இந்தியா வேண்டாம்.. நாட்டை விட்டு வெளியேற காத்திருக்கும் 8000 பேர்.. ஷாக் கொடுக்கும் சர்வே..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கொரோனா தொற்றுக்கு பின்பு இந்திய பணக்காரர்கள், பிஸ்னஸ் குடும்பங்கள் எனப் பணம் பலம் கொண்ட பல தரப்பினர் இந்திய குடியுரிமையை விடுத்து வெளிநாடுகளுக்குச் சென்று வருகின்றனர்.

ஒருபக்கம் சிறந்த கல்வி, மேம்படுத்தப்பட்ட மருத்துவச் சேவை, மேம்படுத்தப்பட்ட வாழ்க்கை முறை, 0 வருமான வரி, எளிதான வர்த்தகத் தொடர்புகள் எனப் பல காரணம் கூறப்பட்டாலும். இந்திய சந்தையில் உருவான பணம் வெளிநாடுகளுக்குச் செல்கிறது வருத்தமான செய்தி.

இந்நிலையில் இந்த வருடம் எத்தனை பேர் இந்தியாவை விட்டு வெளியேறப்போகிறார்கள் என ஆய்வறிக்கை வெளியாகியுள்ளது.

இந்திய பணக்காரர்கள்

இந்திய பணக்காரர்கள்

இந்தியாவில் அடுத்த 10 வருடத்தில் மில்லியனர்கள் மற்றும் பில்லியனர்கள் எண்ணிக்கையில் பெரிய ஏற்றம் இருக்கும் என்று ஆலோசனை நிறுவனமான ஹென்லி & பார்ட்னர்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

சவால்

சவால்

ஆனால், இந்த மில்லியனர்கள் மற்றும் பில்லியனர்களை இந்தியாவில் தக்க வைப்பது பெரும் சவாலாக இருக்கும் என இந்தியாவை விட்டு வெளியேறி வருவதைச் சுட்டிக்காட்டி ஹென்லி & பார்ட்னர்ஸ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

8,000 பேர்

8,000 பேர்

ஹென்லி பிரைவேட் வெல்த் மைக்ரேஷன் டாஷ்போர்டின் தரவுகள் படி இந்த ஆண்டு இந்திய பணக்காரர்களில் சுமார் 8,000 பேர் நாட்டை விட்டு வெளியேற உள்ளனர் என ஹென்லி & பார்ட்னர்ஸ் கணித்துள்ளது. இந்தப் போன்ற வெளியேற்றம் ஆசியா, ஐரோப்பா மற்றும் தென் அமெரிக்காவின் பல முக்கிய நாடுகளில் இருப்பதாகத் தெரிவித்துள்ளது.

ரஷ்யா, சீனா

ரஷ்யா, சீனா

இந்தியாவில் 8000 பணக்காரர்கள் வெளியேற உள்ள நிலையில் ரஷ்யாவில் அதிகபட்சமாக 15,000 பேர் வெளியேறுவார்கள் என்றும், சீனா-வின் இதன் எண்ணிக்கை 10,000 ஆக இருக்கும் எனவும் இந்த அறிக்கை கூறுகிறது. பணக்காரர்கள் வெளியேற்றத்தின் அடிப்படையில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது.

புதிய பணக்காரர்கள்

புதிய பணக்காரர்கள்

ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவை விட்டு வெளியேறும் பணக்காரர்களைக் காட்டிலும் புதிய கோடீஸ்வரர்களை உருவாக்கும் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் காரணத்தால் பெரிய அளவில் கவலைப்படத் தேவையில்லை என்று நியூ வேர்ல்ட் வெல்த்தின் ஆராய்ச்சித் தலைவர் ஆண்ட்ரூ அமோயில்ஸ் கூறியுள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

8000 HNI may leave India this year, Russia and china tops the list

8000 HNI may leave India this year, Russia and china tops the list இந்தியா வேண்டுமென வெளியேறக் காத்திருக்கும் 8000 பேர்.. ஷாக் கொடுக்கும் சர்வே..!
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X