சுத்தி சுத்தி அடிவாங்கும் பில் கேட்ஸ்.. 50 பில்லியன் டாலர் நிறுவனத்தின் நிலை என்ன..?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலகின் மிகப்பெரிய டெக் நிறுவனமாக விளங்கும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் நிறுவனர் பில் கேட்ஸ் தனது காதல் மனைவியை 27 வருடத் திருமண வாழ்க்கைக்குப் பின் விவாகரத்துச் செய்ய முடிவு செய்துள்ளார்.

இதன் மூலம் பில் கேட்ஸ் மற்றும் அவரது மனைவி மெலிண்டா பிரென்ச் கேட்ஸ் இணைந்து நிர்வாகம் செய்யும் 50 பில்லியன் டாலர் மதிப்பிலான நிறுவனத்தின் நிலை என்ன..?

ஆனா ஓரே நேரத்தில் சுத்தி சுத்தி அடிவாங்குகிறார் பில் கேட்ஸ்.. பாவம் மனுஷன்

 பில் கேட்ஸ்-ன் இரு நிறுவனங்கள்

பில் கேட்ஸ்-ன் இரு நிறுவனங்கள்

பில் கேட்ஸ் தனது மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் நேரடி நிர்வாகப் பணியில் இருந்து வெளியேறிய பின்பு பல துறையில் முதலீடு செய்யக் கேஸ்கேட் இன்வெஸ்ட்மென்ட் என்னும் நிறுவனத்தை உருவாக்கினார்.

உலக மக்களின் வாழ்வியல், சுகாதாரம், உடல்நலம் ஆகியவற்றை மேம்படுத்தவும், சுற்றுச்சூழ்நிலையை பாதுகாக்கவும் பில் அண்ட் மெலிண்டா கேட்ஸ் பவுண்டேஷன் என்று 2 இரு நிறுவனங்கள் துவங்கினார் பில் கேட்ஸ்.

 

 பில் அண்ட் மெலிண்டா கேட்ஸ் பவுண்டேஷன்

பில் அண்ட் மெலிண்டா கேட்ஸ் பவுண்டேஷன்

15 ஆண்டுகளாக இந்தியா, ஆப்பிரிக்கா எனப் பல நாடுகளுக்குப் பல்வேறு உதவிகளைச் செய்து வரும் பில் அண்ட் மெலிண்டா கேட்ஸ் பவுண்டேஷன் நிறுவனத்தை பில் கேட்ஸ் மற்றும் அவரது மனைவி மெலிண்டா பிரென்ச் கேட்ஸ் இருவரும் சேர்ந்து தான் நிர்வாகம் செய்து வருகின்றனர்.

 ஊழியர்கள் மத்தியில் பயம்
 

ஊழியர்கள் மத்தியில் பயம்

சுமார் 50 பில்லியன் டாலர் மதிப்பிலான பில் அண்ட் மெலிண்டா கேட்ஸ் பவுண்டேஷன் நிறுவனம் இருவரின் விவாகரத்துக்குப் பின் என்ன ஆகும் என்ற கேள்வி இந்நிறுவன ஊழியர்கள் மத்தியில் பயத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கான பதிலைத் தான் தற்போது பில் அண்ட் மெலிண்டா கேட்ஸ் பவுண்டேஷன் நிர்வாகமும், ஊழியர்களும் கடந்த 3 வாரங்களாக எதிர்பார்த்து வருகின்றனர்.

 

 சிஇஓ மார்க் சூஸ்மேன்

சிஇஓ மார்க் சூஸ்மேன்

பில் அண்ட் மெலிண்டா கேட்ஸ் பவுண்டேஷன் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான மார்க் சூஸ்மேன் கடந்த 3 வாரங்களாகப் பில் கேட்ஸ் மற்றும் மெலிண்டா கேட்ஸ் உடன் நிறுவனத்தின் எதிர்காலம் மற்றும் நீண்ட கால நிர்வாக முறை குறித்துத் தொடர்ந்து ஆலோசனை செய்து வகுகிறார்.

 கேட்ஸ் பவுண்டேஷன் நிர்வாகம்

கேட்ஸ் பவுண்டேஷன் நிர்வாகம்

இதுமட்டும் அல்லாமல் பில் மற்றும் மெலிண்டா விவாகரத்து மூலம் கேட்ஸ் பவுண்டேஷன் நிறுவன பணிகளும், ஊழியர்களும் எவ்விதமான பாதிப்பையும் அடையக்கூடாது என்பதில் நிர்வாகம் உறுதியாக இருப்பதாக மார்ச் சூஸ்மேன் தெரிவித்துள்ளார்.

 வாரன் பஃபெட் உடன் ஆலோசனை

வாரன் பஃபெட் உடன் ஆலோசனை

இதுமட்டும் அல்லாமல் கேட்ஸ் பவுண்டேஷன் அமைப்பின் அடுத்த பெரும் முதலீட்டாளரும் நிர்வாகத் தலைவருமான வாரன் பஃபெட் உடனும் மார்க் சூஸ்மேன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். மேலும் இதுவரை எவ்விதமான முடிவுகளும் எடுக்கப்படவில்லை என்று மார்க் சூஸ்மேன் தெரிவித்துள்ளார்.

 பில் கேட்ஸ் பாலியல் தொடர்பு

பில் கேட்ஸ் பாலியல் தொடர்பு

இதற்கிடையில் பில் கேட்ஸ்-ன் மைக்ரோசாப்ட் ஊழியர் உடனான பாலியல் தொடர்புகள் குறித்த செய்தி வெளியானது. இதன் மூலம் விவாகரத்து ஆன பின்பும் இருவரும் இணைந்து கேட்ஸ் பவுண்டேஷன் நிறுவனத்தில் பணியாற்றுவது மிகவும் கடினம் எனவும் கருத்து நிலவுகிறது.

 கேஸ்கேட் இன்வெஸ்ட்மென்ட் நிறுவனம்

கேஸ்கேட் இன்வெஸ்ட்மென்ட் நிறுவனம்

இதுமட்டும் அல்லாமல் பில் கேட்ஸ் தனது கனவு நிறுவனமாகக் கருதும் கேஸ்கேட் இன்வெஸ்ட்மென்ட் நிறுவனத்தின் சிஇஓ-வான மைக்கேல் லார்சன் நடவடிக்கை குறித்துப் பில் கேட்ஸ்-க்கு புகார் வந்துள்ளது. மைக்கேல் லார்சன்-க்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியாத இக்கட்டான சூழ்நிலையில் மாட்டிக்கொண்டு உள்ளார்.

 சுத்தி சுத்தி அடிவாங்கும் பில் கேட்ஸ்..

சுத்தி சுத்தி அடிவாங்கும் பில் கேட்ஸ்..


பில் கேட்ஸ் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் மூலம் மெலிண்டா கேட்ஸ் உடன் இணைந்து கேட்ஸ் பவுண்டேஷன் நிறுவனத்தில் பணியாற்ற முடியாது, கேஸ்கேட் இன்வெஸ்ட்மென்ட் நிறுவனத்தின் சிஇஓ மைக்கேல் லார்சன் நடவடிக்கையில் பிரச்சனை, இப்படிச் சுத்தி சுத்தி அடிவாங்குகிறார் பில் கேட்ஸ்.

அட உங்களுக்குப் பில் கேட்ஸ் செய்த கேடித்தனம் எல்லாம் தெரியாதுல்ல..

இதைக் கிளிக் பண்ணுங்க மொத்த வண்டவாளம் தெரிந்துகொள்ளலாம்.இதைக் கிளிக் பண்ணுங்க மொத்த வண்டவாளம் தெரிந்துகொள்ளலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Bill gates in trouble: Whats is the future of gates foundation and cascade investments

Bill gates in trouble: What is the future of gates foundation and cascade investments
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X