இந்த நாடுகளில் 4 நாள் மட்டுமே வேலை, 3 நாட்கள் விடுமுறை.. இந்தியாவில் எப்போது..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலக நாடுகளில் பல தற்போது மக்களின் வாழ்க்கை முறையிலும், வொர்க் லைப் பேலென்ஸ்-லும் அதிகப்படியான கவனத்தையும் செலுத்த துவங்கியுள்ளது.

 

இதேவேளையில் நிறுவனத்தின் பணிகள், வர்த்தகம் என எதுவும் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக வேலை நாட்களைக் குறைத்து வேலை நேரத்தை அதிகரித்துள்ளது. இது மக்கள் மத்தியில் பெரிய அளவில் வரவேற்பு பெற்று இருக்கிறது.

இந்நிலையில் இந்தியாவில் இதுபோன்ற வேலைநேரத்தை எப்போது மத்திய அரசு நடைமுறை செய்யும் என்பது தான் பல கோடி இளைஞர்களின் கேள்வியாக உள்ளது.

மேலும் இந்த 4 நாள் வேலை திட்டத்தை நிறுவனங்கள் தங்கள் விருப்பத்தின் பெயரில் நடைமுறைப்படுத்தலாம் என்பதால் சிறப்பான முறையில் வர்த்தகத்தை நிர்வாகம் செய்ய முடியும்.

7 நிமிடம் மட்டும் உலக பணக்காரன் ஆனது எப்படி.. யூடியூபரின் குசும்புத்தனத்தை பாருங்க.. !

 ஐக்கிய அரபு எமிரேட்ஸ்

ஐக்கிய அரபு எமிரேட்ஸ்

2021ஆம் ஆண்டில், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் முதல் நாடாக வாரத்திற்கு 4.5 நாள் மட்டுமே வேலை என்று அதிகாரப்பூர்வமாக மாறியது. புதிய விதியின் கீழ், ஊழியர்களுக்கு வெள்ளிக்கிழமையன்று விருப்பத்திற்கு ஏற்ற நேரத்தில் வேலை செய்யவும் மற்றும் வீட்டில் இருந்து வேலை செய்யவும் அனுமதி வழங்கப்படுகின்றன.

ஜப்பான்

ஜப்பான்

கடுமையான வேலை செய்யும் கலாச்சாரம் கொண்ட ஜப்பான் நாட்டில் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட புதிய பொருளாதாரக் கொள்கையில் மக்களின் வாழ்க்கை முறையை மேம்படுத்த 4 நாள் வேலை கலாச்சாரத்தை நாடு முழுவதும் அமலாக்கம் செய்தது. ஜூன் 2021ல் அமலாக்கம் செய்த பின்பு மைக்ரோசாப்ட் ஜப்பான் அலுவலகத்தில் ஊழியர்களின் வேலை திறன் 39.9 சதவீதம் அதிகரித்துள்ளது.

 நியூசிலாந்து
 

நியூசிலாந்து

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, நியூசிலாந்து நாட்டின் அதிபர் ஜசிந்தா ஆர்டெர்ன் நான்கு நாள் வேலை முறை திட்டத்தை அறிமுகம் செய்தார். இந்தத் திட்டத்தை 6 வாரம் பரிசோதனை செய்த போது ஊழியர்களின் வேலைத்திறன் 20 சதவீதம் அதிகரித்தது.

ஐஸ்லாந்து

ஐஸ்லாந்து

2015 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் ஐஸ்லாந்து நாட்டில் பல நிறுவழனங்கள் நான்கு நாள் வேலைத் திட்டத்தைப் பரிசோதனை செய்தது. இதில் சிறப்பான வளர்ச்சி கண்ட நிலையில் வாரத்திற்கு 4 நாள் வேலை திட்டத்தை நடைமுறைப்படுத்தி உள்ளது.

 பிற நாடுகள்

பிற நாடுகள்

இதைத் தொடர்ந்து பின்லாந்து, ஸ்பெயின், அயர்லாந்து சமீபத்தில் இப்பட்டியலில் சேர்ந்த பெல்ஜியம் ஆகிய நாடுகள் உடன் உலகில் சுமார் 8 நாடுகளில் அதிகாரப்பூர்வமாக வாரத்திற்கு 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை என்ற முறையை நடைமுறைப்படுத்தியுள்ளது.

இந்த 4 நாள் வேலை திட்டம் பற்றியும், இந்தியாவில் அதை அறிமுகம் செய்யலாமா வேண்டாமா என்பது பற்றிய உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

8 Countries adopted Four-Day Work Week culture, When is India Going to adopt

8 Countries adopted Four-Day Work Week culture, When is India Going to adopt இந்த நாடுகளில் 4 நாள் மட்டுமே வேலை, 3 நாட்கள் விடுமுறை.. இந்தியாவில் எப்போது..!
Story first published: Tuesday, February 22, 2022, 18:08 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X