குறைந்த விலை ரீசார்ஜ் திட்டங்களில் கலக்கும் ஜியோ..! ஏர்டெல், ஐடியாவை விட 8 % குறைவாம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்திய டெலிகாம் துறையில் பார்தி ஏர்டெல் தனிப் பெரும் நிறுவனமாக தன் சாம்ராஜ்யத்தை நடத்திக் கொண்டிருந்த போது... குறுக்கில் புகுந்து தானும் ஒரு டான் தான் என நிரூபித்த நிறுவனம் ரிலையன்ஸ் ஜியோ.

இந்திய டெலிகாம் சந்தையில் ரிலையன்ஸ் ஜியோ வரவுக்குப் பின் தொடர்ந்து ரீசார்ஜ் திட்டங்களின் விலை சரிந்து கொண்டே வந்ததை நாம் அறிவோம்.

ஏற்கனவே வாடிக்கையாளர்களைத் தக்க வைத்துக் கொண்டு நல்ல வியாபாரம் செய்ய முடியாமல் தவித்துக் கொண்டிருந்த டெலிகாம் நிறுவனங்களுக்கு, தன் ரீசார்ஜ் திட்டங்கள் விலை வழியாக ஆப்படிக்கத் தொடங்கியது ஜியோ.

எங்கும் மலிவு, எதிலும் மலிவு. இலவச வாய்ஸ் கால்கள். ஒரு ஜிபி டேட்டா 150 ரூபாய்க்கு விற்றது போய், 1ஜி டேட்டா 5 ரூபாய்க்கு கிடைத்தது என்றால் அதற்கு முழு முதல் காரணம் ரிலையன்ஸ் ஜியோ தான்.

நஷ்டம்

நஷ்டம்

சமீபத்தில் செப்டம்பர் 2019 காலாண்டில் ஏர்டெல் சுமார் 23,000 கோடி ரூபாய் நஷ்டக் கணக்கு காட்டியது. வொடாபோன் ஐடியா சுமார் 50,000 கோடி ரூபாய் நஷ்டக் கணக்கு காட்டி, இந்தியாவிலேயே, ஒரே காலாண்டில் அதிக நஷ்டத்தைச் சந்தித்த கம்பெனி என்கிற பெயரைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

விலை ஏற்றம்

விலை ஏற்றம்

இந்த நஷ்டத்தைத் தாங்க முடியாமல்... ஏர்டெல், வொடாபோன் ஐடியா, ரிலையன்ஸ் ஜியோ போன்ற நிறுவனங்கள் தங்கள் டெலிகாம் சேவைத் திட்டங்களுக்கான விலையை அதிகரிக்கத் திட்டமிட்டார்கள். திட்டமிட்டது போலவே அடுத்த சில வாரங்களில் திட்டங்களின் விலையை சுமார் 40 சதவிகிதம் வரை அதிகரித்துவிட்டார்கள். இப்போதும் ரிலையன்ஸ் ஜியோ தான் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களைத் தருகிறார்களா..? வாங்க பார்ப்போம்.

28 நாட்கள் ஏர்டெல் வொ.ஐடியா

28 நாட்கள் ஏர்டெல் வொ.ஐடியா

ஏர்டெல் - 249 ரூபாய் திட்டத்தில், 28 நாட்களுக்கு, நாள் ஒன்றுக்கு 1.5 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ் எம் எஸ் சேவையைப் பெறலாம்.

வொடாபோன் ஐடியா - 249 ரூபாய் திட்டத்தில், 28 நாட்களுக்கு, நாள் ஒன்றுக்கு 1.5 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ் எம் எஸ் சேவையைப் பெறலாம்.

28 நாட்கள் ஜியோ

28 நாட்கள் ஜியோ

ஆனால் ரிலையன்ஸ் ஜியோவில் 199 ரூபாய் திட்டத்திலேயே, 28 நாட்களுக்கு, நாள் ஒன்றுக்கு 1.5 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் ஜியோ டூ ஜியோ, 1000 நிமிடம் மற்ற நெட்வொர்க் கால்கள், தினமும் 100 எஸ் எம் எஸ்.. போன்ற சேவைகளைப் பெறலாம். 28 நாட்கள் திட்டத்தில், மற்ற நிறுவனங்களை விட ஜியோ சுமார் 20 சதவிகிதம் விலை குறைவு.

84 நாட்கள் வொ.ஐடியா

84 நாட்கள் வொ.ஐடியா

ஏர்டெல் - 598 ரூபாய் திட்டத்தில், 84 நாட்களுக்கு, நாள் ஒன்றுக்கு 1.5 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ் எம் எஸ் சேவையைப் பெறலாம்.

வொடாபோன் ஐடியா - 599 ரூபாய் திட்டத்தில், 84 நாட்களுக்கு, நாள் ஒன்றுக்கு 1.5 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ் எம் எஸ் சேவையைப் பெறலாம்.

84 நாட்கள் ஜியோ

84 நாட்கள் ஜியோ

ஆனால் ரிலையன்ஸ் ஜியோவில் 555 ரூபாய் திட்டத்திலேயே, 84 நட்களுக்கு, நாள் ஒன்றுக்கு 1.5 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் ஜியோ டூ ஜியோ, 3000 நிமிடம் மற்ற நெட்வொர்க் கால்கள், தினமும் 100 எஸ் எம் எஸ்.. போன்ற சேவைகளைப் பெறலாம். 84 நாட்கள் திட்டத்தில், மற்ற நிறுவனங்களை விட ஜியோ சுமார் 08 சதவிகிதம் விலை குறைவு.

365 நாட்கள் வொ.ஐடியா

365 நாட்கள் வொ.ஐடியா

ஏர்டெல் - 2,398 ரூபாய் திட்டத்தில், 365 நாட்களுக்கு, நாள் ஒன்றுக்கு 1.5 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ் எம் எஸ் சேவையைப் பெறலாம்.

வொடாபோன் ஐடியா - 2,399 ரூபாய் திட்டத்தில், 365 நாட்களுக்கு, நாள் ஒன்றுக்கு 1.5 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ் எம் எஸ் சேவையைப் பெறலாம்.

365 நாட்கள் ஜியோ

365 நாட்கள் ஜியோ

ஆனால் ரிலையன்ஸ் ஜியோவில் 2,199 ரூபாய் திட்டத்திலேயே, 365 நாட்களுக்கு, நாள் ஒன்றுக்கு 1.5 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் ஜியோ டூ ஜியோ, 12,000 நிமிடம் மற்ற நெட்வொர்க் கால்கள், தினமும் 100 எஸ் எம் எஸ்.. போன்ற சேவைகளைப் பெறலாம். 365 நாட்கள் திட்டத்தில், மற்ற நிறுவனங்களை விட ஜியோ சுமார் 8.5 சதவிகிதம் விலை குறைவு.

ராஜா தான்

ராஜா தான்

ஆக ஜியோ நிறுவனம் தன்னுடைய திட்டங்களின் விலையை மிகத் தெளிவாகவும், சாமர்த்தியமாகவும் அதிகரித்து இருக்கிறது. மற்ற நிறுவனங்களின் ரீசார்ஜ் திட்டங்களை விட குறைந்தபட்சம் 8 சதவிகிதமாவது விலை குறைவாகவே தங்கள் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை வைத்திருக்கிறார்கள். எனவே ஜியோவுக்கு இப்போதும் முரட்டு லாபம் பார்த்து இந்திய டெலிகாமின் ராஜாவாக வலம் வரும்.

மாற வாய்ப்பு

மாற வாய்ப்பு

எனவே ரிலையன்ஸ் ஜியோ டெலிகாம் சேவையைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள், பெரிதாக மற்ற நிறுவனங்களுக்கு மாறமாட்டார்கள். ஆனால் விலை அதிகரிப்பு காரணமாக மற்ற நிறுவன சேவையைப் பயன்படுத்துபவர்கள், ஜியோவுக்கு மாற வாய்ப்பு இருக்கிறது. கூடிய விரைவில் இந்தியாவின் 400 மில்லியன் வாடிக்கையாளர்களைக் கொண்ட நிறுவனமாக ஜியோ வந்தாலும் வந்துவிடும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Cheapest recharge plans have been providing by reliance jio

The mukesh ambani managing reliance jio is still providing the cheapest recharge plans in india for their customers. Reliance jio plans are minimum 8 percent cheap than any other companies recharge plans
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X