உலகப் பொருளாதாரம் இன்னும் வீழ்ச்சியடையும்.. சுமார் 40 நிபுணர்கள் ஒருமித்த கருத்து..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சுமார் 40க்கும் மேற்பட்ட பொருளாதார நிபுணர்கள் ஆய்வாளர்கள் உலகப் பொருளாதாரம் இன்னும் வீழ்ச்சியடையும் என்ற ஒருமித்த கருத்தையே முன் வைப்பதாக யுபிஎஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

யுபிஎஸ் குரூப் ஏஜி (UBS Group AG) என்ற சுவிஸ் பன்னாட்டு முதலீட்டு வங்கியும் மற்றும் நிதிச் சேவை நிறுவனமான இது சுவிட்சர்லாந்தில் நிறுவப்பட்டது.

இந்த நிதி நிறுவனம் இந்த வார தொடக்கத்தில் உலகளாவிய பொருளாதாரம் பற்றிய ஒரு அறிக்கையை, அதுவும் 400 பக்கங்கள் கொண்ட "2020ல் உலகளாவிய பொருளாதாரம்" என்ற அறிக்கையை வெளியிட்டுள்ளது. சரி அப்படி என்ன இதில் கூறப்பட்டுள்ளது என்கிறீர்களா? அதைப் பற்றித் தான் பார்க்க போகிறோம் வாருங்கள்.

உலகளாவிய வளர்ச்சியில் இழுவை

உலகளாவிய வளர்ச்சியில் இழுவை

உலகளாவிய வங்கிகளை சேர்ந்த கிட்டதட்ட 40 ஆராய்ச்சியாளர்கள் மற்றும் பொருளாதார நிபுணர்கள், இந்த பொருளாதார அறிக்கையில் தங்களது ஒருமித்த கருத்தை தெரிவித்துள்ளனராம். உலகளாவிய வர்த்தகத்தில் ஏற்பட்ட இடையூறுகள், உலகளாவிய பொருளாதார வளர்ச்சியில் மிகப்பெரிய இழுவையைக் கண்டுள்ளதாக கூறியுள்ளனராம். மேலும் பல நாடுகளில் பொருட்களுக்கான தேவை குறைந்ததால், இது தொழில்துறை உற்பத்தியில் மிகப்பெரிய வீழ்ச்சியை ஏற்படுத்தியதாகவும் கூறியுள்ளனர்.

பலவீனத்திற்கு பல காரணம்

பலவீனத்திற்கு பல காரணம்

இது தொழில் துறைகளில் முதலீடுகள் குறைவதற்கு வழி வகுத்தன என்றும் கூறப்படுகிறது. மேலும் இது தவிர தொழில் துறை மற்றும் உற்பத்தி துறை பலவீனத்திற்கு பல காரணங்கள் உள்ளன. உலகளாவிய வாகன உற்பத்தியில் சரிவு ஏற்பட்டதற்கு, 2017ம் ஆண்டிற்கு பிற்பகுதியில் இருந்தே தொழில்துறையில் ஏற்பட்ட மந்த நிலையையும் ஒரு காரணம் என்று யுபிஎஸ் கூறுகிறது.

வீழ்ச்சியடைந்த எண்ணெய் விலைகள் காரணம்

வீழ்ச்சியடைந்த எண்ணெய் விலைகள் காரணம்

இதற்கிடையில் அமெரிக்காவில் வீழ்ச்சியடைந்த எண்ணெய் விலைகள், இதனால் எண்ணெய் உற்பத்தியையும் குறைத்து விட்டன. இந்த நேரத்தில் தொழில் துறையின் மந்த நிலையை கால் பகுதியாக கணக்கிடுகிறது. இதற்கு அடுத்தாற்போல் அமெரிக்கா சீனா வர்த்தக போர். இது எப்படி முன்னேறுகிறது என்பதை பொறுத்து தான் அடுத்த ஆண்டும் வளர்ச்சி இருக்கும என்றும் தெரிவித்துள்ளது.

சர்வதேச நாணய கணிப்புக்கு கீழ் வளர்ச்சி

சர்வதேச நாணய கணிப்புக்கு கீழ் வளர்ச்சி

இந்த நிலையில் உலகளாவிய மொத்த உள்நாட்டு தயாரிப்பு வளர்ச்சி 2019ல் 3.1 சதவிகிதத்திலிருந்து, 2020ல் 3%-மாக குறைத்துள்ளது. இது சர்வதேச நாணய நிதியத்தின் கணிப்புக்கு கீழ் உள்ளது என்றும் கூறப்படுகிறது. மேலும் அமெரிக்கா சீனா விடையே நடந்து வரும் வர்த்தக போருக்கு இடையே அமெரிக்கா, சீனா பொருட்களுக்கு வரிகளை அகற்றுவது சந்தேகம் தான். இதனால் உலகளாவிய பங்குகள் அடுத்த ஆண்டு 4% குறைவாகவே உயரும். இது நடப்பு ஆண்டில் 17% வரை உயரலாம் என்றும் யுபிஎஸ் தெரிவித்துள்ளது.

வளர்ச்சி குறையும்

வளர்ச்சி குறையும்

அமெரிக்காவின் 2020ம் ஆண்டு ஜிடிபி 1.1 சதவிகிதமாக இருக்கும் என்றும் கணித்துள்ளது. ஆனால் இது ஆண்டு தொடக்கத்தில் இன்னும் மெதுவாகவே இருக்கும் என்றும் கணித்துள்ளது. இது முதல் இரண்டு காலாண்டுகளிலும் முறையே 0.5% மற்றும் 0.3% வளர்ச்சி மட்டுமே இருக்கும் என்றும் கூறியுள்ளது. இதற்கு அடுத்து மூன்று மற்றும் நான்காவது காலாண்டுகளில் முறையே 1.7% மற்றும் 2.2% வளர்ச்சி இருக்கும் என்றும் யுபிஎஸ் கணித்துள்ளது.

கட்டணங்கள் உயரும்

கட்டணங்கள் உயரும்

அமெரிக்கா சீனா வர்த்தக போர் ஒரு சுமூகமான நிலையை எட்டாத நிலையில், இதன் கட்டணங்கள் 30 சதவிகிதம் வரை உயர வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் யுபிஎஸ் உலகளாவிய வளர்ச்சி 2.8 சதவிகிதமாகவும், இதே அமெரிக்காவின் வளர்ச்சி 1.0 சதவிகிதமாகவும் குறையும் என்றும் யுபிஎஸ் கணித்துள்ளது.

மந்தநிலை இன்னும் நீடிக்கும்

மந்தநிலை இன்னும் நீடிக்கும்

இந்த உலகளாவிய பிரச்சனையால் உலகெங்கிலும் உள்ள மத்திய வங்கிகள் தொடர்ந்து வட்டி விகிதத்தினை குறைக்கலாம். இதனால் பத்திரங்கள் லாபமும் குறையலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் உலகளாவிய பங்கு சந்தைகள் 5 சதவிகித வீழ்ச்சியை காணும் என்றும் யுபிஎஸ் கணித்துள்ளது. மேலும் உலகளாவிய வளர்ச்சிக்கான பெரிய நிவாரணம் ஒன்று இருப்பதாக எதிர்பார்க்கவில்லை. வணிகத்தில் நிச்சயமற்ற தன்மையே நீடிப்பதால் சில சேதங்கள் ஏற்படுவதை தவிர்க்க முடியாது.

வருவாய் இழப்பு

வருவாய் இழப்பு

மூடப்பட்ட நிறுவனங்களை மீண்டும் திறக்க முடியாது. இதனால் வேலையை இழந்தவர்கள் புதிய வேலையை கண்டறிவதற்குள் தங்களது வருமானத்தை குறிப்பிட்ட காலத்திற்கு இழப்பு ஏற்படும் என்றும் யுபிஎஸ் கணித்துள்ளது. இது தவிர இன்னும் பல தகவல்களையும் யுபிஎஸ் வெளியிட்டுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: global economy
English summary

Around 40 strategists and economists says global economy going to further down

Around 40 strategists and economists say global economy going to further down. So global equities market growth only 4% in next year, but it’s growing this year 17% said UBS.
Story first published: Friday, November 15, 2019, 11:48 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X