டெல்லி: கடந்த வாரத்தில் சிறந்த 10 நிறுவனங்களில் 8 நிறுவனங்களின் சந்தை மதிப்பானது, பலத்த ஏற்றத்தினால் 1,28,503.47 கோடி ரூபாய் அதிகரித்துள்ளது. இதில் முதலிடம் வகிப்பது ஐடி துறையில் முன்னணி நிறுவனமான டிசிஎஸ் நிறுவனம் தான்.
இவ்வாறு சந்தை மதிப்பினை அதிகரித்த நிறுவனங்களில் டிசிஎஸ், இன்ஃபோசிஸ், ஹிந்துஸ்தான் யுனிலீவர் லிமிடெட், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஐசிஐசிஐ வங்கி மற்றும் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா உள்ளிட்ட நிறுவனங்களின் சந்தை மதிப்பானது அதிகரித்துள்ளது.
எனினும் ஹெச்டிஎஃப்சி வங்கி, ஹெச்டிஎஃப்சி உள்ளிட்ட நிறுவனங்கள் சந்தை மூலதனத்தில் சற்று இழப்பினை சந்தித்துள்ளன.

டிசிஎஸ் தான் டாப்
இதில் டிசிஎஸ் நிறுவனம் 36,158.22 கோடி ரூபாய் சந்தை மூலதனத்தினை அதிகரித்து 11,71,082.67 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. டாப் 10 நிறுவனங்களில் அதிக மூலதனத்தினை சேர்ந்து பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இரண்டாவது இடத்தில் இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பானது 20,877.24 கோடி ரூபாய் அதிகரித்து, 5,90,229.35 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

ஹெச் யு எல் & ரிலையன்ஸ்
மூன்றாவது இடத்தில் ஹிந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட் நிறுவனத்தின் சந்தை மதிப்பானது 19,842.83 கோடி ரூபாய் அதிகரித்து, 5,63,767.05 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதே ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பானது 17,401.77 கோடி ரூபாய் அதிகரித்து, 12,81,644.97 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

எஸ்பிஐ & கோடக் மகேந்திரா வங்கி
இதே ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் சந்தை மூலதனம் 12,003.6 கோடி ரூபாய் அதிகரித்து, 3,30,701.48 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. ஐசிஐசிஐ வங்கியின் சந்தை மதிப்பானது 10,981.76 கோடி ரூபாயாக அதிகரித்து 4,10,775.37 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதுவே கோடக் மகேந்திரா வங்கியின் சந்தை மூலதனம் 6,301.56 கோடி ரூபாய் அதிகரித்து, 3,57,573.74 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

சென்செக்ஸ் ஏற்றம்
இதே பஜாஜ் பைனான்ஸின் சந்தை மதிப்பானது 5,236.49 கோடி ரூபாய் அதிகரித்து. 3,17,563.53 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. அதே நேரம் ஹெச்டிஎஃப்சி வங்கியின் சந்தை மூலதனம் 3,142.29 கோடி ரூபாய் குறைனந்து, 8,19,474.22 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதே ஹெச்டிஎஃப்சி-யின் சந்தை மூலதனம் 171.38 கோடி ரூபாய் குறைந்து, 4,56,569.82 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
கடந்த வாரத்தில் இரு நாட்கள் சந்தை விடுமுறை என்றாலும் சென்செக்ஸ் 1021.33 புள்ளிகள் அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.