இனி இதுவும் டோர் டெலிவரி கிடைக்கும்.. பாரத் பெட்ரோலியம் அதிரடி..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஒரு போன் செய்தால் போதும், இனி வீடு தேடி டீசல் டெலிவரி செய்யப்படும். தமிழகத்தின் சில பகுதிகளில் இந்த சேவையினை பிபிசிஎல் நிறுவனம் தற்போது தொடங்கியுள்ளது.

நாட்டின் மிகப்பெரிய எண்ணெய் நிறுவனமான பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் தான் இத்தகைய சேவையை தொடங்கியுள்ளது.

 தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 அதிகரிப்பு.. இது வாங்க சரியான நேரமா..! தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 அதிகரிப்பு.. இது வாங்க சரியான நேரமா..!

நாட்டில் எரிபொருளுக்கான தேவையானது நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தேவையை பூர்த்தி செய்யும் வகையில் பாரத் பெட்ரோலிய நிறுவனம் இப்படியொரு சேவையினை அறிவித்துள்ளது.

Array

Array

பிபிசிஎல் மொபைல் பிரவுசர்கள் மூலம் டீசலை டெலிவரி செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பிபிசிஎல்லின் இந்த திட்டம் மூலம் வாடிக்கையாளர்கள் அவசர தேவைக்கு ஏற்ப, சரியான நேரத்தில் டெலிவரியினை பெற முடியும். இப்படி டெலிவரி செய்யப்படும் டீசலுக்கு தரம் மற்றும் அளவீடுகளும் மிக சரியான அளவில் இருக்கும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.

பாதுகாப்பாக டெலிவரி

பாதுகாப்பாக டெலிவரி

இவை பாதுகாப்பாக டெலிவரி செய்யப்படும் என்றும் பிபிசிஎல் தெரிவித்துள்ளது. இது நாட்டில் எரிபொருள் வணிகத்தினை மேம்படுத்தும் பொருட்டு அடுத்த கட்டத்திற்கு நகர்த்தவும் பிபிசிஎல் இந்த செயல்பாட்டினை விரிவாக்கம் செய்து வருகின்றது. இதனை எளிதாக்கும் வகையில் பியூவல்கார்ட் அதன் செயல்பாட்டுத் திறனை அதிகரிக்க உதவியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

 தொழில் முனைவோருக்கு ஒரு புதிய வாய்ப்பு

தொழில் முனைவோருக்கு ஒரு புதிய வாய்ப்பு

கடந்த ஆகஸ்ட் 13 வரையிலான இரண்டு ஆண்டுகளில் 1588 ஃபியூல்கார்ட்ஸ் மற்றும் 129 பியூல் என்ட்ஸ் கமிஷன் உள்ளது.

பிபிசிஎல் நிறுவனம் ஏற்கனவே 63 மொபைல் டிஸ்பென்சர்களை தொடங்கியுள்ளது. இது மேற்கு வங்கம், பீகார், ஜார்கண்ட், ஓடிசா, வடகிழக்கு மாநிலங்களில் தொடங்கியுள்ளது. இது இளம் தொழில் முனைவோருக்கு ஒரு புதிய முயற்சியாகவும் அமையும் என்று பிபிசிஎல் தெரிவித்துள்ளது.

பல் ஸ்டார்டப்கள்

பல் ஸ்டார்டப்கள்

பிபிசிஎல் நிறுவனம் ரிலையன்ஸ் பிபி மொபைலிட்டி நிறுவனத்துடன் போட்டியிடுகிறது.

ரெப்பொ எனர்ஜி, பெப்யூல்ஸ்ம் மைபெட்ரோல் பம்ப், ஃபியூல்பட்டி மற்றும் ஹம்ஸாஃபர் போன்ற ஸ்டாரப்களும் தேவைக்கு ஏற்ப எரிபொருள் டெலிவரி சேவைகளை தொடங்கியுள்ளன. இந்த ஸ்டார்டப் நிறுவனங்கள் அரசு மற்றும் தனியார் எண்ணெய் நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுகின்றன.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

BPCL launches doorstep delivery of diesel service

BPCL launches doorstep delivery of diesel service
Story first published: Saturday, August 14, 2021, 18:01 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X