இந்தியாவிற்கு வரும் சீன பெருஞ் சுவர்.. 2,100 கோடி ரூபாய் டீல்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவில் மோசமான பொருளாதாரச் சூழ்நிலையின் காரணமாக உள்நாட்டுக் கார் தயாரிப்பு நிறுவனங்கள் அனைத்தும் அதிகளவில் பாதிக்கப்பட்டு உற்பத்தி நிறுத்த, ஊழியர்கள் பணிநீக்கம், விற்பனையில் மந்த எனப் பல சிக்கல்களைச் சந்தித்து வருகிறது. கடந்த 6 மாதமாகவே இந்திய ஆட்டோமொபைல் சந்தை வாழ்வா..? சாவா..? என்கிற நிலையில் தான் இருக்கிறது.

ஆனால் இதேகாலகட்டத்தில் இந்தியச் சந்தைக்குள் தனது முதல் அடியை எடுத்து வைத்த வெளிநாட்டு நிறுவனங்களான கியா மோட்டார்ஸ் மற்றும் எம்ஜி மோட்டார்ஸ் மக்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பைப் பெற்றுச் சிறப்பான வர்த்தகத்தைப் பதிவு செய்துள்ளது. இதே பார்மூலாவை தற்போது சீனா நிறுவனமும் பின்பற்ற முடிவு செய்துள்ளது.

ஜெனரல் மோட்டார்ஸ்

ஜெனரல் மோட்டார்ஸ்

அமெரிக்காவின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான ஜெனரல் மோட்டார்ஸ் மந்தமான வர்த்தகம், செலவின கட்டுப்பாடு ஆகியவற்றின் காரணமாக இந்தியச் சந்தையை விட்டு மொத்தமாக வெளியேறுவதாகச் சில மாதங்களுக்கு முன்பு அறிவித்தது. இந்தச் செய்த இந்திய ஆட்டோமொபைல் சந்தைக்குப் பெரும் அதிர்ச்சியைக் கொடுத்தது. இந்தச் சூழ்நிலையில் தான ஜெனரல் மோட்டார்ஸின் இந்தியத் தொழிற்சாலை விற்பனைக்கு வந்தது.

சீன பெருஞ் சுவர்

சீன பெருஞ் சுவர்

Great Wall என்கிற சீனா ஆட்டோமொபைல் நிறுவனம் அந்நாட்டில் சிறப்பான வர்த்தகத்தைச் செய்து வந்தது, ஆனால் அமெரிக்கச் சீன பிரச்சனையால் இந்நிறுவனத்தின் வர்த்தக வளர்ச்சி தொய்வு அடையத் துவங்கியது.

இந்த இக்கட்டான சூழ்நிலையை வெளிநாட்டு வர்த்தக வளர்ச்சிக்காகப் பயன்படுத்தத் திட்டமிட்ட Great Wall மோட்டார்ஸ் இந்தியாவில் தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்ய முடிவு செய்து தற்போது ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் இந்தியத் தொழிற்சாலையை வாங்க முடிவு செய்துள்ளது.

ஒப்பந்தம்

ஒப்பந்தம்

இந்திய தொழிற்சாலையை வாங்குவதற்கான ஒப்பந்தம் ஜெனரல் மோட்டார்ஸ் மற்றும் கிரேட் வால் மோட்டாஸ் இடையில் 2020ஆம் ஆண்டின் 2வது அரையாண்டில் நடைபெறும் எனத் தெரிகிறது.

இந்தத் தொழிற்சாலையின் மூலம் கிரேட் வால் மோட்டாஸ் இந்தியாவில் கார் விற்பனை மட்டும் அல்லாமல் கார் தயாரிப்பு பணிகளையும் செய்ய முடியும். சீன நிறுவனத்தின் வருகையால் இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் மிகப்பெரிய போட்டி உருவாக உள்ளது.

எஸ்யூவி கார்

எஸ்யூவி கார்

சீனாவில் எஸ்யூவி கார்களை அதிகம் விற்பனை செய்யும் நிறுவனங்களில் மிக முக்கியமான ஒன்று கிரேட் வால் மோட்டாஸ். இந்நிறுவனம் இந்தியாவில் தனது HAVAL மற்றும் இதர எலக்ட்ரிக் கார் ரகங்களை அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளதாக இந்நிறுவனத்தின துணை தலைவர் Liu Xiangshang தெரிவித்துள்ளார்.

2,100 கோடி ரூபாய்

2,100 கோடி ரூபாய்

ஆட்டோமொபைல் சந்தைக்கு இந்தியாவில் மிகப்பெரிய வாய்ப்பு உள்ளது, குறிப்பாகச் சொல்ல வேண்டுமென்றால் எஸ்யூவி கார்களும், அதிநவீன கார்களும் இந்தியாவில் பெரும் வரவேற்பு உள்ளது. இதை அடிப்படையாகக் கொண்டு தான் கிரேட் வால் மோட்டாஸ் இந்திய வர்த்தகத்திற்காக ஜெனரல் மோட்டார்ஸ் தொழிற்சாலையை 2,100 கோடி ரூபாய் முதலீட்டில் வாங்க முடிவு செய்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

China's Great Wall enters India, to buy General Motors' plant near Pune

China's biggest SUV maker Great Wall Motors has agreed to buy General Motors' (GM) car plant in Talegaon near Pune for a reported ₹2,100 crore. GM already sold its other plant in Gujarat's Halol to China's SAIC, where it builds cars under its British brand, MG Motor. Great Wall plans to enter India with its Haval and electric vehicle brands.
Story first published: Sunday, January 19, 2020, 14:26 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X