டிக் டாக் மூலம் எப்படி சம்பாதிக்கலாம்.. விளக்கம் இதோ..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி : பிறந்த குழந்தை முதல் நாட்டின் எல்லை வரை பரந்து கிடக்கும் டிக் டாக் என்றால் அனைவருக்கும் தெரிந்திருக்கும். பட்டி தொட்டியெல்லாம் பரவிக் கிடக்கும் இந்த சமூக வலைதளத்திற்கு இன்றைய இளைஞர்கள் அடிமைகள் என்றால் அது மிகையல்ல.

ஒரு வேளை சாப்பாடு இல்லாமல் கூட இருந்து விடுவார்கள். ஆனால் டிக்டாக் பயன்படுத்தாத இளைய தலைமுறையினர் வெகு குறைவே.

அதிலும் இன்றைய காலகட்டத்தில் வயதான பாட்டிகள் கூட, இதனால் ஈர்க்கப்பட்டு டிக் டாக்கில் தங்களது வீடியோக்களை பதிவேற்றம் செய்து வருகின்றனர். அதை அணுதினம் கண்கூடாக பார்க்கவும் முடிகிறது.

டிக்டாக் பயன்பாடு அதிகரிப்பு
 

டிக்டாக் பயன்பாடு அதிகரிப்பு

ஒரு சிறந்த பொழுதுபொக்கு அம்சமாக பயன்படுத்தப்பட்டு வந்த இந்த செயலி, தற்போது வருமானத்தினை பெருக்கவும் வழி வகுத்துள்ளது. Tik Tok ஆப் பற்றி சொல்லித் தெரிய வேண்டியதில்லை. ஆடல், பாடல், டப்மாஷ் என பலரும் இதில் மூழ்கி விடுகின்றனர். அதிலும் ஆடல் பாடலுடன் சேர்த்து வருமானம் என்றால் கசக்கவா போகிறது. யார் தான் வேண்டாம் என்று சொல்வார்கள். இதனாலேயே டிக் டாக் செயலிக்கு உறுப்பினர்கள் நாளுக்கு நாள் கூடிக் கொண்டே செல்கிறார்கள்.

எந்தெந்த துறையில் வீடியோ

எந்தெந்த துறையில் வீடியோ

அதிலும் பேஸ்புக் ஆகட்டும், டிவிட்டர், வாட்ஸ் அப், ஹலோ என அனைத்து சமூக வலைதளங்களிலும் டிக் டாக் வீடியோக்கள் பிரபலம் ஆகி வருகின்றன. இந்த நிலையில் ஆரம்பத்தில் ஆடல் பாடல், டப்மாஷ் என்று, இருந்த இந்த தளம், தற்போது சமையல் குறிப்பு, மருத்துவ குறிப்பு, அழகு குறிப்பு, செய்திகள், விளையாட்டும், கல்வி, பயணம் என பல்வேறு கோணங்களில் களைகட்டி வருகிறது.

வருமானம் எப்படி

வருமானம் எப்படி

மேற்கூறியவற்றில் இது பற்றிய வீடியோக்களை பதிவேற்றம் செய்யப்பட்ட பின், அதை அதிக நபர்கள் பின்பற்றும் போது நமது வருமானமும் அதிகரிக்கும். மிக அதிகளவில் மக்களை ஈர்க்கக்கூடிய வீடியோ பகிர்வு தளர்வுகளில் ஒன்றான இது, உள்ளடக்க நுகர்வுக்கான ஒரு ஊடகம் அல்ல. இது விளம்பரங்களூக்கு மட்டும் அல்ல. வருவாயை பெறுவதற்கும் உதவுகின்றன. உங்களின் வீடியோ நீங்களே சொந்தமாக தயாரித்த ஒரு பிராண்டுக்காக இருக்கலாம். இதே பொழுதுபோக்கு என்றால் மக்களுக்கு பிடித்தாற்போல் இருக்க வேண்டும். இதை எந்த அளவு பயனர்கள் பகிர்கிறார்களே அந்தளவுக்கு, உங்களுக்கு பயன்.

ஸ்பான்சர் பிராண்டுகளையும் டெவலப் செய்யலாம்
 

ஸ்பான்சர் பிராண்டுகளையும் டெவலப் செய்யலாம்

கடந்த மூன்று நாட்களில் மட்டும் இந்த செயலி 2 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களைப் பெற்றுள்ளதாம். மேலும் பிராண்ட் விளம்பரங்கள் மற்றும் ஸ்பான்சர்ஷிப்களுக்காக மேம்படுத்துகிறவர்கள், என வருவாயைப் பெறுவதற்காக தங்கள் சேனல்கள் மற்றும் பக்கங்களுக்கு மக்களை திசை திருப்புகிறார்கள். என்ன இதில் டை-அப் அல்லது விளம்பரங்காளுக்கும் வசதி செய்யாததால் இவை அனைத்தையும் தாங்களாகவே செய்து கொள்ள வேண்டும்.

நல்ல வரவேற்பு

நல்ல வரவேற்பு

டிக்டாக் செயலில் உங்களை பாலோவ் செய்பவர்கள் மூலம் தான் வருவாய் அதிகரிக்கும். மேலும் படைப்பாளர்களை அணுக பிராண்டுகள் முக்கிய தேவைகளில் ஒன்றாகும். மேலும் நீங்கள் ஸ்பான்சர்களுடன் இணைந்தால் அவர்கள் உங்களுக்கு பணம் செலுத்துவார்கள். குறைந்தபட்ச எண்ணிக்கை பின்தொடர்பவர்களுக்கு பிராண்டுகள் கவனம் செலுத்துவதில்லை. மில்லியனுக்கும் அதிகமாக பின் தொடர்பவர்களை அதிகளவு பின்தொடருகிறார்கள். அதிலும் குறைந்த பட்சம் 30,000 பேருக்கு மேல் பாலோவர்ஸ் இருப்பவர்களுக்கு நல்ல வரவேற்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

சிறந்த படைப்பாளிகளுக்கு வரவேற்பு

சிறந்த படைப்பாளிகளுக்கு வரவேற்பு

இன்றைய நிலையில் ஸ்பான்சர்கள் உங்களது பிராண்டின் ஆளுமையும், ஆளுமையை பூர்த்தி செய்யும் படைப்பாளர்களைத் தேடுகின்றனர் என்று ஜாபர் ராய்ஸ், மைண்ட்ஷிப்ட் இண்டராக்டிவ் நிறுவனத்தின் அதிகாரி கூறியுள்ளார் .மேலும் இதே போல் டிக் டாக்கில் ஹேஷ்டேக் சவால்களில் பங்கேற்க சிறந்த படைப்பாளிகள் மற்றும் செல்வாக்குமிக்கவர்கள் பிராண்டுகளால் செலுத்தப்படுகிறார்கள். ஆக இங்கு திறமை மிக்கவர்கள் அதிகளவில் சம்பாதிக்க முடியும்.

எவ்வளவு சம்பாதிக்க முடியும்

எவ்வளவு சம்பாதிக்க முடியும்

பொதுவாக நல்ல ஒரு பொருளை பற்றிய வீடியோக்களை மக்களிடம் கொண்டு செல்ல மூன்று முதல் ஐந்து வீடியோக்களை பதிவு செய்கிறார்கள். அது எந்த அளவுக்கு மக்களிடம் சென்றடைகிறது. அது எந்த அளவுக்கு அந்த பிராண்டுக்கு மக்கள் மத்தியில் புகழ் பெற்றுள்ளது என்றும், இதனையடுத்து வீடியோவை பதிவு செய்பவர் சில ஆயிரம் முதல் 50,000 வரை தொகையை பெறலாம்.

பல வாடிக்கையாளர்களை அடைய சிறந்த செயலி

பல வாடிக்கையாளர்களை அடைய சிறந்த செயலி

இதில் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவெனில், இந்த டிக்டாக் செயலி ஆப்பில் சூப்பர் ஆக்டிவாக இருக்கும் மில்லியன்களில் நிறைய பேர் உள்ளனர். இவர்களில் 41 சதவிகித டிக் டாக் பயனர்கள் 16 முதல் 24 வயதுகுட்பட்டோர் தான் அதிகம். மேலும் மற்ற சமூக தளங்களுடன் ஒப்பிடும்போது, ஆயிரக்கணக்கான பர்வையாளர்களை அடைய டிக்டாக் ஒரு சிறந்த வழியாகும்.

கல்விக்கு முக்கியத்துவம் பெற்று வருகிறது

கல்விக்கு முக்கியத்துவம் பெற்று வருகிறது

இந்தியாவைப் பொறுத்தவரையில் 200 மில்லியனுக்கும் அதிகமானவர்களை கொண்ட ஒரு மாறுபட்ட பயனர்களைக் கொண்டுள்ளது. இது அடுக்கு 1 மற்றும் 2, மூன்று அடுக்கு நகரங்களிலும் பரவியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்கு முன்பு வரை இசை, நடனம், பயணம் மற்றும் DIY போன்றவற்றிக்கு முக்கியத்துவம் பெற்று வந்த நிலையில், அண்மையில் கல்விக்கும் (#EduTok) முதன்மையாக இருப்பதாக கூறப்படுகிறது.

திறமைக்கு பணம்

திறமைக்கு பணம்

கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட #EduTok, இன்று வரை 52.7 பில்லியனுக்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது. பொழுதுபோக்கை தவிர தற்போது மாறுபட்ட விகிதத்தில் கல்வியில் கவனம் அதிகரித்து வருவதும் குறிப்பிடத்தக்கது. ஆக ஒருவர் தங்கள் அறிவைப் பயன்படுத்தி இதில் எப்படி வேண்டுமானலும் சம்பாதிக்க முடியும். திறமையும், பணபலமும் இருப்பின், நீங்களே சொந்தமாக வீடியோக்களை எடுத்தும் சம்பாதிக்கலாம். இல்லையேல் ஸ்பான்சர்ஷிப் மூலம் சம்பாதிக்க முடியும். எதற்கும் உங்களது ஈர்ப்பும் திறமையும் தான் காரணம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Do you want to make more money from Tik Tok? read here

One of the most sharing video app tik tok, now given some profits. it will identify your activities. There is in lot of chances to make good money.
Story first published: Thursday, November 21, 2019, 18:00 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Goodreturns sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Goodreturns website. However, you can change your cookie settings at any time. Learn more