அமெரிக்க வங்கி மற்றும் முதலீட்டுச் சேவை நிறுவனமான சிட்டி குழுமத்தின் வர்த்தகர் ஒருவர் செய்த தவறால், ஸ்வீடன் பங்குச்சந்தை தடாலடியாகச் சரிந்து முதலீட்டாளர்கள் மத்தியில் சில நிமிடங்கள் பதற்றத்தை ஏற்படுத்தியது.
பங்குச்சந்தைகளில் எப்போதாவது அபூர்வமாக சில தவறுகள் நடக்கும். அப்படி நடக்கும் போது சில நிறுவனங்களின் பங்குகள் அதலபாதாளத்திற்குச் சென்று உடனடியாக தவறு சரி செய்யப்பட்டு பிரச்சனைக்குத் தீர்வு காணப்படும்.
எல்ஐசி ஐபிஓ: காங்கிரஸ் கேள்விக்கு மோடி அரசு பதில் அளிக்குமா..?!

சில்லறை முதலீட்டாளர்கள்
அப்படி ஒரு நிகழ்வு தான் ஸ்வீடன் பங்குச்சந்தையில் திங்கட்கிழமை நடந்துள்ளது, இதனால் சில்லறை முதலீட்டாளர்களை அதிர்ச்சி அடைந்தது மட்டுமல்லாமல் கடுப்பாகியுள்ளனர்.

சிட்டி வங்கி விளக்கம்
சிட்டி வங்கி குழுமம் அளித்துள்ள விளக்கத்தில், "தங்களது ஒரு சந்தை பங்கேற்பாளர் வர்த்தகத்தின் போது செய்த தவறால் சில நிமிடங்களில் பங்குகள் மிகப்பெரிய சரிவைச் சந்தித்தது. அது என்ன தவறு என கண்டுபிடித்து உடனடியாக சரி செய்துவிட்டோம்" என தெரிவித்துள்ளது.

என்ன நடந்தது?
ஸ்வீடன் பங்குச்சந்தை குறியீடான ஸ்டோக்ஹோல்ம் OMX -ல் சிட்டி வங்கியின் வர்த்தகர் ஒருவர் செய்த தவறால் 5 நிமிடங்களுக்கு அந்த நிறுவனத்தின் பங்குகள் 8 சதவீதம், அதாவது 315 பில்லியன் டாலர்கள் வரை சரிந்து சில்லறை முதலீட்டாளர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

நாஸ்டாக்
சிட்டி வங்கியில் ஏற்பட்டது தொழில்நுட்ப கோளாறு அல்ல. எங்களது முதன்மை பணி தொழில்நுட்ப கோளாறுகளைச் சரி செய்வதுதான். அதை தொடர்ந்து இரண்டாவதாக வெளியிலிருந்து வரும் தாக்குதல்களைச் சரி செய்வோம். இப்போது இரண்டையும் நாங்கள் சரி செய்துள்ளோம் என நாஸ்டாக் ஸ்டாக்ஹோம் செய்தி தொடர்பாளர் டேவிட் அகஸ்டசன் கூறியுள்ளார்.

பரிவர்த்தனை
மேலும் சந்தையில் ஏற்பட்ட இந்த தவறுக்கான காரணம் ஒரு சந்தை பங்கேற்பாளரால் செய்யப்பட்ட கணிசமான பரிவர்த்தனை என்பது எங்களுக்கு மிகவும் தெளிவாக தெரியவந்துள்ளது. இது கண்டிப்பாகச் சிட்டி குழுமத்திற்குப் பண இழப்பு மட்டுமல்லாமல் நற்பெயருக்கும் சேதத்தை ஏற்படுத்தும்.

விசாரணை
இப்போது இந்த தவறு எப்படி ஏற்பட்டது என்பது குறித்த விசாரணையைச் சிட்டி குழுமம் பங்குச்சந்தை குறியீட்டு நிர்வாகமும் செய்து வருகிறது. இந்த தவறு எப்படி ஏற்பட்டது, வருங்காலத்தில் இப்படித் தவறு நடக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்ற முடிவுகள் விசாரணையின் இறுதியில் எடுக்கப்படும் என கூறப்படுகிறது.