காக்னிசண்ட் கொடுத்த இன்ப அதிர்ச்சி.. ஐடி ஊழியர்களுக்கு அடிக்க போகும் ஜாக்பாட்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெங்களுரூ: தகவல் தொழில் நுட்ப துறையில் முன்னணி நிறுவனமான காக்ணிசன்ட், இந்த ஆண்டு 20,000 பேருக்கு மேல் பணியமர்த்த போவதாக தெரிவித்துள்ளது.

நாஸ்டாக்கில் பட்டியலிடப்பட்ட காக்னிசண்ட் டெக்னாலஜி சொல்யூசன்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனம் இந்த ஆண்டில் அதிகளவிலான தொழில்நுட்ப பட்டதாரிகளை பணியமர்த்த திட்டமிட்டுள்ளதாக கூறியுள்ளது.

ஏனெனில் வளர்ந்து வரும் மாணவர்கள் தங்களை டிஜிட்டல் திறங்களுடன் வளர்த்துக் கொள்கிறார்கள் என்று காக்னிசண்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பிரையன் ஹம்பரீஸ் தெரிவித்துள்ளார்.

பணியமர்த்தல் அதிகரிப்பு

பணியமர்த்தல் அதிகரிப்பு

இதெல்லாவற்றையும் விட பல பல்கலைகழக மாணவர்கள் தங்களை டிஜிட்டல் முறையில் தயாராகி வருவதால், 2020ம் ஆண்டிற்கான பொறியியல் மற்றும் அறிவியல் பட்டதாரிகளை பணியமர்த்துவதில் 30% அதிகரிப்பு குறித்து முடிவு செய்துள்ளோம் என்றும் ஹம்பரிஸ் கூறியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இது உண்மையில் ஐடி ஊழியர்களுக்கு அடிக்க போகும் ஜாக்பாட் தான்.

நம்பிக்கையையே பிரதிபலிக்கிறது

நம்பிக்கையையே பிரதிபலிக்கிறது

நியூஜெர்சியை தளமாகக் கொண்ட டீனெக் பொறியியல் பட்டதாரிகளுக்கான ஆண்டு சம்பளத்தை 18% அதிகரித்து 4,00,000 ரூபாயாக அதிகரித்துள்ளது. சுமார் 100 பொறியியல் பிரிமீயர் வளாகங்களில் நாங்கள் வழங்கிய சலுகைகளுக்கான ஏற்றுக் கொள்ளல் விகிதம் 80%க்கும் அதிகமாக உள்ளது. இது காக்னிசண்ட் மீதான அதிகரிக்கும் நம்பிக்கையையே பிரதிபலிக்கிறது. இது சமீபத்திய ஆண்டுகளை விட மிக அதிகம் என்றும் ஹம்பரீஸ் கூறியுள்ளார்.

பணி நீக்கம் மத்தியில் பணியமர்த்தல்

பணி நீக்கம் மத்தியில் பணியமர்த்தல்

இதில் கவனிக்கதக்க விஷயம் என்னவெனில் செலவுகளை கட்டுப்படுத்தவும், அதன் நிறுவன கட்டமைப்பை எளிதாக்குவதற்கும், ஒரு திட்டத்தின் ஒரு பகுதியாக செப்டம்பர் காலாண்டில் 10,000 - 12,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்வதாக நிறுவனம் அறிவித்தபோதிலும் கூட, காக்னிசண்ட் நிறுவனம் அதன் இந்திய தொழிலாளர் தொகுப்பினை வளர்பதற்கான திட்டங்களை முன்மொழிந்து வருகிறது.

இந்தியா கவர்ச்சிகரமான சந்தை

இந்தியா கவர்ச்சிகரமான சந்தை

மேலும் இது குறித்து ஹம்பரீஸ் கூறுகையில், இந்தியா எங்களுக்கு கவர்ச்சிகரமான சந்தை. மேலும் காக்னிசண்ட் நிறுவனம் இந்தியாவில் உள்ள உள்ளூர் திறமைகளையும் திறன்களையும் மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மேலும் இந்திய நிறுவனங்களிடையே தெளிவான முன்முயற்சி உள்ளது.

 கர்நாடகாவில் விரிவாக்கம்

கர்நாடகாவில் விரிவாக்கம்

கடந்த வாரம் காக்னிசண்ட் நிறுவனம் கர்நாடகாவில் தனது இருப்பை விரிவாக்கம் செய்தது. மங்களூரில் ஒரு புதிய 1,00,000 சதுர அடி வசதியுடன், 1,100 ஊழியகர்கள் இங்கு பணியாற்ற கூடிய அளவுக்கு விரிவாக்கம் செய்தது. ஏற்கனவே இது பெங்களூரு மற்றும் மைசூரு உள்ளிட்ட பல மாநிலங்களில் மொத்தம் 29,000 ஊழியர்களைக் கொண்டுள்ளது. அதிலும் இந்தியாவில் பெரும்பாலான ஊழியர்கள் சென்னையில் உள்ளனர் என்றும் ஹம்பரிஸ் கூறியுள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Cognizant plans to hire more technical graduates in India this year

Cognizant technology plans to hires more technical graduates in india this year. Cognizant aims to hire more than 20,000 employees from campuses in india this year, said Brian Humphries, CEO
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X