உலகின் முன்னணி பொருளாதார நாடுகளின் வளர்ச்சியைக் காட்டிலும் இந்தியாவின் வளர்ச்சி மிகவும் சிறப்பாக இருக்கிறது எனப் பல தரப்பினர் கூறி வருகின்றனர்.
இந்த நிலையில், இந்திய சந்தையில் அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்கிய நகரம் எது என்ற ஆய்வை செய்யப்பட்டு உள்ளது. இந்த ஆய்வில் தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையின் நிலைமை என்ன தெரியுமா..?

பெங்களூர்
இந்தியாவில் அனைத்து துறைகளிலும் அதிகப்படியான வேலைவாய்ப்புகளை உருவாக்கிய பெரு நகரங்களில் (tier-1 cities) பெங்களூர் முதல் இடத்தில் உள்ளது. இதேபோல் 2ஆம் தர நகரங்களில் ஜெய்ப்பூர், வடோத்ரா மற்றும் கோவா ஆகியவை அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்கிய நகரமாக உள்ளது.

ஐடி வேலைவாய்ப்பு
ஐடி துறையைத் தவிர, மற்ற துறைகளிலும் பெங்களூரு அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்குகிறது என்று இந்திய நகரங்களின் கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது. இதன் மூலம் பெங்களூர் ஐடி துறையை மட்டும் சார்ந்து இல்லாமல் பிற துறைகளிலும் வளர்ச்சி அடைந்து வருகிறது.

ராண்ட்ஸ்டாட் ஆய்வு
ராண்ட்ஸ்டாட் இன்சைட்ஸ் டேலண்ட் டிரெண்ட்ஸ் அறிக்கை 2022 இன் படி, நாட்டின் பெரு நகரங்களில் (tier-1 cities) செய்யப்பட்ட மொத்த வேலைவாய்ப்பு நியமனத்தில் ஜூனியர் லெவலில் 37.58%, நடுத்தர அளவில் 43.61% மற்றும் மூத்த நிலைகளில் 50.5% பணிகள் பெங்களூரில் மட்டுமே பணியமர்த்தப்பட்டு உள்ளது தெரிய வந்துள்ளது.

FMCG துறை
இதேபோல் FMCG துறையில் உருவாக்கப்பட்ட மொத்த வேலைவாய்ப்புகளில் ஜூனியர் லெவலில் 37.9%, நடுத்தர அளவில் 42.1% மற்றும் சீனியர் லெவல் 46.6% வேலைகளைப் பெங்களூரில் மட்டும் உருவாக்கப்பட்டு உள்ளது.

முக்கிய நகரங்கள்
ராண்ட்ஸ்டாட் இன்சைட்ஸ் டேலண்ட் ட்ரெண்ட்ஸ் அறிக்கை இரண்டாவது ஆண்டாக வெளியாகியுள்ளது. இந்த அறிக்கையில் நாட்டின் எட்டு பெரு நகரங்கள் மற்றும் 18 2ஆம் தர நகரங்களில் உள்ள நிலைப்பாடுகளை ஆய்வு செய்யப்பட்டு உள்ளது.

முக்கியத் துறைகள்
இந்த ஆய்வில் FMCG & ரீடைல் விற்பனை, தொலைத்தொடர்பு & யுடிலிட்டீஸ், கட்டுமானம் மற்றும் உள்கட்டமைப்புத் துறை குறித்த புரிதல்களை வழங்கியது. 2022 ஆம் ஆண்டின் ஜனவரி-ஜூலை வரையிலான காலத்தில் 100,000 க்கும் மேற்பட்ட பணி நியமனங்கள் வைத்து ஆய்வு செய்யப்பட்டு உள்ளது.

பெங்களூர் சிறப்புகள்
போதுமான திறன் வாய்ந்த ஊழியர்கள், வீட்டில் இருந்து பணியாற்ற போதுமான கட்டமைப்புகள், ease of compliance போன்ற பல காரணிகளில் பெங்களூர் நாட்டின் முன்னணி நகரமாக விளங்குகிறது.

மும்பை
இதேபோல் மும்பை நகரம் பாரம்பரியமான வர்த்தகத் துறையான BFSI, PHL, FMCG & சில்லறை விற்பனை, தொலைத்தொடர்பு, கட்டுமானம் மற்றும் உள்கட்டமைப்பு மற்றும் எனர்ஜி மற்றும் யூடிலிட்டீஸ் ஆகிய துறைகளில் சிறந்து விளங்கும் நகரமாக உள்ளது.

சென்னை
இந்தப் பட்டியலில் முதல் இரண்டு இடங்களைப் பெங்களூர், மும்பை பிடித்துள்ள நிலையில் சென்னை முதல் இடத்தைப் பிடிக்காதது வருத்தம் அளிக்கிறது.சென்னையில் பல உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் புதிய அலுவலகத்தையும், உற்பத்தி தளத்தையும் உருவாக்கி வருகிறது.