்ஸ் குழுமத்தின் சித்தார்த் ஜெயின் வீடு

3. ஐநாக்ஸ் குழுமத்தின் சித்தார்த் ஜெயின் வீடு

கடந்த மாதம், ஐநாக்ஸ் குழுமத்தின் செயல் இயக்குனர் சித்தார்த் ஜெயின், மும்பை வோர்லியில், 144 கோடி ரூபாய்க்கு, குவாட்ரப்ளக்ஸ் பிளாட் ஒன்றை வாங்கினார். இந்த வீட்டிற்கு ஜெயின் 7.2 கோடி ரூபாய் முத்திரை வரி செலுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. ஜெயின் ரஹேஜா லெஜண்ட் என்று அழைக்கப்படும் இந்த கட்டிடத்தின் 42, 43, 44 மற்றும் 46வது மாடியில் தலா ஒரு பிளாட்டையும் இவர் வாங்கியுள்ளார்.

4. பார்ம் ஈஸி சித்தார்த் ஷாவின் வீடு

4. பார்ம் ஈஸி சித்தார்த் ஷாவின் வீடு

2021ஆம் ஆண்டு பார்ம் ஈஸி இணை நிறுவனர் சித்தார்த் ஷா மும்பையின் 40 கோடி ரூபாய் மதிப்பிலான அடுக்குமாடி குடியிருப்பை வாங்கினார். 5,445 சதுர அடியில் டூப்ளக்ஸ், கார்ட்டர் சாலையில் உள்ள இந்த வீடு 6வது மாடியில் உள்ளது. பார்ம் ஈஸி என்பது இந்தியாவின் மிகப்பெரிய இ-பார்மசி மற்றும் யூனிகார்ன் கிளப்பில் நுழைந்த முதல் இந்திய இ-பார்மசி ஸ்டார்ட்-அப் நிறுவனம் ஆகும்.

5. இன்ஃபோசிஸின் கிரிஸ் கோபாலகிருஷ்ணனின் வீடு

5. இன்ஃபோசிஸின் கிரிஸ் கோபாலகிருஷ்ணனின் வீடு

இன்ஃபோசிஸ் இணை நிறுவனர் கிரிஸ் கோபாலகிருஷ்ணன், தற்போது ஆக்சிலர் வென்ச்சர்ஸ் நிறுவனத்தின் தலைவராக உள்ளார். இவர், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பெங்களூரு கோரமங்களாவில் ரூ.76 கோடி மதிப்புள்ள இரண்டு வீடுகளை வாங்கினார். இந்த வீடுகள் 10,162 சதுர அடியில் பரந்து விரிந்திருக்கும் அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் ஆகும். இதில் ஒரு வீட்டின் மதிப்பு ரூ. 40 கோடி என்றும், 9,600 சதுர அடியில் உள்ள மற்றொரு அடுக்குமாடி குடியிருப்பின் மதிப்பு ரூ.36 கோடி என்றும் கூறப்படுகிறது.

6. ட்ரீம்11 நிறுவனத்தின் ஹர்ஷ் ஜெயின் வீடு

6. ட்ரீம்11 நிறுவனத்தின் ஹர்ஷ் ஜெயின் வீடு

கடந்த ஆண்டின் பிற்பகுதியில், ஃபேன்டஸி கேமிங் செயலியான ட்ரீம்11 நிறுவனத்தின் இணை நிறுவனர் ஹர்ஷ் ஜெயின் மற்றும் அவரது மனைவி ரச்சனா ஜெயின் ஆகியோர் மும்பையில் ரூ.72 கோடி மதிப்பிலான டூப்ளக்ஸ் ஒன்றை வாங்கியுள்ளனர். இந்த அடுக்குமாடி குடியிருப்பு Pedder சாலையில் உள்ளது. இந்த உயரமான கட்டிடத்தின் 29 மற்றும் 30 வது தளங்களில் ஹர்ஷ் ஜெயின் வீடுகள் உள்ளது. ட்ரீம்11 தற்போது இந்தியாவின் நம்பர் ஒன் ஃபேன்டஸி கேமிங் ஆப் ஆகும்.

7. பஜாஜ் எலக்ட்ரிக்கல்ஸ் குடும்பத்தின் வீடு

7. பஜாஜ் எலக்ட்ரிக்கல்ஸ் குடும்பத்தின் வீடு

பஜாஜ் எலக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் சேகர் பஜாஜின் குடும்பத்தினர் மும்பையில் இரண்டு சொகுசு அடுக்குமாடி குடியிருப்புகளை ரூ.94 கோடிக்கு சமீபத்தில் வாங்கியுள்ளனர். டார்டியோவில் 3,184 சதுர அடி பிளாட்டை ரூ. 47 கோடிக்கும், அதே கட்டிடத்தில் 3,160 சதுர அடியில் மற்றொரு அடுக்குமாடி குடியிருப்பை அதே விலைக்கும் அதாவது ரூ.47 கோடிக்கு வாங்கியுள்ளனர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

7 Indian entrepreneurs and businesspersons expensive Houses worth crores!

7 Indian entrepreneurs and businesspersons who recently bought luxurious and expensive homes worth crores | இந்திய தொழிலதிபர்களின் ஆடம்பர வீடுகள்... எத்தனை கோடி மதிப்பு தெரியுமா?
Story first published: Thursday, August 11, 2022, 7:23 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X