இந்திய ஊழியர்களுக்கு VRS.. அமேசான் எடுத்த அதிரடி முடிவு..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலகின் முன்னணி டெக் மற்றும் ஈகாமர்ஸ் சேவை நிறுவனமான அமேசான் செலவுகளைக் குறைக்க வேண்டும் என்பதற்காகத் தனது உலகளாவிய வர்த்தகத்தில் இருந்து சுமார் 10000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்ய முடிவு செய்துள்ள நிலையில், இந்தியாவில் அமேசான் தனது பணிநீக்க நடவடிக்கையைத் துவங்கியுள்ளது.

 

இந்த ரெசிஷன் சீசனில் அனைத்து முன்னணி டெக் நிறுவனங்கள் அனைத்தும் கண்மூடித்தனமாக ஊழியர்களைப் பணிநீக்கம் செய்து வரும் நிலையில் அமேசான் தனது இந்திய ஊழியர்களை மிகவும் மரியாதை உடனும், மதிப்புடனும் நடத்த வேண்டும் என முடிவு செய்துள்ளது.

இந்த நிலையில் தற்போது அமேசான் இந்திய ஊழியர்களை நேரடியாகப் பணிநீக்கம் செய்யாமல் பல்வேறு சலுகைகள் அடங்கிய Voluntary Separation Program (VSP) உடன் வெளியேற்றுகிறது.

அமேசான் இந்தியா

அமேசான் இந்தியா

அமேசான் இந்தியா நிர்வாகம் தனது ஊழியர்களை வெறுமென 3 - 4 மாத சம்பளத்துடன் பணிநீக்கம் செய்யாமல் Voluntary Separation Program (VSP) என்ற திட்டத்துடன் ஊழியர்கள் தானாக முன்வந்து இத்திட்டத்தை ஏற்றுப் பணியை ராஜினாமா செய்யும் வாய்ப்பை கொடுத்துள்ளது.

VSP திட்டம்

VSP திட்டம்

இதுமட்டும் அல்லாமல் இந்த VSP திட்டம் யாருக்கெல்லாம் பொருந்தும், யாரெல்லாம் தேர்வு செய்ய வேண்டும் என்ற அடிப்படையில் ஈமெயில் அனுப்பப்பட்டு உள்ளது. இந்தியாவில் L1 முதல் L7 வரையில் அமேசான் எக்ஸ்பீரியன்ஸ் மற்றும் டெக்னாலஜி பிரிவு ஊழியர்களுக்கு இந்த VSP குறித்த ஈமெயில் அனுப்பப்பட்டு உள்ளது.

 நவம்பர் 30
 

நவம்பர் 30

அமேசான் இந்தியாவின் VSP திட்டம் மூலம் ஊழியர்கள் நவம்பர் 30 ஆம் தேதி காலை 6.30 மணிக்குள் விண்ணப்பத்தைச் சமர்ப்பித்து, பணியை ராஜினாமா செய்வதை அறிவிக்க வேண்டும். மேலும் VSP திட்டத்தைத் தேர்வு செய்வோருக்கு சில முக்கியச் சலுகைகள் அளிக்கப்பட்டு உள்ளது.

PIP பிரிவு ஊழியர்கள்

PIP பிரிவு ஊழியர்கள்


இந்தச் சலுகைகள் அனைத்தும் தானாக முன்வந்து பணியை ராஜினாமா செய்பவர்களுக்கு மட்டும் தான் என்பதைத் தெளிவாகத் தெரிவித்துள்ளது. இதேபோல் ஏற்கனவே performance improvement programs (PIP) பிரிவில் இருக்கும் ஊழியர்களுக்கு இந்தத் திட்டம் பொருந்தாது என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் PIP பிரிவில் இருப்பவர்கள் நேரடியாகப் பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என்பது உறுதியாகியுள்ளது.

முக்கியச் சலுகைகள்

முக்கியச் சலுகைகள்

அமேசான் இந்தியாவின் VSP திட்டத்தைத் தேர்வு செய்வோருக்கு 1.) 22 வார அடிப்படை சம்பளம் + ஒவ்வொரு 6 மாத பணியாற்றியதிற்கு ஒரு வார அடிப்படை சம்பளம் அளிக்கப்படும் 2.) 6 மாதம் மெடிக்கல் இன்சூரனஸ் கவரேஜ் அல்லது அதற்கு இணையான தொகை 3.) வேலைவாய்ப்பு ஒப்பந்த அடிப்படையில் நோட்டீஸ் காலம் அல்லது சம்பளம் அளிக்கப்படும் என அமேசான் இந்திய தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

வழக்கு

வழக்கு

ஒரு ஊழியர் நிறுவனத்தால் பணிநீக்கம் செய்யப்பட்டால், அந்தப் பணிநீக்கத்தைச் சட்டப்பூர்வமாக எதிர்கொள்ள முடியும். ஆனால் ஒரு ஊழியர் தானாக முன்வந்து ராஜினாமா செய்யும்போது, அவர்கள் நீதிமன்றத்தில் வேலையிலிருந்து நீக்கப்பட்டதற்காக வழக்குத் தொடுக்க முடியாது. இந்தப் பிரச்சனையைத் தான் VSP திட்டம் மூலம் சரி செய்கிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Amazon ask Indian employees to resign voluntarily; Not to layoff

Amazon ask Indian employees to resign voluntarily; Not to layoff
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X