இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் தற்போது சீனாவிற்கும் சீன வர்த்தகத்திற்கும் கடுமையான எதிர்ப்பு நிலவி வரும் வேளையில், வர்த்தக விரிவாக்கத்திற்காகச் சீன நிறுவனங்கள் பிற முக்கிய நாடுகளில் முதலீடு செய்யத் துவங்கியுள்ளது.
சீனாவின் முன்னணி டெக் மற்றும் ஆன்லைன் கேமிங் நிறுவனமான டென்சென்ட் தற்போது சிங்கப்பூரில் தனது வர்த்தகத்தையும் முதலீட்டையும் பெரிய அளவில் விரிவாக்கம் செய்து வருகிறது. இந்தச் சூழ்நிலையில் சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்டு இந்தியாவில் ஈகாமர்ஸ் வர்த்தகம் செய்து வரும் பிளிப்கார்ட் நிறுவனத்தில் டென்சென்ட் முதலீடு செய்துள்ளது.
இந்தியா - சீன எல்லையில் தொடர்ந்து பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது, அப்படியிருந்தும் இந்தியச் சந்தையின் வர்த்தகத்தை மறைமுகமாகக் கைப்பற்ற வேண்டும் எனத் திட்டமிட்டு பிளிப்கார்ட்-ல் முதலீடு செய்துள்ளதாகப் பார்க்கப்படுகிறது.
2.5 வருடத்தில் கோடீஸ்வரன் ஆகி இருக்கலாம்! அதானி கொடுத்த சூப்பர் வாய்ப்பு!

முதலீடு தடை
இந்திய - சீன எல்லை பிரச்சனை காரணமாக இந்தியாவில் தற்போது சீன முதலீடுகளுக்கு அதிகளவிலான கட்டுப்பாடுகளை விதிக்கப்பட்டுள்ள இந்த நிலையில், சிங்கப்பூரில் பிளிப்கார்ட் நிறுவனத்திற்காகத் திரட்டப்பட்ட முதலீட்டில் சீனாவின் டென்சென்ட் முதலீடு செய்துள்ளது இந்திய வர்த்தகச் சந்தையில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

டென்சென்ட் விரிவாக்கம்
கடந்த 5 மாத காலத்தில் சீனாவின் டென்சென்ட் நிறுவனம் இந்தியாவில் கடுமையான வர்த்தக எதிர்ப்புகளைச் சந்தித்து வரும் நிலையில், சிங்கப்பூரில்-ஐ தொடர்ந்து மலேசியா, இந்தோனேசியா, தாய்லாந்து ஆகிய நாடுகளிலும் வர்த்தக விரிவாக்கம் செய்யப் புதிய அலுவலகத்தைத் திறந்துள்ளது.

பிற சீன நிறுவனங்கள்
டென்சென்ட் நிறுவனத்தைப் போலவே அலிபாபா, பையிட்டான்ஸ் ஆகிய நிறுவனங்களும் மலேசியா, இந்தோனேசியா, தாய்லாந்து ஆகிய நாடுகளில் வர்த்தகத்தை விரிவாக்கம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.