கொரோனா லாக் டவுனில் பணப் புழக்கம் குபீர் அதிகரிப்பு!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: கொரோனா வைரஸ் பிரச்சனை, இந்த 2020-ம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து, இந்திய பொருளாதாரத்தில் பல மாற்றங்களைக் கொண்டு வந்து கொண்ட்ஏ இருக்கிறது.

 

உதாரணத்துக்கு வீட்டில் இருந்தே வேலை பார்பதைச் சொல்லலாம். அதே போல, மக்கள் பணத்தை (Cash) நோக்கி ஓடுவதும், இந்த கொரோனா காலத்தில் அதிகரித்து இருப்பதாகச் செய்திகள் வெளியாகி இருக்கின்றன.

இதை சில தரவுகள் வழியாக நம்மால் பார்க்க முடிகிறது. இப்படி மக்கள் பணத்தை நோக்கி ஓடுவதால், கரன்சி டூ ஜிடிபி ரேஷியோ, டீமானிட்டைசேஷனுக்கு முந்தைய அளவான 12 சதவிகிதத்தை நோக்கி அதிகரித்துக் கொண்டு இருப்பதாக, மத்திய் ரிசர்வ் வங்கி, தன் 2019 - 20 (ஜூன் - ஜூலை) ஆண்டு அறிக்கையில் சொல்கிறது.

பணப் புழக்கம் (Currency in Circulation)

பணப் புழக்கம் (Currency in Circulation)

கடந்த 31 மார்ச் 2020 கால கட்டத்தில் இந்தியாவில் 24.5 லட்சம் கோடி ரூபாய் தான் பணப் புழக்கம் இருந்தது. ஆனால் கடந்த 14 ஆகஸ்ட் 2020 அன்றைய நிலவரப்படி, இந்தியாவின் பணப் புழக்கம் 26.9 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்து இருக்கிறதாம். ஆக பணப் புழக்கம் 10 % நறுக்கென அதிகரித்து இருக்கிறது.

மக்கள் கையில் இருக்கும் பணம் (Currency Held with Public)

மக்கள் கையில் இருக்கும் பணம் (Currency Held with Public)

மக்கள் அதிகம் ரொக்கப் பணத்தை விரும்புகிறார்கள் என்பதற்கு, இன்னொரு தரவும் கிடைத்து இருக்கிறது. மக்கள் கையில் இருக்கும் பணம் கடந்த 28 பிப்ரவரி 2020-ல் 11.3 சதவிகிதமாக இருந்தது. மார்ச் 2020 முடிவில் 14.5 சதவிகிதமாக அதிகரித்தது. தற்போது ஜூன் 2020 கால கட்டத்தில் 21.3 சதவிகிதமாக அதிகரித்து இருக்கிறது.

யூ பி ஐ பணப் பரிமாற்றம்
 

யூ பி ஐ பணப் பரிமாற்றம்

இப்படி, மக்கள் ஒரு பக்கம் ரொக்க பணத்தை நோக்கி ஓடுகிறார்கள் என்றால், அதற்கு நேர் மாறாக, யூ பி ஐ பணப் பரிமாற்றங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டு இருக்கிறது. கடந்த மாதத்தில் மட்டும் யூ பி ஐ வழியாக சுமார் 150 கோடி பணப் பரிவர்த்தனைகள் நடந்து இருக்கிறதாம்.

பன்னாட்டு நிதியம்

பன்னாட்டு நிதியம்

இந்தியாவைப் போலவே, பிரேசில், ரஷ்யா, சைல், துருக்கி போன்ற வளரும் நாடுகளிலும், அமெரிக்கா, இத்தாலி, ஜெர்மனி, பிரான்ஸ் போன்ற வளர்ந்த நாடுகளிலும் பணப் புழக்கம் (Currency in Circulation) அதிகரித்து இருப்பதாக பன்னாட்டு நிதியத்தின் (International Monetary Fund) தரவுகள் சொல்கின்றன.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Currency in circulation and currency held with public increased since lockdown

In indian economy, again cash starts to dominate more. Currency in circulation and currency held with public increased since lockdown announcements.
Story first published: Wednesday, August 26, 2020, 14:29 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X