1 லட்ச பேருக்கு வேலை.. அமேசான் எடுத்த அதிரடி முடிவு..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலகின் முன்னணி ஆன்லைன் ஷாப்பிங் தளமான அமேசான் அமெரிக்காவில் கிடங்கு நிர்வாகம் மற்றும் டெலிவரி பிரிவில் சுமார் 1 லட்சம் பேருக்குப் புதிதாக வேலைவாய்ப்பைக் கொடுப்பதாக அறிவித்துள்ளது.

சீனாவில் இருந்து பரவிய கொரோனா தற்போது இந்தியாவை மட்டுமல்ல அமெரிக்காவையும் தாக்கியுள்ளது. இதனால் அமெரிக்காவில் உள்ள மக்கள் தங்களது தினசரி தேவைகளை அதிகளவில் வாங்கிக் குவித்து வருகின்றனர், அதிலும் குறிப்பாக ஆன்லைனில்.

இதனால் அமேசான் தளத்தில் ஆர்டர்களின் எண்ணிக்கை எப்போதும் அல்லாத அளவிற்கு அதிகரித்துள்ளது, இதனை ஆர்டர்களைச் சமாளிக்க அமேசான் சுமார் 1 லட்சம் பேரை புதிதாகப் பணியில் அமர்த்த திட்டமிட்டுள்ளது.

இந்தியாவிலும் இதேபோன்ற நிலை தான் அடுத்த சில வாரங்களில் ஏற்படும் எனக் கணிப்புகள் வெளியாகியுள்ளது.

வல்லரசு அமெரிக்கா

வல்லரசு அமெரிக்கா


அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள காரணத்தால் மார்ச் மாத இறுதி வரையில் அனைத்து அலுவலகம் மற்றும் பள்ளி, கல்லூரிகள் வீட்டில் இருந்தபடியே இயங்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இதற்கிடையில் தினசரி தேவைகளைப் பூர்த்திச் செய்ய மக்கள் தங்களுக்குத் தேவையான பொருட்கள் அதிக எண்ணிக்கையிலும் அளவுகளிலும் வாங்கத் துவங்கியுள்ளனர்.

இதனால் பல கடைகளைப் பொருட்கள் இல்லாமல் காலியாக உள்ளது.

 

ஆன்லைன்

ஆன்லைன்

கடைகளில் பொருட்கள் இல்லாத நிலையில் மக்கள் வேறு வழி இல்லாமல் ஆன்லைனில் ஆர்டர் செய்த துவங்கியுள்ளனர். இதனால் அமேசான், வால்மார்ட், போன்ற இணையத் தளங்களில் ஆர்டர்கள் எண்ணிக்கை எப்போதும் இல்லாத வகையில் தாறுமாறாக அதிகரித்து வருகிறது.

இந்தத் திடீர் தேவையைப் பூர்த்தி செய்ய ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனங்கள் நேரடியாக உற்பத்தி நிறுவனங்களிடம் கொள்முதல் செய்து மக்களின் தேவையைப் பூர்த்தி செய்யவும் முடிவு செய்து அதற்கான பணியில் இறங்கியுள்ளது.

 

டெலிவரி

டெலிவரி

இது எல்லாமே சரி, ஆனால் வரலாறு காணாத ஆர்டர்கள் குவிந்துள்ள நிலையில் இதை எப்படி மக்களுக்கு டெலிவரி செய்வது. இந்தப் பிரச்சனையைக் களையும் வண்ணம் அமெரிக்காவின் மிகப்பெரிய ஆன்லைன் ஷாப்பிங் தளமான அமேசான் கிடங்கு அதாவது சரக்குகளை வைத்திருக்கும் கிடங்குகளை நிர்வாகம் செய்யவும், டெலிவரி செய்யவும் புதிதாக 1 லட்சம் ஊழியர்களைப் பணியில் சேர்க்க உள்ளதாக அறிவித்துள்ளது.

அமெரிக்க மக்கள்

அமெரிக்க மக்கள்

இந்தியாவைப் பேலவே அமெரிக்காவிலும் பாதுகாப்பான உணவு மற்றும் சுற்றுப்புறம் மற்றும் உடலைப் பாதுகாப்பாக வைத்துக்கொள்ளும் சேனிடைசர் மற்றும் ஆல்கஹால் ஸ்வேப் போன்றவற்றுக்கு அமெரிக்காவிலும் அதிகளவிலான தேவை ஏற்பட்டுள்ளது.

கூடுதல் சம்பளம்

கூடுதல் சம்பளம்

மேலும் அமேசான் நிறுவனத்தில் தற்போது புதிதாக வேலைக்குச் சேர்பவர்களுக்கு அமெரிக்க மக்களின் சராசரி சம்பளமான ஒரு மணிநேரத்திற்கு 15 டாலர் உடன் கூடுதலாக 2 டாலரும். அதிக நேரம் பணியாற்றுபவர்களுக்குத் தனிப்பட்ட முறையில் சம்பளமும் கொடுப்பதாக அமேசான் அறிவித்துள்ளது.

இதன் மூலம் அமேசானுக்கு 350 மில்லியன் டாலர் கூடுதல் செலவு ஏற்பட உள்ளது.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Amazon to hire 1 lakh workers: online orders surge on coronavirus worries

Amazon.com Inc on Monday said it would hire 100,000 warehouse and delivery workers in the United States to deal with a surge in online orders, as many consumers have turned to the web to meet their needs during the coronavirus outbreak.
Story first published: Tuesday, March 17, 2020, 14:56 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X