மறுபடியுமா.. எலான் மஸ்க் அறிவிப்பால், மீண்டும் ஒரு ஷாக்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலகின் 2வது பெரிய பணக்காரராக இருக்கும் எலான் மஸ்க் 2022 ஆம் ஆண்டில் 44 பில்லியன் டாலர் முதலீடு செய்து டிவிட்டர் நிறுவனத்தை வாங்கியதன் மூலம் இவரின் கட்டுப்பாட்டில் சுமார் 6 நிறுவனங்கள் தற்போது உள்ளது.

 

டிவிட்டர் நிறுவனத்தைக் கைப்பற்றியதில் இருந்து பல அதிரடி மாற்றங்கள், கட்டுப்பாடுகள் மூலம் வர்த்தகத்தை மறுசீரமைப்பு செய்வது மட்டும் அல்லாமல் விரைவில் லாபகரமான நிறுவனமாக மாறுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதனால் எலான் மஸ் கட்டுப்பாட்டிற்கு வந்த பின்பு டிவிட்டர் 2.0 ஆக விளங்கும் என அறிவிக்கப்பட்டு இருக்கும் நிலையில் எலான் மஸ்க் மீண்டும் ஒரு புதிய நிறுவனத்தை வாங்கத் தயாராக உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இதனால் ஒட்டுமொத்த டெஸ்லா முதலீட்டாளர்களும், எலான் மஸ்க் ரசிகர்களும் அதிர்ச்சியில் உள்ளனர். இந்த முறை எலான் மஸ்க் டார்கெட் செய்வது கார்பரேட் மீடியா.

ரத்தன் டாடா: பெற்றோர் விவாகரத்து.. காதல் தோல்வி.. தனிமை வாழ்க்கை..!ரத்தன் டாடா: பெற்றோர் விவாகரத்து.. காதல் தோல்வி.. தனிமை வாழ்க்கை..!

எலான் மஸ்க்

எலான் மஸ்க்

எலான் மஸ்க் வழக்கம் போல் தனது டிவிட்டர் கணக்கில் உலாவிக்கொண்டு இருக்கும் போது, வால் ஸ்ட்ரீட் சில்வர் என்ற கணக்கில் இருந்து Substack என்னும் நிறுவனத்தை டிவிட்டர் வாங்கினால் சிறப்பாக இருக்கும் எனக் கூறினார். சற்றும் தயங்காமல் எலான் மஸ்க் தான் Substack வாங்க விரும்புவதாகத் தெரிவித்தார்.

Substack நிறுவனம்

Substack நிறுவனம்

Substack நிறுவனம் அமெரிக்கா தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் ஒரு ஆன்லைன் பிளாட்பார்ம் இந்தத் தளத்தில் பப்ளிஷிங், பேமெண்ட், அன்லிட்டிங்க்ஸ் மற்றும் டிசைன் இன்பரா போன்றவை இருப்பது மட்டும் அல்லாமல் அது அனைத்தும் சப்ஸ்கிரிப்ஷன் நியூஸ்லெட்டர் உருவாக்க உதவுகிறது. Substack 2017ல் உருவாக்கப்பட்டது, இத்தளம் எழுத்தாளர்களுக்கு டிஜிட்டல் நியூஸ்லெட்டர் அனுப்ப உதவுகிறது.

இணைப்பு
 

இணைப்பு

வால் ஸ்ட்ரீட் சில்வர் என்ற கணக்கைக் கொண்ட நபர் Substack நிறுவனத்தை டிவிட்டர் வாங்கி அதைத் தனது பிளாட்பார்ம் உடன் இருக்கமாக இணைக்கும் பட்சத்தில் சிறப்பாக இருக்கும் எனத் தெரிவித்தார். இதற்கு எலான் மஸ்க் "I'm open to the idea" என டிவிட்டரிலேயே பதில் அளித்தார்.

டிவிட்டர் + Substack

டிவிட்டர் + Substack

டிவிட்டர் + Substack மூலம் தற்போது இருக்கும் கார்பரேட் மீடியாக்களுக்குப் பெரிய போட்டியை உருவாக்க முடியும் என ஒரு டிவிட்டர் வாசகர் டிவிட் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. கிக் மெசஞ்சரின் இணை நிறுவனரான கிறிஸ் பெஸ்ட், டெவலப்பர் ஜெய்ராஜ் சேத்தி மற்றும் முன்னாள் தொழில்நுட்ப நிருபர் ஹமிஷ் மெக்கென்சி ஆகியோர் இணைந்து 2017 இல் Substack நிறுவனத்தை நிறுவினர்.

வாய்ப்புகள் இல்லை

வாய்ப்புகள் இல்லை

எலான் மஸ்க் இப்போது Substack நிறுவனத்தை வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் இல்லை, ஏனெனில் டிவிட்டரை 44 பில்லியன் டாலருக்கு வாங்கிவிட்டு, இதை வளர்ச்சிப் பாதைக்குள் திருப்புவதற்கு முன்பு அதற்காகக் கூடுதல் முதலீட்டைச் செய்யமாட்டார்.

6 நிறுவனங்கள்

6 நிறுவனங்கள்

இது மட்டும் அல்லாமல் எலான் மஸ் கட்டுப்பாட்டின் கீழ் தற்போது Tesla, SpaceX, The Boring Company, Neuralink, Twitter மற்றும் OpenAI எனக் கிட்டத்தட்ட 6 நிறுவனங்கள் உள்ளது.

பதவிகள்

பதவிகள்

இதில் எலான் மஸ்க் SpaceX இன் நிறுவனர், CEO மற்றும் தலைமை பொறியாளர், டெஸ்லா-வில் CEO மற்றும் ப்ராடெக்ட் ஆராகிடெக்ட், டிவிட்டரின் உரிமையாளர் மற்றும் CEO, The Boring Company இன் நிறுவனர், Neuralink மற்றும் OpenAI இன் இணை நிறுவனர். இதற்கிடையில், மஸ்க் டிவிட்டருக்கான புதிய தலைமை நிர்வாக அதிகாரியைத் தேடுகிறார்.

சிஇஓ பதவி

சிஇஓ பதவி

டிவிட்டர் நிறுவனத்தின் சிஇஓ பதவியைத் தான் விடத் தயார் என எலான் மஸ் கூறினாலும் அடுத்த டிவிட்டர் தலைமை நிர்வாக அதிகாரியின் கைகளில் நேரடி அதிகாரத்தை வழங்க அவர் தயாராக இல்லை. இதற்காகச் சிஇஓ பதவி யாருக்கேனும் கொடுத்தாலும் எலான் மஸ்க் மென்பொருள் மற்றும் சர்வர் குழுவை நிர்வாகம் செய்வார் என அறிவித்தார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Elon Musk ready buy SubStack company for Twitter to target corporate media

Elon Musk ready buy SubStack company for Twitter to target corporate media
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X