முதல்ல சுந்தர் பிச்சை.. இப்போ டிம் குக்.. சுத்தி சுத்தி அடிக்கும் உயர்மட்ட நிர்வாகம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலகின் முன்னணி டெக் நிறுவனங்கள் அனைத்தும் பெரும் நெருக்கடியில் இருக்கும் வேளையில் அடுத்தடுத்துப் பணிநீக்கம் செய்து வரும் நிலையில், தற்போது நிர்வாகங்கள் செலவுகளைக் குறைக்கச் சிஇஓ-க்களின் சம்பளத்தில் கைவைக்கத் துவங்கியுள்ளது. டெக் நிறுவனங்கள் அதிகமாக வருவாய், லாபம் பெற்றாலும் தொடர்ந்து கடனில் இயங்கி வந்தது.

இதற்கிடையில் பணவீக்கத்தைக் குறைக்க வேண்டும் என்பதற்காக மத்திய வங்கிகள் வட்டியை உயர்த்திய நிலையில் கடனில் இருக்கும் அனைத்துத் தரப்பு நிறுவனங்களுக்கும் இது பெரும் பாதிப்பை உருவாக்கியுள்ளது.

இதனால் செலவுகளைக் குறைத்து லாபத்தை மேம்படுத்தி முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை அளிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது, இல்லையெனில் நிறுவனங்களின் பங்கு மதிப்பு பெரும் பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளது.

குட் நியூஸ்.. சில்லறை பணவீக்கம் 5.72%..தொழிற்துறை வளர்ச்சி 7.1%.. இது ரொம்ப நல்ல விஷயம்! குட் நியூஸ்.. சில்லறை பணவீக்கம் 5.72%..தொழிற்துறை வளர்ச்சி 7.1%.. இது ரொம்ப நல்ல விஷயம்!

கூகுள்

கூகுள்

கூகுள்-ன் தாய் நிறுவனமான ஆல்பபெட் நிர்வாகம் டிசம்பர் மாதம் ஒப்புதல் அளித்துள்ள சுந்தர் பிச்சை -க்கான புதிய ஊதியக் கட்டமைப்பில், அவருடைய மொத்த சம்பளத்தில் பெரும் பகுதி வகிக்கும் செயல்திறன் பங்கு அலகுகளின் (PSUs) விகிதத்தை 43 சதவீதத்திலிருந்து 60 சதவீதமாக உயர்த்தப்பட்டு உள்ளது.

சுந்தர் பிச்சை

சுந்தர் பிச்சை

மேலும் ஆன் டார்கெட் performance stock units பேமெண்ட் தொகையில் செயல்திறன் தேவையை 50வது சதவீதத்திலிருந்து 55வது சதவீதமாக அதிகரிக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் சுந்தர் பிச்சைக்கு ஒவ்வொரு வருடமும் நிர்வாக இலக்குகளைத் தொட வேண்டிக் கூடுதல் நெருக்கடி உருவாகியுள்ளது.

ஆப்பிள் சிஇஓ டிம் குக்

ஆப்பிள் சிஇஓ டிம் குக்

இதைத் தொடர்ந்து தற்போது ஆப்பிள் சிஇஓ-வான டிம் குக் பல்வேறு நெருக்கடிக்கு மத்தியில் முதலீட்டாளர் நலனுக்காகத் தனது சம்பளத்தை 2023 ஆம் ஆண்டில் 40 சதவீதம் குறைத்து 49 மில்லியன் டாலரை மட்டும் பெற்ற உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

டிம்குக் சம்பளம்

டிம்குக் சம்பளம்

சம்பள குறைப்புக்கான கோரிக்கை டிம் கும்-யிடம் இருந்து நிர்வாகத்திற்கு வைக்கப்பட்டாலும் நெருக்கடிகள் காரணமாகவே டிம்குக் இதைச் செய்துள்ளார். இதேவேளையில் டிம் குக் சம்பளத்தில் முக்கியப் பங்கு வகிக்கும் செயல்திறன் அடிப்படையிலான பங்குகள் 2023 ஆம் ஆண்டில் 50 சதவீதத்தில் இருந்து 75 சதவீதமாக அதிகரிக்கப்பட்டு உள்ளது.

99.4 மில்லியன் டாலர் சம்பளம்

99.4 மில்லியன் டாலர் சம்பளம்

இந்த அளவீடு 2023ஆம் ஆண்டில் மட்டும் அல்லாமல் இனி வரும் ஆண்டுகளிலும் தொடரும் எனக் கணிக்கப்பட்டு உள்ளது. 2022ல் டிம் குக் 99.4 மில்லியன் டாலர் அளவிலான தொகையைச் சம்பளமாகப் பெற்றார்.


இதில் அடிப்படை சம்பளமாக 3 மில்லியன் டாலர், 83 மில்லியன் டாலர் மதிப்பிலான பங்குகளாகும். 2021ல் டிம் குக் சுமார் 98.7 மில்லியன் டாலர் மதிப்பிலான பங்குகளைப் பெற்று இருந்தார்.

என்ன பிரச்சனை

என்ன பிரச்சனை

தற்போது எடுக்கப்பட்டு உள்ள முடிவுகள் மூலம் ஆப்பிள் நிர்வாகம் நிர்ணயம் செய்யும் இலக்கை அடைவதைப் பொறுத்து அவருக்கான பங்கு அளிக்கப்பட உள்ளது, அதாவது இதற்கு முன்பு இலக்கில் 50 சதவீதத்தை எட்டினாலே 83 மில்லியன் டாலர் அளவிலான பங்குகள் அளிக்கப்பட்டது, ஆனால் இனி வரும் காலத்தில் அதாவது 2023 முதல் 75 சதவீத இலக்கை அடைந்தால் மட்டுமே பங்குகள் அளிக்கப்படும். இதேபோன்ற இலக்கை தான் கூகுள் சுந்தர் பிச்சைக்கும் அளிக்கப்பட்டு உள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Apple CEO Tim Cook cuts 40 percent pay to 49 million; Performance stock units targets increased to 75 percent

Apple CEO Tim Cook cuts 40 percent pay to 49 million; Performance stock units targets increased to 75 percent
Story first published: Friday, January 13, 2023, 10:07 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X