அமெரிக்காவுக்கு முக்கிய சப்ளையராக இந்தியா.. பல சவால்களுக்கு மத்தியிலும் தரமான சம்பவம்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலகிலேயே இந்தியா மிகப்பெரிய எண்ணெய் இறக்குமதியாளர்கள் என்பது பலருக்கும் தெரிந்த ஒரு விஷயம் தான். அப்படி இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய் சுத்திகரிக்கப்பட்டு, மீண்டும் ஒரு பகுதி எரிபொருட்களாக ஏற்றுமதி செய்யப்படுவது எத்தனை பேருக்கு தெரியும்? அதிலும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கே இந்தியா முக்கிய சப்ளையராக இருப்பது இன்னொரு ஹைலைட்.

ரஷ்யா - உக்ரைன் இடையேயான பிரச்சனைக்கு மத்தியில் ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்க கூடாது என மேற்கத்திய நாடுகள் தடை போட்டன. சில நாடுகள் இந்த தடையை கருத்தில் கொண்டு ரஷ்யாவில் இருந்து எண்ணெய் வாங்குவதையே கூட நிறுத்தின.

Budget 2023: மூத்த குடி மக்களுக்கு நிவாரணம் கிடைக்குமா.. சுமை குறையுமா? Budget 2023: மூத்த குடி மக்களுக்கு நிவாரணம் கிடைக்குமா.. சுமை குறையுமா?

சலுகை விலையில் இறக்குமதி

சலுகை விலையில் இறக்குமதி

ஆனால் இதனை எதனையும் கருத்தில் கொள்ளாமல் எங்களுக்கு மக்கள் தான் முக்கியம் என கூறி இந்தியா இறக்குமதி செய்து வந்தது. அதிலும் மற்ற நாடுகளை இந்தியா சலுகை விலையில் இறக்குமதி செய்து வருகின்றது. இது மக்களின் நலன் தான் முக்கியம். எங்களுக்கு வேறு எதுவும் முக்கியமில்லை என, மேற்கத்திய நாடுகள் தங்கள் எதிர்ப்பினை காட்டினாலும், விடாது இந்தியா இறக்குமதி செய்து வந்தது.

ரஷ்யா முக்கிய சப்ளையர்

ரஷ்யா முக்கிய சப்ளையர்

கடந்த சில மாதங்களாக இந்தியாவின் முக்கிய எண்ணெய் சப்ளையராக ரஷ்யா மாறியுள்ளது. இதற்கிடையில் ரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் எண்ணெய்யை தான், இந்தியா சுத்திகரிப்பு செய்து அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதாக குற்றச்சாட்டும் எழுந்தது.

அமெரிக்காவுக்கு அதிகம்

அமெரிக்காவுக்கு அதிகம்

இதற்கிடையில் கடந்த நவம்பர் மாதத்தில் இருந்தே இந்தியா, அமெரிக்காவுக்கு முக்கிய சுத்திகரிப்பு பொருட்கள் அதிகளவில் ஏற்றுமதி செய்துள்ளதை தரவுகள் சுட்டிக் காட்டுகின்றது. இதில் பெரும்பகுதி எண்ணெய் ஆனது ரஷ்யாவில் இருந்து இறக்குமதி செயப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.

2வது பெரிய ஏற்றுமதியாளர்

2வது பெரிய ஏற்றுமதியாளர்

வர்த்தக அமைச்சகத்தின் தரவின் படி, நவம்பர் மாதத்தியில் ரஷ்யா 3.08 பில்லியன் டாலர் மதிப்பிலான கச்சா எண்ணெய் ஏற்றுமதியை இந்தியாவுக்கு செய்துள்ளது. சவுதி அரேபியாவுக்கு அடுத்த படியாக ரஷ்யா இரண்டாவது மிகப்பெரிய எண்ணெய் ஏற்றுமதியாளராக உருவெடுத்துள்ளது.

அமெரிக்கா இறக்குமதி

அமெரிக்கா இறக்குமதி

அதேசமயம் கடந்த நவம்பர் மாதத்தில் அமெரிக்காவின் எண்ணெய் பொருட்கள் இறக்குமதியானது, நவம்பர் மாதத்தில் 588 மில்லியன் டாலராக அதிகரித்துள்ளது. இது இந்த நிதியாண்டில் மிக அதிகமானதொரு விகிதமாகும்.

அமெரிக்காவில் விடுமுறை பருவத்தில் தேவையானது அதிகரித்து வரும் நிலையில், அமெரிக்காவின் இறக்குமதியும் அதிகரித்துள்ளதாக தரவுகள் சுட்டிக் காட்டுகின்றது.

8 மாத நிலவரம்

8 மாத நிலவரம்

நவம்பர் 30 வரையிலான 8 மாதத்தில் அமெரிக்கா 3.62 பில்லியன் டாலர் மதிப்பிலான பெட்ரோலியப் பொருட்களை அமெரிக்கா இறக்குமதி செய்துள்ளது. இது முந்தைய ஆண்டை விட 23% அதிகரித்துள்ளது. இது கடந்த 5 ஆண்டுகளை காட்டிலும் அதிகமாகும்.

இறக்குமதி அதிகரிப்பு, குறைப்பு

இறக்குமதி அதிகரிப்பு, குறைப்பு

அமெரிக்காவுக்கு இறக்குமதி அதிகரித்திருந்தாலும், அதேசமயம் ஐரோப்பாவின் இறக்குமதியில் கணிசமான மாற்றம் உள்ளது. இதனுடன் பிரிட்டன், ஸ்பெயின் ரோமானியா உள்ளிட்ட நாடுகள் இந்தியாவில் இருந்து இறக்குமதியினை கணிசமாக குறைத்துள்ளன. அதேசமயம் போர்ச்சுகல், பெல்ஜியம் மற்றும் இத்தாலி உள்ளிட்ட நாடுகள் முறையே இறக்குமதியினை 1600, 535 மற்றும் 17 மடங்கு அதிகரித்துள்ளது. நெதர்லாந்தும் அக்டோபர் மாதத்துடன் ஒப்பிடுகையில் 45% அதிகரித்துள்ளது.

பல தடைகளுக்கு இடையே மாஸ்

பல தடைகளுக்கு இடையே மாஸ்

இந்த இறக்குமதியானது மேற்கத்திய நாடுகளின் தடை மற்றும் ஜி7 நாடுகளின் விலை உச்ச வரம்பு என இருந்தாலும் இந்தியாவின் இறக்குமதி என்பது அதிகளவில் உள்ளது. அதன் எதிரொலி ஏற்றுமதியிலும் காணப்படுகின்றது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

America remains India's largest buyers of refined products despite many challenges

America remains India's largest buyers of refined products despite many challenges
Story first published: Wednesday, January 11, 2023, 12:05 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X