ஏழை வர்த்தகத்தினருக்கு மேலும் சுமை ஏற்றும் கேஸ் விலை.. சென்னையில் ரூ.900 தாண்டியுள்ளது..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஏழை வர்த்தகத்தினருக்கு மேலும் சுமையை ஏற்றும் விதமாக சமையல் எரிவாயு விலையானது மீண்டும் அதிகரித்துள்ளது.

 

தொடர்ந்து மூன்றாவது மாதமாக சிலிண்டருக்கு 25 ரூபாய் அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்த மூன்று மாதத்தில் மொத்தம் 75 ரூபாய் சமையல் எரிவாயு விலையானது அதிகரிக்கப்பட்டுள்ளது.

பெட்ரோல், டீசல் விலையை தொடர்ந்து, சமையல் எரிவாயு விலையும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. இது போகிற போக்கினை பார்த்தால் விரைவில் 1000 ரூபாயினை எட்டி விடும்போல என்ற கவலையும் சாமனியர்கள் மத்தியில் நிலவி வருகின்றது.

வாட்ஸ்அப் மூலம் சமையல் சிலிண்டர் புக் செய்வது எப்படி..?!

அத்தியாவசிய தேவை

அத்தியாவசிய தேவை

இது நாட்டின் நடுத்தர ஏழை மக்கள் மத்தியில் மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது எனலாம். ஏனெனில் எண்ணெய் நிறுவனங்களின் இந்த நடவடிக்கையானது சாமனிய மக்களின் பாக்கெட்டுகளை நேரிடையாக பதம் பார்க்கலாம். இன்று உணவு, உடை, இருப்பிடம் போல, அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாக எரிபொருட்கள் மாறியுள்ளன.

தொடர் விலை அதிகரிப்பு

தொடர் விலை அதிகரிப்பு

குறிப்பாக பெட்ரோல், டீசல், கேஸ் என்பது அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாகவே மாறியுள்ளது. இவற்றின் விலையானது தொடர்ந்து அதிகரித்து வருவது, சாமனிய மக்கள் மத்தியில் மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது. உதாரணத்திற்கு கடந்த பிப்ரவரி மாதத்தில் 700 ரூபாயாக இருந்த சிலிண்டர் விலை தற்போது 900 ரூபாயாக அதிகரித்துள்ளது.

தற்போதைய விலை நிலவரம்
 

தற்போதைய விலை நிலவரம்

இன்னும் தெளிவாக சொல்லப்போனால் நடப்பு ஆண்டில் மட்டும் கேஸ் சிலிண்டர் விலை 285 ரூபாய் அதிகரித்துள்ளது.

  • டெல்லியில் விலை - ரூ.884.50
  • சென்னையில் விலை - ரூ.900.50
  • பெங்களூருவில் விலை - ரூ.887.50
  • ஹைத்ராபாத்தில் - ரூ.937
  • திருவனந்தபுரம் - ரூ894
  • பாட்னாவில் - ரூ.983
  • ஜெய்ப்பூரில் - ரூ.888.50 ஆக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மக்களுக்கு கஷ்டம்

மக்களுக்கு கஷ்டம்

இது நாட்டில் அடித்தட்டு பிரிவினை சேர்ந்த மக்களுக்கு இது பெரும் அழுத்தத்தினை கொடுக்கலாம். ஏனெனில் கடந்த மே மாதத்தில் அரசு எல்பிஜி மானியத்தினையும் நீக்கியது. ஆக இதன் மூலம் சிலிண்டர்களுக்கு கிடைத்து வந்த ஆதரவும் தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் சாமனிய மக்கள் சிலிண்டர் விலை அதிகரித்தாலும், அவற்றிற்கு எந்த மானியமும் கிடைக்காது. இதனால் லட்சக்கணக்கான மக்கள் மேலும் பாதிக்கப்படுகின்றனர்.

தேவை குறையலாம்

தேவை குறையலாம்

தொடர்ச்சியான அதிகரித்து வரும் சமையல் எரிவாயு தேவையினை குறைக்கலாம் என நிபுணர்கள் கூறுகின்ரனர். மாநில அரசுகளின் சில தகவல்கள் எல்பிஜி விற்பனையானது குறைந்து விட்டதாக கூறியுள்ளது. அரசின் மானிய சலுகைகளும் கிடைக்காத இந்த சூழலில், ஏழை எளிய மக்கள் பலரும் அதிக செலவு செய்யும் நிலைக்கு தள்ளபப்ட்டுள்ளனர். சிலர் மின்சார அடுப்பு, வேறு வகையான வணிக ரீதியிலான எரிவாயு குழாய் மூலம் பயன்பெறலாம்.

வறுமையின் கீழ் உள்ள மக்கள்

வறுமையின் கீழ் உள்ள மக்கள்

ஆனால் இது ஒரு சிறு தரப்பு மட்டுமே. கிராமப்புறங்களில் இதன் தாக்கம் இன்னும் கடுமையாக இருக்கும். இதனால் இனி ஏழை எளிய மக்கள் பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தினை நாடுவதையும் குறைக்கலாம். இது மேல்தட்டு மக்களுக்கும் இதனால் பாதிப்பு என்றாலும் ஏற்கனவே கொரோனாவினால் மோசமாக பாதிக்கபட்டு, வறுமை நிலைக்கு தள்ளப்பட்டுள்ள மக்கள் மேற்கொண்டு, இன்னும் மோசமான நிலைக்கே தள்ளப்படுவர் என மக்கள் மத்தியில் கருத்துகள் நிலவி வருகின்றன.

ட்விட்டரில் பயனர்கள் கருத்து?

ட்விட்டரில் பயனர்கள் கருத்து?

இது குறித்து சமூக வலைதளங்களில் பலவிதமாக கருத்துகள் நிலவி வருகின்றன. அதில் ஒரு பயனர் நம் நாட்டில் எது நடந்தாலும் அதிகம் பாதிப்படுவது நடுத்தர வர்க்கமும், ஏழை மக்களும் தான். மற்றவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. அவர்கள் செய்வதை செய்து கொண்டு தான் இருக்கின்றனர். மற்றவர்கள் கஷ்டத்தினை அனுபவித்துக் கொண்டு இருக்கிறார்கள். எதுவும் மாறப்போவதில்லை என சுட்டிக் காட்டியுள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: lpg எல்பிஜி
English summary

Cooking Gas price hiked by Rs.25 for 3rd straight month

Gas price latest updates..Cooking Gas price hiked by Rs.25 for 3rd straight month
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X