ஜனவரி 1 முதல் இது கட்டாயம்.. இப்பவே தயாராகிக்கோங்க..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: நாடு முழுவதும் உள்ள அனைத்து சுங்கச் சாவடிகளில், ஜனவரி 1 முதல் முதல் பாஸ்டேக் கட்டண நடைமுறை கட்டாயம் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார்.

 

தேசிய நெடுஞ்சாலைகளை பயன்படுத்தும் வாகனங்களிடம் சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிப்பதற்காக, மின்னணு முறையில் கட்டணம் வசூலிக்கும் பாஸ்டேக் முறை கடந்த 2016ல் அறிமுகப்படுத்தப்பட்டது.

பாஸ்டேக் மின்னணு முறையில் அட்டைகளை, வங்கிகள், தொலை தொடர்பு நிறுவனங்கள் என பலரும் வழங்கி வருகின்றன.

பாஸ்டேக் கணக்கு

பாஸ்டேக் கணக்கு

இதை வாங்கி வாகனத்தின் முகப்பு கண்ணாடியில் ஒட்டினால் போதும், சுங்கச் சாவடியை அந்த வாகனம் கடக்கும் போது அங்குள்ள கருவி வாயிலாக, சுங்கக் கட்டணம் தானாகவே கணக்கிலிருந்து எடுத்துக் கொள்ளப்படும். அந்த வாகன உரிமையாளரின் வங்கி கணக்கில் இதனை இணைத்துக் கொள்ளலாம். அல்லது தனியாக பாஸ்டேக் கணக்கினை தொடங்கி வேண்டும் எனும்போது மொபைல் ரீசார்ஜ் செய்து கொள்ளலாம்.

ஜனவரி முதல் கட்டாயம்

ஜனவரி முதல் கட்டாயம்

இதற்கு முன்பும் இந்த பாஸ்டேக் நடைமுறை இருந்தாலும், பெரும்பாலான வாகனங்கள் கட்டணம் செலுத்தி தான் பிறகு செல்கின்றன. இதனால் டோல்கேட்டுகளில் வாகனங்கள் மைல் கணக்கில் வரிசையில் நிற்பதை பார்த்திருப்போம். இந்த நிலையில் தான் கூட்டத்தினை தவிர்க்கவும், போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும் ஜனவரி 1 முதல், பாஸ்டேக் முறையில் சுங்கக் கட்டணம் கட்டாயம் வசூலிக்க தேசிய நெடுஞ்சாலை ஆணையம் முடிவெடுத்துள்ளது.

நிதின் கட்கரி அறிவிப்பு
 

நிதின் கட்கரி அறிவிப்பு

இது தொடர்பான அறிவிப்பை இன்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வெளியிட்டுள்ளார். முன்னதாக பாஸ்டேக் கட்டணம் முறை குறித்து தமிழகத்தில் உள்ள 48 சுங்கச் சாவடிகளிலும் வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

பாஸ்டேக்கை எவ்வாறு பெறுவது?

பாஸ்டேக்கை எவ்வாறு பெறுவது?

இன்றைய காலகட்டத்தில் பாஸ்டேக் வாங்குவது மிகவும் எளிதானது. புதிய வாகனம் வாங்கும்போது, ஷோரூமிலேயே பாஸ்ட்டேக் கட்டாயம் வழங்கப்படும். பழைய வாகனங்களுக்கு, NHAI டோல் பிளாசாஸில் உள்ள பாயிண்ட் ஆஃப் சேல் (பிஓஎஸ்) இடங்களில் ஏதேனும் ஒரு புதிய பாஸ்டேக்கை வாங்கலாம். அல்லது NHAI உடன் கூட்டுள்ள, எந்தவொரு தனியார் அல்லது பொதுத்துறை வங்கிகளிடமிருந்தும் ஒருவர் நேரடியாக ஒரு பாஸ்டேக்கைப் பெறலாம். தற்போது பல வங்கிகள் இந்த சேவையை வழங்கி வருகின்றன. இது தவிர தற்போது பல யுபிஐ பேமெண்ட் மூலமும் பாஸ்டேக் வாங்கலாம்.

என்ன ஆவணங்கள்?

என்ன ஆவணங்கள்?

நீங்கள் பாயிண்ட் ஆஃப் சேல் (பிஓஎஸ்) பகுதியில், பாஸ்டேக் வாங்குகிறீர்கள் என்றால், பின்வரும் ஆவணங்களின் நகலுடன் ஒரு படிவத்தையும் சமர்ப்பிக்க வேண்டும். சரிபார்ப்புக்காக இந்த ஆவணங்களின் அசல் நகலையும் கொண்டு செல்ல வேண்டும். 1 வாகனத்தின் பதிவு சான்றிதழ் (ஆர்.சி) 2. வாகன உரிமையாளரின் சமீபத்திய பாஸ்போர்ட் அளவு புகைப்படம் 3.கே ஒய் சி ஆவணங்கள் (ஓட்டுநர் உரிமம், பான் கார்டு, பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை அல்லது ஆதார் அட்டை) தனிப்பட்ட வாகனங்கள் என்றால் மேற்கண்ட ஆவணங்கள் தேவைப்படும்,

இதற்கும் பாஸ்டேக் கட்டாயம்

இதற்கும் பாஸ்டேக் கட்டாயம்

வரும் ஏப்ரல் 1, 2021 முதல் மூன்றாம் தரப்பு வாகனக் காப்பீட்டை பெற, போக்குவரத்து துறை அமைச்சகம் பாஸ்டேக்கினையும் கட்டாயமாக்கியுள்ளது. ஆக இனி வரும் ஜனவரியில் இருந்து மின்னணு வாயிலாக பணம் செலுத்துவது கட்டாயமாக இருக்கும். இதன் மூலம் டோல் பிளாசாக்களில் தடையின்றி இனி வாகனங்கள் செல்ல ஏதுவாக இருக்கும். நல்ல விஷயம் தானே.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Fastag mandatory from January 1, 2021, Nitin gadkari

Fastag updates.. Fastag mandatory from January 1, 2021, Nitin gadkari
Story first published: Friday, December 25, 2020, 12:51 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X