உங்க வங்கி கணக்கில் 436 ரூபா மாயமா..? பதறாதீங்க..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சைபர் அட்டாக் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் நம்முடைய வங்கி கணக்கின் விபரங்களை மிகவும் பாதுகாப்பாக வைக்க வேண்டியது கட்டாயம்.

இது மட்டும் அல்லாமல் வெளிநாடுகளில் இருந்து இந்திய நிறுவனங்களின் மீது சைபர் அட்டாக் செய்யப்படுவது போல் இந்தியாவில் பல மோசடி கும்பல் வங்கி கணக்கில் இருக்கும் பணத்தைப் பல நூதன முறையில் திருடி வருகிறது.

இந்த நிலையில் அனைவரும் தங்களது வங்கி கணக்கின் விபரங்களை அவ்வப்போது செக் செய்ய வேண்டியது கட்டாயமாகியுள்ளது.

இந்த நிலையில் இந்தியாவில் பலரின் வங்கி கணக்கில் இருந்து 436 ரூபாய் டெபிட் செய்யப்பட்டு உள்ளதா என்பதைக் கவனிங்க, அப்படிச் செய்யப்பட்டு இருந்தால் பயப்பட வேண்டாம். பலர் இந்த 436 ரூபாய் டெபிட் செய்யப்பட்டதைக் கண்டு பயந்துள்ளனர்.

Cyber Attack: வெறும் 3 மாதத்தில் 18 மில்லியன் சைபர் தாக்குதல்கள்..! Cyber Attack: வெறும் 3 மாதத்தில் 18 மில்லியன் சைபர் தாக்குதல்கள்..!

பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா

பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா

இந்திய மக்கள் அனைவருக்கும் காப்பீட்டு சேவையை வழங்குவதற்காகப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு 2015 இல் பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா (PMJJBY) மற்றும் பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா (PMSBY) ஆகியவற்றை அறிமுகப்படுத்தியது.

ப்ரீமியம் தொகை

ப்ரீமியம் தொகை

பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா (PMJJBY) திட்டம் 18 முதல் 50 வயது வரை உள்ள அனைவருக்கும் கிடைக்கும். இந்தத் திட்டத்திற்கான வருடாந்திர ப்ரீமியம் தொகை அவர்களின் வங்கிக் கணக்கில் இருந்து ஆட்டோமெட்டிக் டெபிட் முறை கொண்டு இயக்கப்படுகிறது.

2 லட்சம் ரூபாய்

2 லட்சம் ரூபாய்

பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா திட்டத்தின் கீழ் 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான ஆயுள் காப்பீட்டுத் திட்டம் அளிக்கப்படுகிறது. ஜூன் 1 முதல் மே 31 வரையிலான ஒரு வருட காலத்திற்கு இத்திட்ட காலமாக இருக்கும் நிலையில் ஒவ்வொரு வருடமும் புதுப்பிக்கப்பட வேண்டும். இந்தத் திட்டத்தின் ரிஸ்க் கவரேஜ் 2 லட்சம் ரூபாய் என்பதால் காப்பீடு செய்யப்பட்டவர் இறந்தால் இத்தொகை அளிக்கப்படும்.

மே 31 அல்லது அதற்கு முன்

மே 31 அல்லது அதற்கு முன்

இந்தத் திட்டத்திற்காக விண்ணப்பம் செய்தவர்கள் வங்கி கணக்கில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் மே 31 அல்லது அதற்கு முன் அந்த வருடத்திற்கான பிரீமியம் தொகையான 436 ரூபாயாக ஆட்டோ டெபிட் செய்யப்படும்.

ஆட்டோ டெபிட் நிறுத்த வேண்டுமா..?

ஆட்டோ டெபிட் நிறுத்த வேண்டுமா..?

நீங்களும் இத்திட்டத்தைப் பெற்று இருந்தீர்கள் எனில் உங்கள் வங்கி கணக்கில் இருந்து 436 ரூபாய் ஆட்டோ டெபிட் செய்யப்பட்டு இருக்கலாம், அல்லது இனி வரும் நாட்களில் செய்யப்படும். இதைத் தடுக்க வேண்டுமா..?

ஆட்டோ டெபிட்

ஆட்டோ டெபிட்

இந்தத் திட்டத்தை லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் மற்றும் அனைத்து பிற ஆயுள் காப்பீட்டாளர்கள் இணைந்து வழங்குகிறார்கள். 2015 அறிமுகம் செய்யப்பட்ட திட்டத்தை உங்களால் தொடர முடியாவிட்டாலோ அல்லது விருப்பம் இல்லாவிட்டாலோ, உங்கள் வங்கிக் கணக்கிலிருந்து வருடாந்திர ஆட்டோ டெபிட் செய்யும் செயல்முறையை நிறுத்திக்கொள்ளலாம்.

வங்கியின் கிளை

வங்கியின் கிளை

இதற்கு, PMJJBY திட்டத்துடன் இணைக்கப்பட்டுள்ள உங்க கணக்கின் வங்கியின் கிளைக்குச் செல்ல வேண்டும். வங்கிக்கு சென்ற உடன் இதற்கான படிவத்தைப் பூர்த்திச் செய்து வங்கி அதிகாரிகளிடம் கொடுத்தாலே போதுமானது. இதை ஆன்லைனில் செய்ய முடியாது என்பது வருத்தமான செய்தி.

வங்கி கணக்கு

வங்கி கணக்கு

இதே நேரதத்தில் சரியான நேரத்தில் பணம் செலுத்தவில்லை என்றாலும் கூட உங்கள் பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா பாலிசி தானாகவே ரத்துச் செய்யப்படும். இத்திட்டம் மூலம் பலன் அடைய வேண்டும் என நினைவில் வைத்திக்கொள்ள வேண்டும்.

நிதி பற்றாக்குறை

நிதி பற்றாக்குறை

உதாரணமாக உங்கள் வங்கிக் கணக்கில் இத்திட்டத்திற்கான ப்ரீமியம் தொகைக்கு டெபிட் செய்யத் தேவையான நிதி இல்லாத பட்சத்தில், பிரீமியத்தைத் தானாக டெபிட் செய்வது சாத்தியமில்லை, இதன் விளைவாகப் பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா ரத்துச் செய்யப்படும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Does your BANK account got deducted 436 rupees? Know why? PM Jeevan Jyoti Bima Yojana

Does your BANK account got deducted 436 rupees? Know why? PM Jeevan Jyoti Bima Yojana
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X