வங்கி ஊழியர்களுக்கு ஜாக்பாட்.. 3 மடங்கு அதிக பென்ஷன்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பொதுத்துறை வங்கிகளில் இருக்கும் வங்கி ஊழியர்களுக்கும் அவர்களது குடும்பத்திற்குப் பயன் அளிக்கும் வகையில் மத்திய நிதியமைச்சகம் மிக முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

மத்திய நிதியமைச்சரான நிர்மலா சீதாராமன் வங்கி ஊழியர்களின் குடும்பத்திற்கு அளிக்கப்பட்டு வரும் பென்ஷன் தொகை மிகவும் குறைவாக உள்ளதாகவும், இந்த நிலையை மாற்ற வேண்டும் என்பதற்காகப் புதிய மாற்றங்களை அறிவித்துள்ளார்.

தொடர் லாபத்தில் முதலீட்டாளர்கள்.. சென்செக்ஸ் 56,000-க்கு மேல் வர்த்தகம்..! தொடர் லாபத்தில் முதலீட்டாளர்கள்.. சென்செக்ஸ் 56,000-க்கு மேல் வர்த்தகம்..!

இந்த அறிவிப்பின் படி வங்கி ஊழியர்களின் குடும்பம் பெறும் பென்ஷன் தொகை கிட்டதட்ட 3 மடங்கு அதிகமாகிறது.

வங்கி ஊழியர்களின் பென்ஷன்

வங்கி ஊழியர்களின் பென்ஷன்

வங்கி ஊழியர்கள் இறந்த பின்பு அவர்களது குடும்ப உறுப்பினர் அதாவது நாமினிக்கு அளிக்கப்படும் பென்ஷன் தொகை ஒவ்வொரு காலகட்டத்திற்கு 15%, 20% மற்றும் 30% என்ற கட்டுப்பாடுகள் உடன் வழங்கப்படுகிறது. அதுமட்டும் அல்லாமல் அப்படிக் கொடுக்கப்பட்டும் பென்ஷன் தொகை அதிகப்படியாக 9,284 வரையில் மட்டுமே அளிக்கப்படுகிறது.

பென்ஷன் அளவீட்டை 30 சதவீதம்

பென்ஷன் அளவீட்டை 30 சதவீதம்

இந்த நிலையை மொத்தமாக மாற்ற வேண்டும் என அறிவித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், அனைவருக்கும் அனைத்து காலகட்டத்திலும் பென்ஷன் அளவீட்டை 30 சதவீதமாக இனி வரும் காலகட்டத்தில் தொடரும் என அறிவித்துள்ளார் நிதியமைச்சர்.

300 சதவீதம் உயர்வு
 

300 சதவீதம் உயர்வு

இந்த மாற்றம் மூலம் வங்கி ஊழியர்கள் இறந்த பின்பு அவர்களது குடும்ப உறுப்பினருக்குத் தற்போது அதிகப்படியாகக் கிடைக்கும் 9,284 ரூபாய் பென்ஷன் தொகை 35,000 ரூபாயாக உயரும். அதாவது பழைய அளவீட்டை விடவும் 300 சதவீதம் அதிகம். இந்தப் பென்ஷன் அளவீட்டை நிர்ணயம் செய்வதில் வங்கி ஊழியர் கடைசியாகப் பெற்ற சம்பளம் முக்கியப் பங்கு வகிக்கிறது.

10 சதவீத தொகை

10 சதவீத தொகை

இப்புதிய சலுகையை அமல்படுத்தக் கூடுதலாகத் தொகையைத் தேசிய பென்ஷன் திட்டத்திற்குச் செலுத்த வேண்டியுள்ளது. பொதுவாக வங்கி ஊழியர்களுக்கான பென்ஷன் தொகைக்கு ஊழியரின் அடிப்படை சம்பளத்தில் 10 சதவீதம் வங்கி மற்றும் ஊழியர் செலுத்த வேண்டும்.

NPS திட்டம்

NPS திட்டம்

தற்போது பென்ஷன் தொகை உயர்த்தப்பட்டு உள்ள காரணத்தால் வங்கி தரப்பில் இருந்து 14 சதவீத தொகையும், வங்கி ஊழியர்கள் தரப்பின் ஏற்கனவே இருந்த 10 சதவீத தொகையை மட்டுமே வசூலிக்கப்பட்டு NPS திட்டத்தில் செலுத்தப்படும். வங்கி நிர்வாகமே இந்தக் கூடுதல் சுமையை ஏற்கிறது.

வங்கி ஊழியர்கள் மகிழ்ச்சி

வங்கி ஊழியர்கள் மகிழ்ச்சி

இப்புதிய நடைமுறையின் கீழ் வங்கி ஊழியர்களின் குடும்பம் அதிகளவிலான நன்மை அடைவார்கள். இது வங்கி ஊழியர்கள் மத்தியில் வரவேற்பு அளிக்கப்பட்டாலும், வங்கி நிர்வாகத்திற்குக் கூடுதல் சுமையாக உள்ளது. மேலும் இப்புதிய மாற்றம் எப்போது நடைமுறைப்படுத்தப்படும் என்பது அறிவிக்கப்படவில்லை.

வங்கி ஊழியர்கள் அமைப்பு

வங்கி ஊழியர்கள் அமைப்பு

இப்புதிய அறிவிப்பைக் குறித்து அனைத்திந்திய வங்கி ஊழியர்கள் அமைப்பின் பொதுச் செயலாளர் சி.ஹெச்.வெங்கடாசலம் கூறுகையில், இத்திட்டம் ஏற்கனவே வங்கி ஊழியர்கள் மற்றும் அமைப்புகள் மத்தியில் ஒப்புதல் பெற்றவை. இந்த அறிவிப்புக்காக வங்கி ஊழியர்கள் நீண்ட காலமாகக் காத்திருக்கிறார்கள்.

60 சதவீத வங்கி ஊழியர்கள்

60 சதவீத வங்கி ஊழியர்கள்

இந்த புதிய பென்ஷன் திட்டம் பொதுத்துறை வங்கிகளில் ஏப்ரல் 2010க்கு மேல் சேர்ந்தவர்களுக்கு அளிக்கப்படும் காரணத்தால் இப்பூதிய அறிவிப்பு மூலம் 60 சதவீத வங்கி ஊழியர்கள் லாபம் அடைவார்கள் என வெங்கடாசலம் தெரிவித்துள்ளார்.

பஞ்சாப் நேஷனல் வங்கி

பஞ்சாப் நேஷனல் வங்கி

இப்புதிய பென்ஷன் அறிவிப்பு மூலம் பஞ்சாப் நேஷனல் வங்கிக்கு கூடுதலாக ஒவ்வொரு மாதமும் 10 முதல் 12 கோடி ரூபாய் அளவிலான தொகை செலவாகும் என வங்கி அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். பொதுத்துறை வங்கிகளிலேயே குறைவாக ஓய்வூதியதாரர்களைக் கொண்டுள்ள வங்கி பஞ்சாப் நேஷனல் வங்கி.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Family pensions of deceased bank employees increased more than 300 percent

Family pensions of deceased bank employees increased more than 300 percent
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X