வட்டியில்லா கடன், Buy Now Pay Later திட்டத்தால் உண்மையில் மக்களுக்கு லாபமா..! #Diwali

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தீபாவளி பண்டிகை எந்த அளவிற்கு மகிழ்ச்சியை அளிக்கிறதோ அந்த அளவிற்குக் கூடுதல் செலவுகளையும் கொடுக்கிறது, ஆமாம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையில் அனைவருக்கும் புதிய ஆடை, இனிப்பு கார தின்பண்டங்கள், பட்டாசு என அடுக்கிக்கொண்டே போகலாம்.

தீபாவளி பண்டிகைக்கான ஷாப்பிங் நாடு முழுவதும் மக்கள் துவங்கியுள்ள நிலையில், தற்போது சந்தையில் மிகவும் பிரபலமாக இருக்கும் ஜீரோ காஸ்ட் ஈஎம்ஐ மற்றும் Buy Now Pay Later திட்டத்தில் இருக்கும் பிரச்சனைகளை முழுமையாகத் தெரிந்துகொண்டு அதன் பின்பு பொருட்களை வாங்க வேண்டியது கட்டாயமாகியுள்ளது.

தீபாவளி ஷாப்பிங் துவங்கியாச்சா.. கடன் வலையில் சிக்கிக்கொள்ளாதீர்கள்.. முதல்ல இதைப் படிங்க..! தீபாவளி ஷாப்பிங் துவங்கியாச்சா.. கடன் வலையில் சிக்கிக்கொள்ளாதீர்கள்.. முதல்ல இதைப் படிங்க..!

காரணம், இதில் பல முக்கியப் பிரச்சனைகளும் கட்டணங்களும் உள்ளது.

ஜீரோ காஸ்ட் ஈஎம்ஐ

ஜீரோ காஸ்ட் ஈஎம்ஐ

தீபாவளி பண்டிகை ஷாப்பிங் ஆன்லைன் மற்றும் ஆப்லைன் சந்தையில் இந்த வாரம் உச்சத்தைத் தொட்டு இருக்கும் நிலையில் போதுமான பணம் இல்லாதவர்கள் அதிகம் பயன்படுத்தும் திட்டமாக ஜீரோ ஈஎம்ஐ சேவை உள்ளது.

விட்டியில்லா கடன்

விட்டியில்லா கடன்

இந்த ஜீரோ காஸ்ட் ஈஎம்ஐ திட்டம் மூலம் ஒருவர் எவ்விதமான கூடுதல் கட்டணமும் இல்லாமல் மாத தவணை அடிப்படையில் பொருட்களை வாங்கலாம். ஆனால் உண்மையில் அப்படியில்லை, இதில் பல கட்டணங்கள் உள்ளது, இதனால் வாங்கப்படும் பொருளைச் சந்தை விலையை விடவும் கூடுதலான தொகைக்கு வாங்க வேண்டிய நிலை உள்ளது.

சேவை கட்டணம்

சேவை கட்டணம்

ஜீரோ காஸ்ட் ஈஎம்ஐ சேவைத் தற்போது நாட்டின் பெரும்பாலான ரீடைல் கடைகளிலும், தளத்திலும் கிடைத்து வருகிறது. இந்தச் சேவை அளிக்கும் பல ரீடைல் நிறுவனங்கள் பிராசசிங் கட்டணத்தை வசூலிக்கிறது, சில வங்கிகளும் இந்த ஜீரோ காஸ்ட் ஈஎம்ஐ சேவைக்குப் பிராசசிங் கட்டணத்தை வசூலிக்கிறது. இது பொருட்களின் விலையை உண்மையிலேயே உயர்த்துகிறது என்றால் மிகையில்லை

அபராத கட்டணம்

அபராத கட்டணம்

இதேபோல் ஜீரோ காஸ்ட் ஈஎம்ஐ சேவையைப் பயன்படுத்தும் போது ஒருவர் உரிய நேரத்தில் பணத்தை முழுமையாகச் செலுத்த வேண்டும், இல்லையெனில் அபராதம் செலுத்த வேண்டும், இதுமட்டும் அல்லாமல் இந்தக் காலதாமதமாகப் பணத்தைச் செலுத்தியதற்காக நம்முடைய கிரெடிட் ஸ்கோரை பெரிய அளவில் பாதிக்கும்.

இது எதிர்காலத்தில் நீங்கள் வாங்கும் வீடு மற்றும் கார் லோன் கிடைப்பதில் பெரும் தடையாக இருக்கும்.

Buy Now Pay Later திட்டம்

Buy Now Pay Later திட்டம்

இந்தியா முழுவதும் தற்போது வங்கிகள் முதல் பின்டெக் நிறுவனங்கள் வரையில் சிறிய தொகை கொண்ட பர்சனல் லோன்-ஐ Buy Now Pay Later திட்டம் மூலம் ஷாப்பிங் செய்வதற்காக அளிக்கப்படுகிறது.

வட்டி உள்ளது

வட்டி உள்ளது

இந்தத் திட்டத்தில் நீங்கள் வாங்கும் பொருட்களுக்கான தொகைக்கு வட்டி உள்ளதை மறந்துவிடாதீர்கள், ஆனால் வாடிக்கையாளர்களைக் கவர வேண்டும் என்பதற்தாக Buy Now Pay Later திட்டம் பயன்படுத்துவோருக்கு அதிகளவிலா கேஷ்பேக் மற்றும் loyalty benefits கொடுக்கப்படுகிறது.

தீபாவளி பண்டிகை

தீபாவளி பண்டிகை

தீபாவளி பண்டிகை காலத்தில் தேவையான பொருட்களை வாங்க பணம் இல்லாதவர்கள் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் காரணத்தால் பல பின்டெக் நிறுவனங்கள் Buy Now Pay Later திட்டத்தின் கீழ் புதிய வாடிக்கையாளர்களைப் பெற மிகவும் தீவரமாக இயங்கி வருகிறது.

14 முதல் 45 நாட்கள்

14 முதல் 45 நாட்கள்

Buy Now Pay Later திட்டத்தின் கீழ் ஒரு வாங்கும் பொருட்களுக்கான தொகையைக் கடனாகப் பெற முடியும், ஆனால் தத்தம் தொகையை வட்டியுடன் சேர்த்து 14 முதல் 45 நாட்களுக்குள் செலுத்த வேண்டும். இல்லையெனில் ஈஎம்ஐ-ஆக மாற்றிச் செலுத்தலாம்,

ஈஎம்ஐ

ஈஎம்ஐ

நீங்கள் செலுத்தும் ஒவ்வொரு ஈஎம்ஐ-க்கும் வட்டியுடன் சேர்த்துப் பணத்தைச் செலுத்த வேண்டும். பேமெண்ட்-ஐ உரிய நாளில் செலுத்தவில்லை எனில் அதிகப்படியான அபராதம் விதிக்கப்படுகிறது. கிட்டதட்ட கிரெடிட் கார்டு திட்டத்தைப் போலவே இந்த Buy Now Pay Later திட்டம் இயங்குகிறது.

பிளிப்கார்ட்

பிளிப்கார்ட்


உதாரணமாக இந்தியாவின் மிகப்பெரிய ஈகாமர்ஸ் தளமாக விளங்கும் பிளிப்கார்ட்-ம் இதுபோன்ற தேவையை Flipkart Pay Later பெயரில் வழங்குகிறது. இத்திட்டத்தில் ஈஎம்ஐ அல்லது மொத்த தொகையைத் தாமதமாகப் பணத்தைச் செலுத்தினால் 600 ரூபாயை அபராதமாக வசூலிக்கப்படுகிறது.

அதிகக் கட்டணம்

அதிகக் கட்டணம்

இதேபோல் பகுதி ஈஎம்ஐ தொகை அதாவது partial payment மட்டும் செலுத்தினால் convenience feeஆக 475 ரூபாய் செலுத்த வேண்டும். மீதமுள்ள தொகை அடுத்த மாத ஈஎம்ஐ உடன் சேர்க்கப்படும், அப்போது வட்டியும் உயரும். இதனால் நீங்கள் வாங்கும் பொருட்களின் விலையும் உயரும்.

முதல் முறை வாடிக்கையாளர்கள்

முதல் முறை வாடிக்கையாளர்கள்

முதல் முறையாக Buy Now, Pay Later திட்டம், ஜீரோ காஸ்ட் ஈஎம்ஐ பயன்படுத்தி முதல் முறையாகப் பொருட்களை வாங்குவோர் முழுமையாக இத்திட்டம் குறித்துத் தெரியாமல் பயன்படுத்தும் காரணத்தால் அதிகளவில் கடனிலும், அபராத தொகையிலும் சிக்கிக் கொள்கின்றனர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Diwali Shopping: bumps in zero-cost EMI, 'Buy Now, Pay Later' schemes

Diwali Shopping: bumps in zero-cost EMI, 'Buy Now, Pay Later' schemes
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X