"பெகாசஸ்" உருவாக்கிய இஸ்ரேல் நாட்டின் "NSO நிறுவன" சேவையை முடக்கிய அமேசான்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஒட்டுமொத்த உலகையே திருப்பிப் போட்டுள்ள பெகாசஸ் ஸ்பைவேர் பிரச்சனைக்குக் காரணமாக, இந்த விபரீத தொழில்நுட்பத்தை உருவாக்கிய இஸ்ரேல் நாட்டின் NSO நிறுவனத்திற்கு அளிக்கப்பட்டும் இன்பராஸ்டக்சர் சேவைகள், கிளவுட் சேவை கணக்குகளை முடங்கியுள்ளது அமேசான் நிறுவனம்.

பெகாசஸ் ஸ்பைவேர் என்றால் என்ன..?

பெகாசஸ் ஸ்பைவேர் என்றால் என்ன..?

வெறும் ஒரு மிஸ்டு கால் மூலம் பிரபலங்களின் மொபைல் போனை வேவு பார்த்து, தகவல் திருட்டு, போன் ரெக்கார்டிங், கேமரா மூலம் வீடியோ பதிவு செய்தல், வாட்ஸ்அப் தகவல்கள், ஈமெயில், போட்டோ ஆகியவற்றை எவ்விதமான சந்தேகமும் இல்லாமல் திருடும் ஒரு தொழில்நுட்பம் தான் பெகாசஸ் ஸ்பைவேர்.

தீவிரவாதம் கட்டுப்படுத்துதல்

தீவிரவாதம் கட்டுப்படுத்துதல்

பொதுவாக இது தீவிரவாதம் மற்றும் போர் குற்றவாளிகளைக் கண்காணிக்க அரசுகளுக்கு மட்டுமே அளிக்கப்படும் இந்தச் சேவை மூலம் தற்போது இந்தியாவில் உள்ள 40 பத்திரிக்கையாளர், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், உச்ச நீதிமன்ற நீதிபதி, அரசு அதிகாரிகள் மற்றும் பலரின் செல்போன் உரையாடல்கள் ஒட்டுக் கேட்கப்பட்டதாகப் புகார் வைக்கப்பட்டு உள்ளது.

தி கார்டியன் ஆய்வு

தி கார்டியன் ஆய்வு

தி கார்டியன் உள்ளிட்ட 16 ஊடகங்கள் வெளியிட்டுள்ள "பெகாசஸ் புராஜக்ட்" செய்தியின் அடிப்படையில் தற்போது இந்திய நாடாளுமன்றத்தில் இருந்து உலக நாடுகள் வரையில் பெரிய பூகம்பம் ஆக வெடித்துள்ளது.

ஒரு மிஸ்டு கால் போதும்

ஒரு மிஸ்டு கால் போதும்

இந்தப் பெகாசஸ் ஸ்பைவேர், மிஸ்டு கால் வாயிலாகவும், மெசேஜ் வாயிலாகவும் அல்லது இணைப்பை கிளிக் செய்வது மூலமாகவும் செய்ய மற்றவர்களின் போன்களை உளவு பார்க்க முடியும். இது ஸ்பைவேர் ஸ்பெஷாலிட்டியே இந்த வைரஸ் தாக்கப்பட்டு உள்ளதா என்பதைத் தெரியாது. அந்த அளவிற்கு இத்தொழில்நுட்பம் தயாரிக்கப்பட்டு உள்ளது.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி

இஸ்ரேல் நாட்டின் என்எஸ்ஓ குரூப்-யிடம் இருந்து இந்தப் பெகாசஸ் ஸ்பைவேர்-ஐ மோடி தலைமையிலான அரசு வாங்கியிருப்பதாகவும், இதன் மூலம் பத்திரிக்கையாளர் முதல் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் (ராகுல் காந்தி, பிரசாந்த் கிஷோர், மம்தா பேனர்ஜி-யின் உறவினர் இன்னும் பலபேர்), உச்ச நீதிமன்ற நீதிபதிகள், அரசு அதிகாரிகள் எனப் பலரையும் உளவு பார்த்துள்ளதாகப் புகார் வைக்கப்பட்டுள்ளது.

அமேசான் வெப் சர்வீசஸ் அதிரடி

அமேசான் வெப் சர்வீசஸ் அதிரடி

இந்தப் பிரச்சனை உலகம் முழுவதும் மிகப்பெரியதாக வெடித்துள்ள நிலையில், அமெரிக்காவின் அமேசான் நிறுவனத்தின் கிளவுட் சேவை பிரிவான அமேசான் வெப் சர்வீசஸ் இஸ்ரேல் நாட்டின் NSO குரூப் நிறுவனத்திற்கு அளிக்கப்பட்டு வந்த தொழில்நுட்ப இன்பராஸ்டக்சர் உதவிகளையும், கணக்குகளையும் மொத்தமாக மூடியுள்ளது.

இஸ்ரேல் NSO குரூப் சேவை முடக்கம்

இஸ்ரேல் NSO குரூப் சேவை முடக்கம்

இதுகுறித்து அமேசான் வெப் சர்வீசஸ் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், பெகாசஸ் ஸ்பைவேர் பிரச்சனை வெடிக்கத் துவங்கியதுமே NSO குரூப் நிறுவனத்திற்கு அளிக்கப்பட்டு வந்த தொழில்நுட்ப இன்பராஸ்டக்சர் உதவிகளையும், கணக்குகளை உடனடியாக முடக்கிவிட்டோம் எனத் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் நாடு

இஸ்ரேல் நாடு

இஸ்ரேல் நாட்டின் NSO குரூப் நிறுவனத்தின் பெகாசஸ் ஸ்பைவேர் மூலம் இந்தியா உட்பட 50 நாடுகளில் சுமார் 50000 பேரின் போன்களை உலக நாடுகளின் அரசுகள் உளவு பார்த்துள்ளது எனத் தகவல் வெளியாகியுள்ளது.

அமேசான் ஒரு கருவி

அமேசான் ஒரு கருவி

NSO குரூப் நிறுவனத்தின் இந்தப் பெகாசஸ் ஸ்பைவேர்-ஐ போன்கள் வாயிலாகவும், இண்டர்நெட் இணைப்பு சேவை அளிக்கும் அமேசான் வெப் சர்வீசஸ் மற்றும் அமேசான் Cloudfront சேவை வாயிலாகப் பரப்புவதாகவும் தகவல் வெளியானது. இதையடுத்து இந்நிறுவனத்திற்கான சேவை முடக்கப்பட்டு உள்ளது.

10 முக்கிய நாடுகள்

10 முக்கிய நாடுகள்

தற்போது வெளியாகியுள்ள ஆய்வு முடிவுகளில் NSO குரூப் நிறுவனத்தின் பெகாசஸ் ஸ்பைவேர் திட்டத்திற்கு அஜர்பைஜான், பஹ்ரைன், கஜகஸ்தான், மெக்ஸிகோ, மொராக்கோ, ருவாண்டா, சவுதி அரேபியா, ஹங்கேரி, இந்தியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (யுஏஇ) ஆகிய 10 நாடுகள் முக்கிய வாடிக்கையாளராக இருக்கக் கூடும் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Amazon shuts all accounts, infra for Pegasus owned NSO Group

Amazon shuts all accounts, infra for Pegasus owned NSO Group
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X