இந்திய வர்த்தகத்தை வேறு நாட்டுக்கு மாற்றும் உலக வங்கிகள்.. ஐடி துறையில் புதிய பாதிப்பு..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவில் கொரோனா தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வேளையில் முதல் அலையில் தப்பித்த பல துறைகள் தற்போது பாதிப்பு அடை துவங்கியுள்ளது.

 

குறிப்பாக ஐடி துறை முதல் கொரோனா அலையில் எவ்விதமான பாதிப்பும் இல்லாமல் தொடர் வளர்ச்சிப் பாதையில் இருந்தது. ஆனால் 2வது அலையில் ஐடி ஊழியர்கள் வீட்டில் இருந்து பணியாற்றினாலும் பல வழிகளில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

நஷ்டத்தில் இருந்து லாபத்திற்கு திரும்பிய BSE.. ரூ.32.57 கோடி லாபம்.. டிவிடெண்டும் பரிந்துரை..!

இதனால் இந்திய ஐடி ஊழியர்களை வங்கி மற்றும் நிதியியல் சேவைகளை அளிக்கும் பல முன்னணி வங்கி நிறுவனங்கள் தற்காலிகமாகத் தனது பணிகளை வேறு நாடுகளுக்கு மாற்றியுள்ளது.

ஐடி நிறுவன ஊழியர்கள்

ஐடி நிறுவன ஊழியர்கள்

பெங்களூர், சென்னை, கூர்கான் ஆகிய பகுதிகளில் இருக்கும் ஐடி நிறுவனத்தின் ஊழியர்கள் 2வது கொரோனா அலையில் அதிகளவிலான பாதிப்புகளை எதிர்கொண்டு வரும் வேளையில் வர்த்தகம் பாதித்து வருகிறது. இதனால் இப்பகுதியில் செய்யப்படும் வேலைகளைத் தற்காலிகமாக வேறு நாடுகளுக்கு மாற்றியுள்ளது பல முன்னணி வங்கி நிறுவனங்கள்.

கொரோனா தொற்று

கொரோனா தொற்று

உலகம் முழுவதும் கொரோனா தொற்றுப் பரவி வரும் வேளையில் வங்கி சேவைகள் எந்தக் காரணத்திற்காகவும் பாதிக்கப்படக் கூடாது என்பதால் வர்த்தகத்தைத் தாமதமின்றிச் செயல்படுத்த வேறு நாடுகளுக்குத் தற்காலிகமாக மாற்றி உள்ளது.

மோர்கன் ஸ்டான்லி
 

மோர்கன் ஸ்டான்லி

அமெரிக்காவின் முன்னணி வங்கி மற்றும் முதலீட்டு வங்கியான மோர்கன் ஸ்டான்லி மும்பை, பெங்களூர் அலுவலகத்தில் சுமார் 6000 ஊழியர்கள் பணியாற்றி வருகிறார். இந்நிறுவன ஊழியர்களில் பலருக்குக் கொரோனா தொற்று ஏற்பட்டு இருந்தாலும் தொடர்ந்து வர்த்தகம் எவ்விதமான பாதிப்பும் இல்லாமல் இயங்கி வருவதாகத் தெரிவித்துள்ளது.

பிரிட்டன் வங்கி

பிரிட்டன் வங்கி

பிரிட்டன் நாட்டின் முன்னணி ரீடைல் வங்கிகளில் ஒன்று கூர்கான், சென்னை, பெங்களூரு ஆகிய பகுதிகளில் சுமார் 13,000 ஊழியர்கள் பணியாற்றி வரும் நிலையில் 10 முதல் 12 சதவீத ஊழியர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளதாகத் தெரிவித்துள்ளது. ஆனாலும் தங்களிடம் பேக்அப் இருக்கும் காரணத்தால் வர்த்தகம் பாதிப்பு இல்லாமல் இயங்குகிறது எனத் தெரிவித்துள்ளது.

கோல்டுமேன் சாச்சீஸ்

கோல்டுமேன் சாச்சீஸ்

அமெரிக்காவின் மிக முக்கியமான வங்கியாகத் திகழும் கோல்டுமேன் சாச்சீஸ் தனது பெங்களூர் அலுவலகத்தில் 6000 ஊழியர்களைப் பணியில் அமர்த்தியுள்ள நிலையில், ஊழியர்கள் மத்தியில் கொரோனா தொற்று ஏற்பட்ட காரணத்தால் 48 மணிநேரம் இந்திய வர்த்தகத்தை முடக்கிவிட்டு, லண்டனில் இருந்து இந்திய வர்த்தகப் பணிகளைச் செய்யத் துவங்கியுள்ளது.

HSBC வங்கி

HSBC வங்கி

இந்தியாவில் சுமார் 39,000 ஊழியர்களை வைத்து மிகப்பெரிய அளவில் இயங்கி வரும் HSBC வங்கியில் சுமார் 200 பேருக்கு இதுவரையில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு உள்ள நிலையில், இந்தியச் சந்தை பணிகளைத் தற்போது சீனா மற்றும் போலாந்து ஆகிய நாடுகளில் இருந்து இயக்க HSBC முடிவு செய்துள்ளது.

டாய்ச் வங்கி

டாய்ச் வங்கி

பெங்களூர் மற்றும் புனேவில் சுமார் 4000க்கும் மேற்பட்ட ஊழியர்களை வைத்து இந்தியாவில் இயங்கி வரும் டாய்ச் வங்கி கொரோனா தொற்றால் அதிகளவில் பாதிக்கப்பட்டு உள்ள நிலையில், பல்வேறு மாற்றங்கள் உடன் தொடர்ந்து இயங்கி வருவதாகத் தெரிவித்துள்ளது. இன்னும் சில முடிவுகளையும் மாற்றங்களையும் செய்யக் காத்திருப்பதாகவும் கூறியுள்ளது.

வெல்ஸ் பார்கோ வங்கி

வெல்ஸ் பார்கோ வங்கி

இந்தியாவில் கொரோனா தொற்று அதிகமாக இருக்கும் காரணத்தால் வர்த்தகத்தைப் பாதிக்காத வண்ணம் சில முக்கிய business continuity plans நிறுவனத்தில் கொண்டு வரப்பட்டு உள்ளது என் வெல்ஸ் பார்கோ நிறுவனத்தின் இந்திய நிர்வாகத் தலைவர் தெரிவித்துள்ளார்.

ஸ்டாண்டர்டு சாட்டர்ட் வங்கி

ஸ்டாண்டர்டு சாட்டர்ட் வங்கி

சுமார் 25,000 ஊழியர்களை வைத்துள்ள இந்தியாவில் டெக் முதல் வங்கியியல் சேவைகளை இந்தியா மற்றும் உலக நாடுகளுக்கு அளித்தும் வரும் வேளையில் இந்நிறுவன ஊழியர்கள் சிலருக்குக் கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ள காரணத்தால் சில முக்கியமான வர்த்தகத்தை வெளிநாடுகளுக்கு மாற்றியுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Global banks shift some operations from India to other countries as BCP Amid Covid-hit

Global banks shift some operations from India to other countries as BCP Amid Covid-hit
Story first published: Friday, May 14, 2021, 14:01 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X