IT துறையில் இவங்க தான் டாப்.. பெங்களூரை அதிகமாக தேர்தெடுக்கும் ஊழியர்கள்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: இந்தியாவின் ஐடி நகரமான திகழும் பெங்களூரு நகரம் தான் ஐடி ஊழியர்களின் முதன்மை தேர்வாக இருப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.

 

மிக அதிகளவிலான போக்குவரத்து நெரிசல் காணப்பட்டாலும் பெங்களுருவினைத் தான், தகவல் தொழில்நுட்ப துறை வல்லுனர்கள் பெங்களூருவை சிறந்த நகரமாகக் கருதுகின்றனராம்.

ஏனெனில் இந்த நகரம் உயர்தரமான வாழ்க்கைத் தரங்கள், அதிகப்படியான தொழில்துறை வளர்ச்சியினை வழங்குவதாகவும் ஒர் கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

மதுபானம் விற்க அனுமதி வேண்டும்.. அடம்பிடிக்கும் மதுபான நிறுவனங்கள்!மதுபானம் விற்க அனுமதி வேண்டும்.. அடம்பிடிக்கும் மதுபான நிறுவனங்கள்!

பெங்களூரு ஏதுவான நகரம்

பெங்களூரு ஏதுவான நகரம்

TechGig's கணக்கெடுப்பின் படி, தகவல் தொழில்நுட்ப துறையில் 40% அதிகமானோர் பெங்களூருவையே வேலை செய்ய ஏதுவான நகரமாக தேர்தெடுத்துள்ளனர். இதே பெங்களூருவிற்கு அடுத்தப்படியாக ஹைதாராபாத் மற்றும் புனே முறையே 13 மற்றும் 11 சதவீத இடங்களை பிடித்துள்ளதாகவும் அந்த கணிப்பில் தெரிய வந்துள்ளது.

இவங்க எல்லாம் நெக்ஸ்ட்

இவங்க எல்லாம் நெக்ஸ்ட்

இதே டெல்லி என்சிஆர் மக்களின் விருப்பமான பட்டியியல் மிகக் குறைந்த வாக்குகளையே பெற்றுள்ளதாம். இதே கொல்கத்தா கூட டெல்லியை விட 21 சதவீத வாக்குகளைப் பெற்று டெல்லி என்சிஆர்ரை விட, சற்று சிறப்பாக இருந்தது எனவும் செய்திகள் வெளியாகியுள்ளது.

என்ன சொல்கிறது இந்த ஆய்வு?
 

என்ன சொல்கிறது இந்த ஆய்வு?

மேலும் இந்த கணக்கெடுப்பானது ஏப்ரல் மாத தொடக்கத்தில் 25 -35 வயதுக்குட்பட்ட 1,830 தகவல் தொழில்நுட்ப வல்லுனர்களிடையே இந்த ஆய்வு நடத்தப்பட்டது எனவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் 58% தகவல் தொழில்னுட்ப வல்லுனர்கள் பெங்களூரையே விரும்புகின்றனர் என்றும் இந்த ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது.

விருப்பமான தேர்வு

விருப்பமான தேர்வு

மேலும் சுமார் 71% பேர் சம்பள உயர்வு தொடர்பாக இந்த நகரத்தினை சிறந்ததாக வாக்களித்துள்ளனர். அதே சமயம் 68% பேர் தொழில் வளர்ச்சி மற்றும் வேலை வாய்ப்புக்களுக்காக வாக்களித்துள்ளனராம். 57% அதிகமான தகவல் தொழில்நுட்ப வல்லுனர்கள் தங்களுக்கு விருப்பமான நகரத்தில் ஏற்கனவே பணியாற்றி வருவதாகவும் ஆய்வில் தெரிய வந்துள்ளது.

நகரத்தினை மாற்ற விருப்பம் இல்லை

நகரத்தினை மாற்ற விருப்பம் இல்லை

தாங்கள் வேலை பார்க்கும் நகரங்களை மாற்றுவது குறித்த எதிர்கால திட்டங்கள் குறித்து அவர்கள் கேட்டபோது, பெரும்பாலான ஊழியர்கள் தங்கள் நகரத்தினை மாற்றுவது குறித்து தங்களது விருப்பங்களை தெரிவிக்கவில்லை என கூறப்படுகிறது. மேலும் அனுபவம் வாய்ந்த தொழில் வல்லுனர்கள் மற்றும் புதியவர்களிடையே பெங்களூரு முதல் இடத்தினை வென்றுள்ளது.

சிறந்த நகரம்

சிறந்த நகரம்

இது மட்டும் அல்ல, 61% சதவீதம் பதில் அளித்தவர்களில், தகவல் தொழில்நுட்ப வல்லுனர்களுக்கு தங்களுக்கு இந்த துறை சிறந்ததொரு வாய்ப்பினை வழங்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளனராம். ஆக மொத்தம் பெங்களூரு சிறந்த நகரமாக ஊழியர்களின் மனதில் பதிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Bengaluru is the best city of IT professionals

TechGig's survey says over 40% of information technology professionals voted Bengaluru as the top city to work.
Story first published: Thursday, April 9, 2020, 15:51 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X